Home / கட்டுரைகள் / பிரஞ்சுப் புரட்சியைப் படித்தல்

பிரஞ்சுப் புரட்சியைப் படித்தல்

fr

1. வரலாறு எழுதப்படமுடியாதது.

காலத்தின் ஒவ்வொரு கணங்களும் வௌ;வேறு பரிமாணங்கள் கொண்டவை. இடம் நேரம் மற்றும் தனிநபர்களுக்கூடாக எழுதப்படும் வரலாறு ஏதோ ஒரு குறுக்குதலுக்கூடாக நகர்வது தவிர்க்க முடியாததாகிப்போகிறது. இதில் இருநூறு வருடத்துக்கு முந்திய பிரெஞ்சுப்புரட்சி வரலாற்றை எழுதுவது என்பது மிகச் சிரமமான காரியம். அச்சுப்பதிப்பின் ஆரம்ப காலகட்டம் அது. புரட்சி பத்திரிகை வெளியீட்டை மற்றும் பத்திரிகை வாசிப்பை அதிகரித்தது உண்மையே. இருப்பினும் இன்றைய காலத்துடன் ஓப்பிடும் பொழுது தகவற் பதிவுகளின் போதாமையை நாம் உணர முடியும். அதனால் முழுமையான அறிதல் பற்றி யாரும் பேச முடியாது.

ஆனால் வரலாற்றை நீரோட்டமாகப் புரிந்துகொள்ளும் புதியமுறை பிரெஞ்சுப் புரட்சி நிகழ்ந்து ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குள் அறிமுகமானது. வரலாற்றை வெறும் சம்பவங்களாகவோ அல்லது தனிநபர்களின் சாகசங்களாகவோ மட்டும் பார்க்காமல் அதை ஒரு இயக்கமாகப் பார்க்கும் முறையை மார்க்ஸ் ஏங்கல்ஸ் முதலானவர்கள் அறிமுகப்படுத்தினர். இயங்கியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஏற்படுத்திய தாக்கத்தின் பின் வரலாற்றைக் கையாள்வதில் புதிய தெளிவு பிறந்தது. இருப்பினும் இன்றும்கூட தனிநபர்களின் சரித்திரங்களாக வரலாற்றை அணுகித் தற்போதைய அதிகாரத்தின் சமரசங்களாகத் ‘திரித்து” எழுதுவது பல வலதுசாரிய வரலாற்றாசிரியர்களின் பழக்கமாக இருக்கிறது. இன்று பிரெஞ்சுப் புரட்சி பற்றி நூற்றுக்கணக்கான நூல்கள் வந்திருப்பினும் – ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பினும் – இவற்றில் பல திரிபுகளாகவே நிகழ்கின்றன. இதனாற்தான் மீண்டும் மீண்டும் வரலாற்றின் இயங்கு போக்குகளைப் பற்றி அழுத்திப் பேசவேண்டியிருக்கிறது.

சமூக இயக்கத்தை நாம் இரசாயன விஞ்ஞானத்துக்கு அல்லது இயற்கை விஞ்ஞானத்துக்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒவ்வொரு அணுக்களும் தனித்தனியாக மட்டும் இயங்கி தன்னிச்சையாக இருப்பதில்லை. ஒன்றோடு ஒன்று உறவாடி மொத்தமாகப் பல்வேறு வடிவங்களாகப் பரிணமிப்பதால் உயிரினங்கள் உட்பட நாமறிந்த அகிலம் உருப்பெறுகிறது. இந்த மாற்றங்களின் பின்னால் பல்வேறு விசைகள் – இயற்கை விதிகள் இயங்குவதை நாமறிவோம். இயற்கையின் இந்த இயங்குவிதிகளை அறிதல் மூலம் நாம் இயற்கையின் இயங்குதன்மையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். அதனால் இயற்கையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றது பிரக்ஞையுள்ள மனித உயிரினம். இயற்கையின் பகுதியான மனித சமுதாயத்துக்கும் இயற்கையின் விதிகள் பொருந்தும். சமூக அசைவுகளுக்குப் பின்னாலும் பல்வேறு விதிகள் விசைகள் இயங்குவதை அவதானிக்க முடியும். தனிநபர்கள் ஒன்றிணைந்து அமைப்பாகுவது – சமூகத்தில் திருப்பங்கள் ஏற்படுவதற்கு பின்னால் இருக்கும் விசைகள் என்பன மனிதத் தேவைகளின் அடிப்படைகளில் இருந்தும் பல்வேறு புறவயக் காரணிகளில் இருந்தும் எழுவதை நாம் அவதானிக்கலாம். எமது தேவைகள் நிறைவடைவது உற்பத்தி முறை – உற்பத்தி சக்திகள் – கருவிகளின் வளர்ச்சியைப் பொறுத்து வேறுபடுகிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியால் எமது தேவைகளை நிவர்த்திசெய்வதும் வளர்ச்சியடைகிறது. ஆக மனிதவரலாற்றுப் பெரு நிகழ்வுகள் பல இந்த அடிப்படையைச் சார்ந்தே நிகழ்கிறது. இத்தகைய வரலாற்றுக் கண்ணோட்டமின்றிப் பிரஞ்சுப் புரட்சி வரலாற்றைப் புரிந்துகொள்வது கடினம்.

2. பிரஞ்சுப் புரட்சியின் பழைய வரலாற்று நிகழ்வு பற்றி இன்றும் ஏன் பேசப்படுகிறது?

உலகைக் குலுக்கி மனித சமுதாயத்தின் வரலாற்றையே மாற்றியமைத்த குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது பிரஞ்சுப் புரட்சி. இன்று நாம் சாதாரணமாக அனுபவிக்கும் பல உரிமைகள் வென்றெடுக்கப்பட்டதற்கு அடித்தளமிட்;டது பிரெஞ்சுப் புரட்சி. அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை, பெண்களுக்கான உரிமை, சமுக சேவைகளை அரசு வழங்கவேண்டும் என்ற கட்டாயம், துவேஷம் முதலிய மனிதரைத் தாழ்த்தும் கருத்துகளுக்கு எதிர்ப்பு, அடிமை முறை ஒழிப்பு, என பல்வேறு கோரிக்கைகள் இக்காலப் பகுதியிலேயே தோன்றின. இன்று புழக்கத்தில் இருக்கும் பல அரசியல் முறைகள் அரசியற் சொற்கள் பிரஞ்சுப் புரட்சிக் காலத்தில் தோன்றியவையே. பூர்சுவா, குட்டிப் பூர்சுவா, இடது சாரியம், வலது சாரியம், முதலான பல்வேறு சொற்கள் முறைகள் நேரடியாக பிரெஞ்சுப் புரட்சி வரலாற்றோடு தொடர்புடையவை.

இது மட்டுமின்றி மன்னராட்சிக் காலத்தின் – அதாவது நிலப்பிரபுத்துவ காலத்தின் முடிவை நிரந்தரமாக்கிய முக்கிய திருப்புமுனையை பிரஞ்சுப் புரட்சி குறித்துநிற்கிறது. பிரஞ்சுப் புரட்சிக்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்தில் மன்னராட்சிக்கெதிரான புதிய முதலாளிகளின் கிளர்ச்சி நிகழ்ந்திருந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கப் புரட்சி உலகளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் இவற்றையும் விட பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம் அதிகமாக இருந்தது. நிலப்பிரபுத்துவத்திற்கு சாவு மணி அடித்த நிகழ்வு இது என்பர்.
இது மட்டுமின்றி ஓரு புரட்சியின் நிகழ்வு பற்றிய ஆய்வுக்கு இது ஒரு வரலாற்றுப்பாடமாக இருக்கிறது. ஒரு புரட்சிகர மாற்றம் என்றால் என்ன? புரட்சி, எதிர்ப் புரட்சி, என்ற வரலாற்றசைவுகளின் பண்புகள் என்ன? அவை ஏன்? எவ்வாறு நிகழ்கிறது? போன்ற கேள்விகள் சார்ந்த ஆய்வுகளைச் செய்வதற்கான ஆய்வுகூடமாகக் கருதப்படுகிறது பிரஞ்சுப் புரட்சிக் காலகட்டம். மார்க்ஸ், உட்பட பல்வேறு அரசியற் பொருளாதார, சமூகவியல் விஞ்ஞானிகள் இக்கால கட்டத்தில் இருந்து நிறையக் கற்றுக்கொண்டிருப்பதை நாம் அவதானிக்க முடியும்.

புரட்சியின் வரலாற்றுப் பின்னணி

பொருட்களை உற்பத்தி செய்வதில் ஏற்பட்ட வளர்ச்சி – புதிய தொழிற்சாலைகளின் தோற்றம் – பாரிய மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தத்தொடங்கியிருந்தது. பல்வேறுவகைப் பொருட்களின் பரந்த விநியோகம் – அதனால் ஏற்பட்ட புதியவகைச் சந்தையின் வளர்ச்சி என்பன தொழிற்புரட்சியைச் சார்ந்து நிகழ்ந்ததை அறிவோம். விரிவடையும் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். அவர்களின் உழைப்பு நேரத்தால் அளவிடப்பட்டு சம அளவுகளாகப் பிரிக்கப்பட்டு பணத்தால் வாங்கப்பட்டது. உழைப்பின் சம அளவுகள் பணத்தின் சம அளவுகளுக்குச் சமப்படுத்தப்பட்டது. நினைத்த நேரம் யாரிடமும் உழைப்பு நேரத்தை வாங்கமுடியும் என்ற நிலையின்றி புதிய உற்பத்திமுறை வளர்ச்சியடைய முடியாத நிலையில் உழைப்பை வழங்குபவர்களின் விடுதலையை புதிய உற்பத்திமுறை அத்தியாவசியப்படுத்தியது. அதாவது உற்பத்தியின் நோக்கில் அனைவரும் சமம் என்ற சமூக உறவு முன்வந்தது. பழைய நிலப்பிரபுத்துவ முறையில் உழைப்பை வழங்குபவர் இன்னுமொருவரின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டார். நிலம் – உற்பத்தி கருவிகள் உட்பட நிலத்தில் வேலை செய்பவர்களும் மன்னரின் அல்லது நிலவுடமையாளரின் சொத்தாகக் கருதப்பட்டது. அவர்கள் எவ்வளவு உழைப்பை வழங்கினாலும் அதன் முழுப்பலனும் நிலவுடமையாளருக்குச் சென்றது. ஆனால் புதிய உற்பத்திமுறையில் முதலாளி உழைப்பாளியை வாங்காமல் அவரது உழைப்பை மட்டும் நேர அளவுகளாக வாங்கி அதற்கு நிகரான பணத்தை வழங்கினார். அப்பணத்தை வைத்துத் தன்னிச்சையாகத் தனக்குத் தேவையானதைச் சந்தையில் தொழிலாளி பெற்றுக்கொள்வதும் புதிய உற்பத்திமுறையை நிலைநாட்ட அவசியமாக இருந்தது. இதன்மூலம் மக்களின் புதிய தேவைகள் பல நிவர்த்தியாகின. உதாரணமாக சீனி போன்ற பண்டங்கள் பிரபுக்களுக்கும் மன்னர்களுக்கும் மட்டுமே எட்டும் பண்டங்களாக இருந்த முறை மாறி அனைவரும் இப்பண்டங்களைச் சந்தையிற் பெற்றுக்கொள்ளும் முன்னேற்றம் நிகழ்ந்தது. இருப்பினும் புதிய முதலீட்டாளர்கள் பலர் பழைய நிலப்பிரபுக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். அவர்களிற் பலர் பழய சலுகைகளையும் பேனிக்கொண்டு லாபம் பெருக்க முயன்றனர்.

மாற்றத்தின் பின்னணியைப் புரிந்துகொள்ளவே மேற்கண்ட சிறு விவரணையைச் செய்யவேண்டியிருந்தது. இதை இறுகிய போக்குகளாகப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பல்வேறு வகை முரண்கள் பல்வேறு வகை வடிவில் – சிக்கலான சமூக நிலவரங்களை உருவாக்கிக்கொண்டிருந்த காலப்பகுதி அது. நாம் ஒரு இரசாயனப்பரிசோதனையின் ஆரம்பக்கட்டத்தில் அப்பரிசோதனையில் ஈடுபடுத்தப்படும் பொருட்கள் காரணிகள் விசைகள் பற்றித் தெளிவாக அவதானிக்கலாம். ஆனால் இதே பரிசோதனை குறிப்பிட்ட காலம் தொடர்ந்த பிறகு அப்போது ஏற்பட்டிருக்கும் கலவையை வைத்து ஆரம்பக் கட்டத்தை அனுமானிப்பது சிரமம். அதுபோற்தான் பிரஞ்சுப் புரட்சிக் காலகட்டத்தில் பல்வேறு சமூகப் பிரிவுகள் அசைவுகள் பற்றிய நுணுக்கமான அவதானங்களை நாம் செய்யமுடியும். ஆனால் அவ்வாறு ஆரம்பித்த இயக்கங்களின் தொடர்ச்சி மருவி சிக்கல் நிறைந்த சமூக உறவுகளாக உருவாவது பற்றியும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். புதிய உழைக்கும் வர்க்கத்தினர், பூர்சுவாக்கள், குட்டி பூர்சுவாக்கள், விவசாயிகள், பிரபுக்கள் மதகுருமார் ஆகியோர்களுக்கு இடையில் போட்டிகளும் சச்சரவுகளும் உருவாகும் தவிர்க்க முடியாத நிலையை உற்பத்திச் சக்திகளின் வேகமான வளர்ச்சி உறுதி செய்தது. ஆனால் இந்த முரண்கள் எவ்வாறு கூர்மையுடன் வெளிப்பட்டன அல்லது எத்தகைய வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தின என்பதைப் பல்வேறு காரணிகள் தீர்மானித்தன. இவர்களுக்கிடையிலான முரண்கள் பகிரங்கமாக வெடிப்பதற்கான எல்லாச் சூழ்நிலையும் பிரான்சில் உருவாக்கப்பட்டது.

உற்;பத்திச் சக்திகள் முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில் நிலப்பிரபுக்கள் மதகுருமார்களின் செல்வாக்கும் அவர்களின் அமைப்புக்களின் செல்வாக்கின் பிடியும் முற்றாகத் தளர்ந்திருக்கவில்லை. அதேவேளை உழைப்பை நம்பி வாழ்ந்தவர்களுக்கென்று தனி அமைப்புகள் எதுவும் உருவாகியிருக்கில்லை. (பிரெஞ்சுப்புரட்சியைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்கென தனிப்பட்ட அமைப்புகள் கட்டும் முயற்சிகள் இங்கிலாந்தில் முதன்முதலாக முன்னெடுக்கப்பட்டது). சமூக ஒழுக்கம் சட்டம் முதலானவற்றைத் தீர்மானிப்பதை மதகுருக்களும் பிரபுக்களும் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றனர். சந்தையின் சுதந்திர இயக்கத்திற்கும் – சந்தையை முன்னிலைப்படுத்திய சமுக ஒழுங்கு சட்டங்களை உருவாக்குவதற்கும் இது பெரும் தடையாக இருந்தது. புதிய பூர்சுவா வர்க்கத்தின் ஆளுமை நீதிமன்றங்கள் நீதிபதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தன. புதிய சட்டங்களை இயற்றுதல் – நீதி விசாரணையின்றி எழுந்தமானத்துக்குத் தண்டனை வழங்காதிருத்தல் முதலிய முன்னெடுப்புகள் மன்னராட்சிக் காலத்து நடைமுறைகளை மக்கள் மத்தியில் மிகவும் பலமிழக்கச் செய்தது. இந்நடைமுறைகள் மன்னராட்சியை நேரடியாகக் கேள்விக்குள்ளாக்கியது. இங்கிலாந்தில் குரோம்வெல் என்பவர், மன்னரைச் சிரச்சேதம் செய்து அவர் தலையைக் கையிற் பிடித்துக்கொண்டு நிறுவிய பூர்சுவா அதிகாரம் ஐரோப்பா எங்கும் மன்னராட்சியை ஏற்கனவே பலமிழக்க வைத்திருந்தது. இருப்பினும் சட்டமுறை முடியாட்சி என்ற சமரசத்துடன் பிரபுக்களையும் பாராளுமன்ற அரசியல் என்ற போர்வையில் சாதாரண மக்களையும் முரண்படுதலில் இருந்து தடுத்து நிறுத்தி நவீன இங்கிலாந்து தேசியம் உருவானது. முரண்களை யுத்தம் நோக்கி நகர்த்தாத அளவில் பல்வேறு காரணிகள் அங்கு இயங்கின. ஓப்பீட்டளவில் குறைவாக இருந்த வறுமையும் ஒரு காரணம்.

இங்கிலாற்தைப் போலவே சட்டமுறை முடியாட்சியையும் பாராளுமன்ற வகை அரசியலையும் உருவாக்குவதன் மூலம் வர்க்கங்களுக்கிடையிலான அமைதியைப் பேணிவிடமுடியும் எனப் பிரான்சிலும் சில பிரபுக்களும் முதலாளிகளும் எண்ணினர். வெகுசனப் பொதுச்சபையைக் (நுளவயவநள புநநெசயட – நுவயவள புநநெசயரஒ) கூட்டியதற்கு இதுவும் காரணம். இப்பொதுச்சபை கூடியதலில் இருந்து பஸ்ரிலின் வீழ்ச்சி வரை எந்த முடிவுகளுக்கும் வரமுடியாமல் திணறியது இச்சபை.

வருமானம் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அதை எதிர்கொள்ளவது எவ்வாறு என அரசுக்குத் தெரிந்திருக்கவில்லை. 1756ல் இருந்து 1783 வரை கடும் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டது. ஏழாண்டுகளாக நிகழ்ந்த யுத்தம் (1756 -1763) அரச நிதியை மேலும் வறட்சிக்குள்ளாக்கியிருந்தது. இது அரசைப் பலவீனப்படுத்தியிருந்தது. நிதித்துறைக்குப் பொறுப்பாக இருந்த நெக்கர் (நேஉமநச) அரசு கடன் வாங்கும் முறையை அமுல்ப்படுத்தி நிதிப்பிரச்சினையை கட்டுப்படுத்த முயற்சித்தார். எவ்வளவு கடன் வாங்கினாலும் அரச வருமானத்தை அதிகரிப்பதற்குச் சாத்தியமற்ற முறையில் அரச கொள்கைகள் வகுக்கப்பட்டன. வளர்ச்சியடைந்து கொண்டிருந்த சந்தை சார்பாக விலைகளைச் சுதந்திரமாக வளரும் முதலாளிகள் தீர்மானிக்க முடியாதபடி அரசு அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தன்னிடம் வைத்திருந்தது. இதைப் பாராளுமன்றங்கள் எதிர்த்தன. அக்காலத்தில் பிரான்ஸ் பல பிரிவுகளாகப் பிரிந்து ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தனியான பாராளுமன்றங்கள் இயங்கிவந்தன (13 பாராளுமன்றங்கள் இயங்கிவந்தன). இந்தப் பிராந்தியங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அரசு படாதபாடு படவேண்டியிருந்தது. பல பாராளுமன்றங்கள் முதலாளிகள் சார்ந்து முடிவெடுக்கும் தருணங்களில் அவற்றோடு அரசர் மோதவேண்டியிருந்தது. உதாரணமாக போர்தோ பாராளுமன்றம் மே 1788ல் அரசின்; தானிய உத்தரவை அமுல்படுத்த மறுத்து சுதந்திர சந்தையை அனுமதித்தது. சந்தை முறையால் எழும் புதிய சமூக முறைக்கேற்ப சட்டதிட்டங்களை அமுல்படுத்த முயற்சித்தன பாராளுமன்றங்கள். இதை அரசு கடுமையாக எதிர்த்தது. உதாரணமாக மே மாதம் 1788ல் பாரிஸ் பாராளுமன்றம் அரசரால் இரத்துச் செய்யப்பட்டுக் கலைக்கப்பட்டது. 1770 டிசம்பரில் மிராபோ (ஆயரிநழர) சான்சிலராக பதவியேற்றதில் இருந்து அவருடன் மோதி வந்தது பாரிஸ் பாராளுமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது. சில வரலாற்றாசிரியர்கள் மிராபோவின் மோசமான வரலாற்றை மறைத்துப் பேசுவர். 1771ல் இருந்தே மிராபோவைப் பற்றி பாராளுமன்ற அரசியலில் சம்மந்தப்பட்டவர்கள் நன்கறிந்திருந்தனர். பொதுச் சபை கூட்டப்பட்டபொழுது அவர் மூன்றாம் தேசம் சார்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பொதுச்சபையில் அங்கத்தவரானார். ஆனால் முற்போக்கு சிந்தனைகள் கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு ஆதரவு இருக்கவில்லை.
பாராளுமன்றங்களுடன் மோதி நிதி நிலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில்தான் 1614களில் கூட்டப்பட்ட பொதுச்சபையை மீண்டும் கூட்டச்சொல்லி அழுத்தம் ஏற்பட்டது. 1789 மே மாதம் இந்த பொதுசன வெகுசபை கூட்டப்பட்டது. இது ஒரு மாதம்;; கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. வெகுசனப் பொதுச் சபையில் (நுளவயவநள புநநெசயட ) மூன்றாவது எஸ்டேட் பிரதிநிதிகளிடம் ஏராளமான பணமும் செல்வாக்கும் இருந்தும் அவர்களுக்கு எந்த மதிப்பும் வழங்கப்படவில்லை. தவிர இரண்டாம் எஸ்டேட் என அழைக்கப்பட்ட பிரபுக்கள் தமது நலன் சார்ந்து மிக மோசமான சட்டதிட்டங்களை ஆணவத்துடன் திணிக்க முற்பட்டனர். இதைத் தொடர்ந்து மூண்றாம் எஸ்டேட்டைச் சேர்ந்தவர்கள்கூடி தேசிய பேரவை (யேவழையெட யுளளநஅடிடல) ஒன்றை 17 ய+ன் 1789ல் உருவாக்கினர். இதை ஏற்றுக்கொள்ள அரசரும் பிரபுக்களும் மறுத்தபோதும் அவர்கள் வேறு வழியின்றி பேரவையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அடுத்த மாதம் 14 யூலை 1789 ல் பஸ்ரில்; கோட்டை கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் முற்றாக மாறியது.

இது புரட்சிகர வெடிப்பை அவசியமாக்கியது போல் வேறும் பல காரணிளும் முக்கிய பங்களித்தன. இவற்றில் பொருட்களின் விலை மற்றும் வறுமை என்ற முக்கிய இரு காரணிகளும் குறிப்பிடப்பட்டாக வேண்டும்.

மக்களும் அவர்களின் பிரிவுகளும்

1789 களில் பிரான்சில் ஏறத்தாழ 25 மில்லியன் மக்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சனத்தொகையில் ஏறத்தாழ 400 000 பிரபுக்களும் 100 000 பேர் மதகுருமார்களாகவும் இருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த அரைமில்லியன் சனத்தொகை பெரும்பான்மையான நிலத்தைத் தமக்குச் சொந்தமாக வைத்திருந்தது மட்டுமின்றி மிகுதி மக்களின் வாழ்கை முறையையும் தீர்மானிக்க முயன்றது. பிரான்சின் ஐந்தில் ஒரு நிலப்பகுதி மதகுருமார்களின் கட்டுப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மிகுதி 24.5 மில்லியன் மக்கள் மிகப்பெரும் வறுமைக்குள் தள்ளப்பட்டிருந்தனர். 1790ல் நடந்த கணக்கெடுப்பின்படி சனத்தொகையில் 3 மில்லியன் பேர் பிச்சை எடுத்து அன்றாடவாழ்க்கையை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். 10 மில்லியன் மக்களுக்கு வாழ்க்கை நடத்த மற்றவர்களின் உதவி – அல்லது அரசின் உதவி தேவைப்பட்டது.

பிரபுக்களுக்கும் மதகுருமார்களுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தன. அவர்களின் உடை, வாழ்க்கை முறை என்பவற்றில் வேறுபாடுகள் இருந்தன. பிரபுக்கள் குய்லோத் எனப்பட்ட முழங்கால்வரை இறுகிய காற்சட்டை அணிந்தனர். மதகுருக்கள் குருக்களுக்குரிய மேலாடை அணிந்தனர். தமது வர்க்கத்துக்குள்ளேயே பெரும்பாலும் தொடர்ந்து திருமணம் செய்ததால் பிரபுக்கள் ஒரு வகை உயர் சாதியமைப்பைப்போல் இறுகிய வர்க்கமாக தனித்து உருவாகியிருந்தனர். இவர்கள் மதகுருமார்களில்; இருந்து மாறுபட்டாலும் அவர்களுடன் நட்புறவுடன் இருந்தனர். பெரும்பாலான மதகுருமார்களும் தேவாலயத்தின் செல்வச் செழிப்பை வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மிகுதி 24.5 மில்லியன் மக்கள் இந்த மதகுருக்கள் பிரபுக்களில் இருந்து முற்றாக மாறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்தனர்;. இவர்கள் மூன்றாவது தேசம் (வாசுதேவன் மொழிபெயர்ப்பு) – மூன்றாவது எஸ்டேட் (வுhசைன நுளவயவந)- என அழைக்கப்பட்டனர். ஆரம்பகாலத்தில் பொதுச் சபை (நுளவயவநள புநநெசயட்) கூடியபோது பிரபுக்களுக்கு தனி இடம், மதகுருமார்களுக்கு தனி இடம், மூன்றாவது எஸ்டேட்டுக்கு தனி இடம் என வழங்கப்பட்டது. இதையே 1789ல் மீண்டும் இச்சபை கூட்டப்பட்டபோது பின்பற்றப்பட்டது. ஆனால் இத்தருணம் மூன்றாவது தேசம் பலமாக வளர்ந்துவிட்டிருந்தது. 98வீத மக்கள் மூன்றாம் தேசமாக வகுக்கப்பட்டனர்.

மூன்றாவது எஸ்டேட் விவசாயிகள், பூர்சுவாக்கள், குட்டி பூர்சுவாக்கள், ஊதிய உழைப்பாளர்கள் இணைந்த பெரும் சனத்தொகையாக இருந்தது. மூன்றாம் எஸ்டேட் என்ற வகைக்குள் இருந்த செல்வந்தர்களுக்கும் விவசாயிகளுக்கும் வறிய மக்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. செல்வந்தர்கள் ‘பூர்சுவா” ( டிழரசபநழளைநை ) என்ற பதத்தால் குறிக்கப்பட்டனர். பூர்சுவா என்ற பதம் கிட்டத்தட்ட வியாபாரிகள் என்ற அர்த்தத்தில் பழைய பிரெஞ்சு மொழியில் இருந்து தோன்றியது. பின்பு சந்தை சார்ந்து (வியாபாரம் மூலமாக) தமது செல்வத்தைப் பெருக்கிய செல்வந்தர்களைக் குறிக்க இப்பதம் பாவிக்கப்பட்டது. பிரஞ்சுப் புரட்சிக் காலத்தில் பணக்கார முதலாளிகள், வியாபாரிகள் மற்றும் பணக்கார நீதிபாதிகள் வக்கீல்களை குறிக்க இப்பதம் உபயோகப்பட்டது. இவர்கள் தாம் ஒரு குழுவாக – அல்லது வர்க்கமாக – தமது வியாபார நலன் நோக்கி இயங்கியமையானது பிரஞ்சுப் புரட்சிக்காலத்தில் மேலும் பலப்பட்டதை அவதானிக்கலாம். இத்தகைய வரலாற்றுக் காரணத்தால் தான் முதலாளித்துவ வர்க்கத்தைப் பூர்சுவா என்ற பதத்தின் மூலம் குறிக்கும் பழக்கம் உருவாகியது. பெரும் பணக்கார முதலாளிகள் தாம் நெருங்கிய குழுவாக இயங்க சில சமயம் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்தும் சில சமயங்களில் அவர்களுக்கு எதிராகவும் இயங்கினர் பல சிறு வியாபாரிகள். ஓரளவு பணம் பெற்ற வக்கீல்கள் நீதிபதிகளும் அவ்வாறு இயங்கினர். இவர்களைப் போன்றவர்களைத் தனித்துக் குறிப்பிடுவதற்கு ‘பெத்தி பூர்சுவா – குட்டி பூர்சுவா” ( pநவவைந டிழரசபநழளைநை ) என்ற பதம் உபயோகப்படுத்தப்பட்டது. பெத்தி என்ற பிரஞ்சுச் சொல்லுக்கு சிறிய என்ற அர்த்தமுண்டு.

அரசாட்சியை முறியடிக்கும் நோக்கமும் தமது அதிகாரத்தை நிலைநாட்டும் நோக்கமும் பூர்சுவாக்களை ஏனையவரோடு ஒத்துப்போக வைத்தது. இவ்வகையில் ஆரம்பகாலத்து பூர்சுவாக்கள் வரலாற்றில் ஒரு முற்போக்குப் பாத்திரம் வகித்ததை அவதானிக்கலாம். மூன்றாவது தேசம் ஒட்டுமொத்தமாகப் பிரபுக்களினது – மன்னரது ஆட்சிக்கு நேர் முரணில் இருந்தனர். அந்த எதிர்ப்பில் ஒற்றுமையிருப்பினும் மூன்றாம் எஸ்டேட்டுக்குள்ளும் பல்வேறு முரண்கள் இருந்தன. இது புரட்சிக்காலத்தில் ஊதி வெடித்ததைப் பார்க்கலாம். வளர்ச்சியடைந்து கொண்டிருந்த சிறு முதலாளிகள் தமது பிரதிநிதிகள் பக்கம் சரிய வறிய மக்களும் ஊதிய உழைப்பாளிகளும் தமது பிரதிநிதிகள் பக்கம் சரிய என வர்க்க உணர்வுகளின் அடிப்படையில் பிளவுகள் ஏற்பட்டன.

புரட்சி ஆரம்பித்த 1789ம் ஆண்டின் பின் பல்வேறு கழகங்கள்; பிரான்ஸ் எங்கும் உருவாக்கப்பட்டன. அக்காலத்தில் அரசியற் கட்சி என்ற தற்காலத்து கட்சி முறை இருக்கவில்லை. ஒத்தகருத்துடையவர்கள் ஒரு கிளப்பில் – கழகத்தில் கூடி தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். வௌ;வேறு கருத்துநிலையுடைய வௌ;வேறு கழகங்கள்; புரட்சிக்குப்பின் ஆரம்பித்தன. புரட்சியின் மையமாக இருந்த பரிஸ் நகரத்தில் இந்தக் கழகங்கள் கூடித் தமது கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றன. ஒவ்வொரு கழகத்தைச் சார்ந்தவர்களும் தமக்கெனப் பத்திரிகைகளும் நடத்தினர். இதில் முக்கியமாக யாக்கோபின்கள் பற்றியும் சான் குய்லோத்துகள் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம்.

ப்ரத்தோண் மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஒரு கழகமாகப்; பாரிசில் கூடுவதற்கு இடம் தேடினர். இவர்கள் பின்பு யாக்கோபின் திருச்சபை என்ற தேவாலய மன்றத்தில் கூட ஆரம்பித்தனர். அதனால் இவர்கள் யாக்கோபின்ஸ் என அழைக்கப்பட்டனர். வக்கீல்கள், சிறு வியாபாரிகள் எனச் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கலவையாக இருந்தார்கள் இவர்கள். இவர்கள் முடியாட்சியைத் திட்டவட்டமாக எதிர்த்து குடியாட்சியை ஆதரித்தனர். இருப்பினும் பூர்சுவாக்கள் மற்றும் அவர்களால் ஏற்பட்ட விலை அதிகரிப்பு வறுமை சார்ந்து இவர்களிடம் திட்டவட்டமான கருத்துக்கள் ஆரம்பத்தில் இருக்கவில்லை. முதலாளித்துவ வளர்ச்சியால் ஏற்பட்ட நலன்களை அனுபவித்து உருவாகிக்கொண்டிருந்த புதிய செல்வாக்கு மிக்க வர்க்கம் தனக்கான சலுகைகளையும் அதிகாரத்தில் பங்கையும் கேட்டது. யாக்கோபின்களிற் பலர் இந்தப் புதிய பிரிவினரிடம் இருந்து வந்தமையால் ஆரம்பத்தில் அவர்களின் நலன்கள் முடியாட்சிக்கு நிரந்தர முடிவைக் கட்டுவதில் மட்டும் குறியாக இருந்தது. புரட்சி ஆரம்பித்த காலகட்டங்களில் முடியாட்சிக்கு ஆதரவானவர்களின் எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளை இவர்கள் கடுமையாக எதிர்த்தது யாக்கோபின்களுக்கு பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. புரட்சி ஆரம்பித்த பின் யாக்கோபின் சபைகள் புற்றீசல் போல் பெருக ஆரம்பித்தன. 1791ம் ஆண்டு சட்டத்தின்படி நடந்த தேர்தலிலின் படி தோன்றிய புதிய சட்டசபையில் 136 யாக்கோபின்கள் அங்கம் வகித்தனர். புரட்சியின் விசையினால் உந்தப்பட்டு இச்சபையின் முக்கிய உறுப்பினரான ரோபஸ்பியர் பூர்சுவா நலன்களையும் எதிர்க்கும் நிலைக்கும் சான் குய்லோத்துகள் பக்கம் சரியும் நிலைக்கும் பின்னால் தள்ளப்பட்டார். இதனால் பூர்சுhவாக்களின் எதிர்ப்பை சம்பாதித்த யாக்கேபின்கள் பின்னால் முடியாட்சி ஆதரவாளர்களாலும் பூர்சுவாக்களாலும் கொன்று தள்ளப்பட்டார்கள்.

குய்லோத்துகள் என்ற உடை அணிந்த பிரபுக்களில் இருந்து மாறுபட்ட மக்கள் என்று குறிப்பிட தம்மை குய்லோத்து அணியாதவர்கள் என்ற அர்த்தத்தில் அழைத்துக் கொண்டவர்கள்தான் -சான் குய்லோத்துகள-;. வறிய மக்கள், ஊதிய உழைப்பாளிகள், என பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்கள் சான் குய்லோத்துகளின் பகுதிகளாக இருந்தனர். இவர்கள் புரட்சியின் வேகத்தை நிர்ணயித்த முக்கிய பிரிவினர். புரட்சியின் போது கோரப்பட்ட அதிகபட்ச சனநாயகத்தின் உயிர்நாடியாக இருந்தார்கள் இவர்கள். முடியாட்சியை ஆதரிப்பவர்கள் முதலாளித்துவ ஊழல் செய்பவர்கள் எல்லாரும் புரட்சிக்கு எதிரானவர்கள் எதிர்ப்புரட்சிகரவாதிகள் என்று அவர்களைக் கடுமையாக எதிர்த்தனர் சான் குய்லோத்துகள். பேரவை எதிர்ப்புரட்சிகர சக்திகளை அடக்காததால் தாமே கமிட்டி அமைத்து எதிர்ப்புரட்சிகரவாதிகளை ஈவிரக்கமற்ற முறையில் கைது செய்யவும் கொலை செய்யவும் இவர்கள் எடுத்த முடிவு பூர்சுவாக்களுக்கு மிகப்பெரும் பயக்கெடுதியை ஏற்படுத்தியது. இருப்பினும் மக்களின் எழுச்சியை நிலைநாட்டி பேரவையில் மாற்றங்களை முன்தள்ள சான் குலோத்துகளின் ஆதரவு அடிக்கடி தேவைப்பட்டது. முடியாட்சிக்கு ஆதரவான எதிர்ப்புரட்சி அடிக்கடி தோன்றிக்கொண்டேயிருந்தது. அச்சமயங்களில் முடியாட்சியை எதிர்க்க இடதுசாரியம் சாய்ந்து சான் குய்லோத்துகளின் உதவியுடன் பிரபுக்களை எதிர்ப்பது பின்பு சான் குய்லோத்துகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மட்டுப்படுத்துவது என இயங்கிக்கொண்டிருந்தது பேரவை. சான் குய்லோத்துகளின் வன்முறையின் பலத்தைக் கொண்டு ரோபஸ்பியர் தலைமையில் அதிகாரத்தைப் பிடித்தார்கள் யாக்கோபின்கள். சான் குய்லோத்துகளின் நெருக்கடியாற் தான் வரலாற்றுப் புகழ்மிக்க 1973 சட்டம் இயற்றப்பட்டது. உழைக்கும் மக்கள் பெரும்தெகையில் இருந்த சான் குய்லோத்துகள் மத்தியில் இருந்துதான் முதன் முறையாக ‘கட்டுப்படுத்தப்பட்ட” பொருளாதாரம் பற்றிய கருத்துக்கள் எழுந்தது. பாபேவ் போன்ற முதற் கம்யூனிஸ்டுகளும் சான் குய்லோத்துகளைச் சார்ந்தே இயங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சான் குய்லோத்துகளை வெறும் காடையர்களாகவும் கொலைகாரர்களாகவும் வர்ணிக்கும் வலதுசாரிய வரலாற்றாசிரியர்கள் புரட்சியின் வரலாற்றைத் திரிப்பதற்காகவே அவ்வாறு எழுதுகிறார்கள். சான் குய்லோத்துகள் புரட்சியின் உயிர்நாடியாக துடித்ததை எப்படியாவது மறைத்து சனநாயகத்துக்கான மாற்றத்தில் உழைக்கும் மக்கள் வகித்த பங்கை மூடி மறைக்கும் அரசியல் அது.

வறுமையும் விலையும்

விக்டர் கியூகோவின் லே மிசாரபிள் கதையைப் படிப்பவர்கள் அல்லது அதன் நவீன இசைவடிவைப் பார்த்தவர்கள் அக்காலத்தில் நிலவிய கொடிய வறுமை பற்றி ஓரளவு உய்த்துணர முடியும். மக்கள் மிக மோசமான வறுமையால் துன்பப்பட்டார்கள். அதே சமயம் நிலப்பிரபுக்கள் சுகபோக வாழ்ககையை அனுபவித்து வந்தனர். பணக்கார முதலாளிகள் பணத்தையும் பொருட்களையும் முடக்கி வைத்திருந்தமையும் அவதானிக்கப்படவேண்டியது. இவர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி மிகப்பெரிதாக இருந்தது. ஊதிய உழைப்பில் ஈடுபட்டு சிறிதளவு பணத்தைப் பெற்றவர்கள் பெருமளவு அரசருக்கு வரி கட்டவேண்டியிருந்தது. அதே சமயம் மிஞ்சிய பணத்தில் போதியளவு அடிப்படைத்தேவைகளை நிவர்த்திசெய்ய முடியாதபடி பொருட்களின் விலை அதிகமாகவும் பொருட்கள் தட்டுப்பாடும் நிலவியது. 1730ல் இருந்து 1789க்குள் தானியங்களின் விலை 60 வீதத்தால் அதிகரித்திருந்தது. ஆனால் ஊதியம் 20 வீதம் மட்டுமே அதிகரித்திருந்தது.

அமெரிக்க சிவில் யுத்தத்தில் பிரான்ஸ் ஈடுபட்டதால் அதன் கடல்வழி ஏற்றுமதி-இறக்குமதி பாதிக்கப்பட்டது. முக்கியமாக துணிகள் வைன் முதலியவற்றின் வியாபாரம் பெரும் பாதிப்புக்குள்ளானது. இது விவசாயிகளுக்குப் பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்தது. 1778ல் வைனின் விலை 50 வீதமாக குறைந்தது. போதாக்குறைக்கு 1785ல் ஏற்பட்ட வறட்சியால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தானியங்களின் பற்றாக்குறை உணவுகளின் விலையை உயர்த்தியது. குறிப்பாக முக்கிய உணவான பாணின் பற்றாக்குறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. (மக்கள் பாண் பற்றாக்குறை பற்றி அரசி மேரி அந்துவானத் அவர்களிடம் முறையிட அவர்களிடம் பாண் இல்லையானால் கேக் சாப்பிடச் சொல்லுங்கள் என்று சொன்னதாகச் சொல்லப்படும் பகிடி அப்போதிருந்த முரண்நிலையைச் சுட்டிக்காட்டுகிறது). பெரும்பான்மை விவசாயிகள் பெரும் அதிருப்தியடைந்து முதலாளிகள் பக்கம் தமது ஆதரவைத் திருப்பும் நிலைக்கு இது வழியேற்படுத்தியது. 1750ல் இருந்து 1785 வரை நூற்றுக்கும் அதிகமான விவசாயிகளின் எழுச்சிகள் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. புரட்சியின்போது யாக்கோபின்கள் மற்றும் சான் குய்ளோத்துகளுக்கு இவர்கள் ஆதரவு கொடுத்தனர்.

இது தவிர பிரான்சில் முதலீடு செய்யத் தயங்கிய பெரும் முதலாளிகள் பலர் ரஷ்யா மற்றும் ஏனைய நாடுகளில் தமது முதலீட்டைச் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. வியாபாரிகள் தமக்கேற்றபடி விலைகளைத் தீர்மானித்தனர். சந்தையின் குழப்பமான நடைமுறைகளையும் – வியாபாரிகளின் ஊழல்களையும் மக்கள் பார்க்கக்கூடியதாக இருந்தது. சந்தையை நெறிப்படுத்தி மூலதன விரிவாக்கத்தை உறுதிப்படுத்தும் தேசியஅரசு அப்போது முழுமையாகத் தோன்றியிருக்கவில்லை. உழைப்பில் பெரும் பகுதியை வரியாக அரசருக்குத் தாரை வார்த்தல், கடும் உழைப்பின் பின்பும் சந்தையில் உணவைப் பெற முடியாமல் இருத்தல் முதலிய பல்வேறு அனுபவங்கள் புதிய அனுபங்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. தமக்குரியதை மற்றவர் பறிப்பது – பதுக்கி வைப்பதை ஊதிய உழைப்பில் ஈடுபட்டவர்கள் உடனடியாக எதிர்த்தனர். இதை ஏற்றுக்கொள்ளுவதற்கு இன்று நாம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். தவிர மூலதனத்தின் அதிகாரத்தை உறுதி செய்யும் தேசிய அரசு இன்று பலமாக இருக்கிறது. ஆனால் அன்று ஊழல்கள் ஏற்றுக் கொள்ளப்படமுடியாததாக இருந்தது. இதற்கெதிராக தொழிலாளர்களின் எதிர்ப்பு வளர்ந்ததையும் நாம் பார்க்கலாம்.

1776ல் இருந்து 1789வரை ஏராளமான வேலை நிறுத்தக் கலவரங்கள் நிகழ்ந்தன. இவ்வேலை நிறுத்தங்கள் இன்றைய கால வேலை நிறுத்தங்கள் போல் அமைப்பு மயப்பட்ட தொழிற் சங்கங்களால் நடத்தப்படவில்லை. இன்று இத்தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அதிகாரத்துக்கு நோகாமல் – அதை எக்கேள்விக்கும் உட்படுத்தாமல் – போக்குக்கு வேலை நிறுத்தத்தை செய்கிறார்கள். இதுபோலன்றி அன்று வேலை நிறுத்தங்கள் முதலாளிகளின் அதிகாரத்துக்கு எதிரான கலவரங்களாக வெடித்தன. இது முதலாளிகளை அடித்து நொருக்குவதில் இருந்து அவர்களை விளக்குக் கம்பத்தில் தொங்க விடுவது வரை சென்றது. உதாரணத்துக்கு ரிவலியோன் கலவரத்தைக் குறிப்பிடலாம். ரிவலியோன் என்ற முதலாளியின் கடதாசித் தொழிற்சாலையில் ஏறத்தாள 350 தொழிலாளர்கள் வேலைசெய்து வந்தனர். ஊதியம் அதிகமாக வழங்க வேண்டியிருப்பதால் தொழிற்சாலைக்கு மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக ரிவலியோன் தான் வழங்கிய பேச்சொன்றில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் சினந்தெழுந்தனர். தொழிற்சாலையில் எவ்வளவு உற்பத்தி நிகழ்கிறது என்பதும் ரிவலியோனின் செல்வச் செழிப்பும் அவர்கள் அறிந்ததே. ஏனைய தொழிலாளர்களும் சேர்ந்து ஏறத்தாள 600 தொழிலாளர்கள் பஸ்ரிலில் ஒன்றுகூடி ரிவலியோனின் கொடும்பாவியை எரித்தனர். அதோடு நிற்காது ரிவலியோனின் வீட்டையும் முற்றுகையிட்டு நுழைந்தனர். இதுபோன்ற முற்றுகையிடுதல், கடைகளை உடைத்து உணவுகளைக் கைப்பற்றுதல் முதலியன தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. இது முதலாளிகளுக்குப் பெரும் அச்சத்தை உண்டுபண்ணியது. இது சந்தையின் ஸ்திரத்தன்மையையும் பாதித்தது. தொழிலாளர்கள் தமது குரலை உயர்த்துவது தமக்கும் சேர்த்து சாவு மணி அடிக்கும் என்பதை முதலாளிகள் உணர்ந்திருந்தனர். அரசருடனான சமரசத்தின் மூலமோ அல்லது ஏதோ ஒரு வகையிலோ தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவது என்பதில் பெரு முதலாளிகள் பலர் குறிப்பாக இருந்தமையையும் நாம் பார்க்கலாம்.

புரட்சியின் ஆரம்பம்

இந்தப்பின்னணியைக் கவனத்திற் கொண்டு தான் புரட்சிக் காலகட்டத்தை நாம் ஆராய வேண்டும். பஸ்ரில் கோட்டையை (14 யூலை 1789) மக்கள் முற்றுகையிட்டுத் தாக்கியதை புரட்சியின் தொடக்கமாக வர்ணித்து நெப்போலியன் போனப்பார்ட்டின் சர்வாதிகாரம் தொடங்குவதை புரட்சியின் முடிவாக அறிவித்து வரலாற்றைக் குறுக்குவது தவறு. பஸ்ரிலில் பதுக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக மக்கள் பஸ்ரிலை முற்றுகையிட்டனர். அத்தருணம் பஸ்ரிலில் ஏழு கைதிகள் மட்டும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
புரட்சிகர நடவடிக்கைகள் முன்பே ஆரம்பித்திருந்தாலும் பஸ்ரிலின் வீழ்ச்சி முக்கியமான நிகழ்வு. பஸ்ரிலின் முற்றுகையில் ஈடுபட்டது சிறுதொகை மக்களே. இருப்பினும் அவர்கள் பெரும்பான்மை மக்களின் கடும் கோபத்தைப் பிரதிபலித்தனர். 1789களில் பாரிஸ் சனத்தொகை 524 000ல் இருந்து 660 000வரை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் பாரிசைவிட அதிக சனத்தொகை உள்ள நகரமாக லண்டன் மட்டுமே இருந்தது. (அத்தருணம் லண்டனில் 8850 000 மக்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது). 10 000 மதகுருக்களும் 5000 பிரபுக்களும் அக்காலகட்டத்தில் பாரிசில் வசித்துவந்தனர். 40 000 பூர்சுவாக்கள் ஏனைய மக்களுடன் சரிந்து பிரபுக்களுக்கெதிரான மிகப்பெரும் சக்தியாக திரள்வது இலகுவானதாக இருந்தது. பூர்சுவாக்களிற் பலர் சிறு வியாபாரங்களில் ஈடுபடுபவர்களாகவும் பலர் ரிவலியோன் போல் முன்னால் தொழிலாளிகளாகவும் இருந்தனர். மிகுதிச் சனத்தொகையினர் சான் குய்லோத்துகளாக அல்லது அவர்கள் ஆதரவாளர்களாக இருந்தனர். இந்தச் சான் குய்லோத்துகளின் முக்கிய பாகமாக ஏறத்தாழ 300 000 பேர் ஊதியம் பெற்று வாழும் தொழிலாளர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆக புரட்சியின் போது பலமான சக்தியாக வெளிப்படத்தொடங்கிய உந்துவிசை எந்த வர்க்கத்திடம் இருந்து வந்தது என்பதை அனுமானிப்பது சிரமமில்லை.

பஸ்ரிலின் வீழ்ச்சி மக்கள் இறுதிவரைப் போராடத் தயார் என்ற செய்தியை பகிரங்கப்படுத்தியது. மன்னராட்சியின் சின்னமாயும் கடுங்காவலோடும் இருந்த பஸ்ரில் கோட்டையை மக்கள் கைப்பற்றித் தமது அதிகாரத்தின் முன் எச்சக்தியும் நிற்க முடியாது என்பதை அறிவித்தார்கள். மக்கள் மத்தியில் வேரூன்றிக ;கொண்டிருந்த கடுங்கோபம் மற்றும் யுத்த தயார் நிலையை இது அறிவித்தது. நிலப்பிரபுத்துவ அதிகாரத்தின் அத்திவாரத்தை ஆட்டியது. இச்சம்பவத்தின் மூலம் மக்கள் எழுச்சி கொண்ட நிலையில் பல்வேறு தொடர் நிகழ்வுகள் நிகழத்தொடங்கின. பொங்கிக்கொண்டிருந்த பானையின் மூடியைத் தட்டித் திறந்துவிட்டது போன்ற சம்பவமாக இருந்தது பஸ்ரிலின் வீழ்ச்சி. இதைத் தொடர்ந்து எதிர்ப்பு பொங்கி வழியத் தொடங்கியது.

புரட்சியின் ஆரம்பம் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றுகூடித் தீர்மானித்து நிகழ்வதில்லை. மாறாக அது பெரும்பான்மையினரின் கோபதாபங்களைப் பிரதிபலிக்கும் சிறுபான்மையரால் முன்னெடுக்கப்படுகிறது. இது எந்த ஒரு சிறு சம்பவத்திற்கூடாகவும் மடை திறந்து ஓடலாம். புரட்சியை ஆரம்பித்து வைக்கும் சம்பவம் வெறும் பொறி மட்டுமே -பின்பு தீ பற்றி எரியும். மக்கள் தாம் வரலாற்றுப் புத்தகத்தின் பக்கங்களில் நுழைதல் புரட்சி என வர்ணிப்பர். அரசர்களை ஒதுக்கிவிட்டு வரலாற்றுப் புத்தகம் மக்கள் அசைவுகளை எழுதச் சொல்லி வற்புறுத்துகிறது புரட்சி. முதலாளித்துவ உற்பத்தி முறையோடு எழுந்த முரண்களில் இருந்து வெடித்த இந்த வரலாற்று இயக்கம் இன்னும் ஓயவில்லை. அதன் பண்புகள் பலதை நாம் இன்று நேரடியாகக் காணமுடியாவிட்டாலும் பல்வேறு தருணங்களில் அவை மேலோங்குவதை நாம் அவதானிக்கலாம். புரட்சிக்கான ஆரம்பம் எப்பொழுதும் அதிகார சக்திகளின் நெருக்கடியில் இருந்து ஆரம்பிக்கிறது என்பர். அதிகாரத்தின் பலவீனத்தின் தருணம் ஒடுக்கப்படும் மக்களின் எழுச்சி தெறித்துக்கிளம்புகிறது.

பூர்சுவாக்கள் புதிய உற்பத்தி முறைக்கேற்ப தமது அதிகாரத்தை நிறுவுவதற்காகப் பழைய அதிகாரத்தை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டு ஒட்டுமொத்த மக்களையும் தம் சார்பில் இழுத்து எதிர்ப்பைக் கட்ட முயன்றார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற அதிகூடிய உரிமைகள் கிடைக்கும் கவர்ச்சியில் மக்கள் மன்னராட்சியைத் தூக்கி எறிய அவர்களுடன் இணைந்தார்கள். பல்வேறு சனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொள்ள பூர்சுவாக்கள் உட்பட மக்களும் தமது பழைய சலுகைகள் பலதை விட்டொழிக்கவும் தயாராக இருந்தார்கள். கூடிய சனநாயக உரிமைளை வழங்குவதன் மூலம் தமது தலைமையின்கீழ் சமூகத்தை மீள் ஒழுங்கமைக்க முயன்றார்கள் பூர்சுவாக்கள்.

இந்த உரிமைகளைப் பெற்றுக்கொள்ள பூர்சுவாக்களின் பினனால்; ஒடுக்கப்பட்ட வறிய மக்கள் திரண்டாலும் அவர்களின் குரல் பூர்சுவாக்கள் வழங்க முன்வந்த உரிமைகளையும் தாண்டிய உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்தது. சம உரிமை, பென்கள் உட்பட அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை, தேர்தலில் வென்றெவர்கள் தவறிழைக்கும் போது அவர்களைத் திருப்பிப்பெறும் உரிமை முதற்கொண்டு எந்த ஒரு மனிதனும் பசி பட்டினிக்கு உள்ளாகாமல் கீழ்த்தரமாக நடத்தப்படாமல் அவர்களிடம் சமூக வளங்களைப் பங்கிடும் அனைவருக்குமான புதிய சமூகத்தை ஒழுங்கமைக்க அவர்கள் விரும்பினர்.
இதனாற்தான் பழைய ஒழுங்கை எதிர்த்த மூன்றாம் எஸ்டேட்டுக்குள்ளும் முரண்கள் தோன்றின. சான் குய்லோத்துகளின் வேகமான வளர்ச்சி இந்த அடிப்படையிலேயே நிகழ்ந்தது. தொழிலாளர்களின் ஆளுமை வளர்வது முதலாளிகளுக்குப் பெரும் கிலியை உண்டு பண்ணியது என்பதில் வியப்பில்லை. ஆக பூர்சுவா பிரதிநிதிகள் தமது புரட்சிகரக் கோரிக்கைகயை முற்றாக முன்னெடுக்காமல் மன்னர் உட்பட பழைய ஒழுங்குகளோடு சமரசங்கள் ஏற்படுத்திக்கொண்டு முன்னேறவே விரும்பினர். இந்தக் குணாம்சங்களை யாக்கோபின்களாக இருந்த பலரும்கூட பிரதிபலித்தனர். சனநாயக உரிமைகயை முன்னெடுக்கும் வேலையை சான் குய்லோத்துகள் தான் செய்யவேண்டியிருந்தது. இருப்பினும் அவர்கள் பூர்;சுவா சனநாயக சமூக முறையைத் தாண்டிச் சென்று தமது அபிலாசைகளை நிறைவேற்றும் அளவுக்கு உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி போதாமையாக இருந்தது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின்றி சோசலிச சமூகம் நோக்கி நகரமுடியாது என்றாலும் அதைநோக்கிய உந்துதல் இருந்தமையைக் கவனிக்கவேண்டும். தவிர தொழிலாளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தவும் பூர்சுவாக்கள் பின்னிற்கவில்லை. தவிர பெரும்பான்மை தொழிற்சாலைகள் அன்று ஏதோ ஒரு விதத்தில் விவசாயத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தமையும் அவதானிக்க வேண்டும். இதனால் விவசாயிகளின் பங்கு முக்கியமாக இருந்தது. விவசாயிகளுக்கொன்று எந்த தனிப்பட்ட அமைப்புகளும் இருக்கவில்லை. தனிப்பட்ட விவசாயிகள் அரசியலமைப்பு என்று வரலாற்றில் எங்கும் பார்க்க முடியாது. அவர்கள் அன்று தமது நலனுக்கேற்றவாறு முதலில் முதலாளிகள் பக்கம் தமது ஆதரவை வழங்கினர். பின்பு விவசாயிகள் ஆதரவுடன் எதிர்ப்புரட்சி தலைதூக்கியது.

தமது அதிகாரம் கேள்விக்குள்ளாகத வரைதான் பூர்சுவாக்களுக்கு மூலதன வளர்ச்சி பற்றிய அக்கறை இருந்தது. இந்த முரண்நிலை குறிப்பாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். பிற்காலத்தில் நிகழ்ந்த ரஷ்யப் புரட்சி உட்பட பல்வேறு புரட்சிகளில் இந்தப் பண்புகளை அவதானிக்கலாம். பிற்காலத்தில் உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்த நிலையில் சனநாயக உரிமைகளுடன் நிறுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயம் ரஷ்ய புரட்சியாளர்களுக்கு உண்டாகவில்லை. பிரஞ்சுப்புரட்சியின் போதும்கூட புரட்சியை நடத்த பூர்சுவாக்கள் யாக்கோபின்களிலும் சான் குய்லோத்துகளிலும் தங்கியிருக்கவேண்டிய நிலை இருந்தது.
புரட்சி
உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றம் புதிய சமூக ஒழுங்கைக் கோரிநின்றது தவிர்க்க முடியாத நிலையில் இருந்த அதே சமயம், வறுமை பொருட்களின் விலையுயர்வு முதலியவை மாற்றத்தைக் கோருதல் நோக்கி மக்களை உந்தித் தள்ளியது. பிரஞ்சுப் புரட்சி தொட்டு அனைத்துப் புரட்சிகளின் பின்னாலும் மிகவும் ஒடுக்கப்படுபம் பெரும்பான்மை மக்களின் ‘இனிமேற் தாங்கமுடியாது” என்ற கோபம் கொப்பளிப்பதை நாம் பார்க்கலாம். அதிகாரதத்தின் பலவீனத்தைப் பார்த்த மக்கள் எழுச்சி கொண்டனர். பிரஞ்சுப் புரட்சியின் மையமாக இருந்தது பாரிஸ் நகரம். பாரிசில் ஏராளமான பூர்சுவாக்களும் குட்டி பூர்சுவாக்களும் குவிந்திருந்தனர். இவர்கள் முடியாட்சிக்கு எதிரான தமது கோபதாபங்களை நேரடியாகக் காட்டாது திணறிய தருணம் பாரிஸ் மக்களின் தலையீடு புரட்சியை ஆரம்பித்து வைத்தது என்று சொல்வது மிகையில்லை.

முடியாட்சியையும் அப்போதைய அதிகாரத்தையும் எதிர்த்தல் என்பது மரணதண்டனையில் போய் முடியலாம். இருப்பினும் பட்டினியால் சாவதைவிட பசியால் துடிப்பதை விட தமது குரலை உயர்த்தி எல்லோருக்குமான மாற்றத்தைக் கோருவது மேல் என்ற சமூக உணர்வு மேலோங்கியமை பயத்தை இல்லாதொழித்தது. தாய்மார் தமது குழந்தைகள் பட்டினியாற் சாவதையும் வறுமையால் தம்மைச் சுற்றி எல்லாம் சிதறுண்டு போவதையும் பார்த்த பெண்கள் பிரஞ்சுப் புரட்சியின் ஆரம்பத்தில் வகித்த பங்கு மிக முக்கியமானது. புரட்சிக்கு முன்பு வறிய மக்களுக்குள்ளும் இழப்பதற்கு எதுவுமற்று மிக மோசமான ஒடுக்குதலுக்கும் வறுமையின் கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தவர்கள் பிரஞ்சுப் பெண்கள். இவர்களின் கோப எழுச்சி புரட்சிக்கு மேலதிக உயிர்ப்பை வழங்கியது. பல கலவரங்களை பெண்களே முன்னின்று தொடங்கி வைத்தனர். பாண் பேக்கரிகள் மற்றும் உணவுக்கிடங்குகளை தாக்கி உணவைக் கைப்பற்றுவதிலும் அவர்கள் முன்னின்றனர். புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களும் மிக ஒடுக்கப்பட்டோரும் ஓயாத உந்துதலாக இருந்தனர். ஏனெனில் புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் முழுக் கோரிக்கைகளும் நிவர்த்திசெய்யப்படவில்லை. தமது எல்லாக் கோரிக்கைகளும் நிவர்த்தியாவது வரை புரட்சியைத் தொடர் புரட்சியாக நிகழவைப்பதற்கான உந்துதல் இவர்கள் பக்கமிருந்;தே வந்தது. உதாரணமாhகப் புரட்சிக்குப் பின்புகூட பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. 1793ம் ஆண்டின் புரட்சிகர யாக்கோபின் சட்டத்தை வரவேற்ற பெண்கள் தமக்கு வாக்குரிமையையும் கோரினர். பெண்ணியம் சார்ந்த அபை;புகள் கட்டப்பட்டதும் அவதானிக்கத்தக்கது. பல்வேறு புரட்சிகரத் தலைவர்களின் காதலிகள், மனைவிமார் மற்றும் சகோதிகள் எனப் பல பெண்கள் வகித்த பங்கைப் பெரும்பான்மையான வரலாற்றாசிரியர்கள் கவனத்தில் எடுப்பதில்லை. பெண்களின் அரசியற் பங்களிப்பின் ஆபத்தைக் கட்டுப்படுத்தத் தான் 1795ல் எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளின் பின் பெண்கள் அனைத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் தடை செய்யப்பட்டனர்.
மக்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்த வெற்றிகள் மேலும் அவர்கள் பலத்தை அதிகரித்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் தெருவில் இறங்கியதும் அவர்கள் தமக்கு கிடைத்த ஆயுதத்தை உபயோகித்து அதிகார சக்திகளின் வன்முறை ஒடுக்குதலை எதிர்த்தததும் ஆரம்பித்த பின்தான் நேரடி மோதலுக்கு பூர்சுவா பிரதிநிதிகள் களத்திற் குதித்தார்கள். மேலும் புரட்சியை முன்னெடுக்க மக்கள் ஆயுதமயப்படவேண்டும் என்ற கோசம் அப்போது வலுப்பட்டது. ஆயுத மயப்படுங்கள் என்ற கோசம் பெரும்பாலும் அனைத்துப் ‘பிரதிநிதிகளாலும்” முன் வைக்கப்பட்டது. மக்கள் ஆயுதக்கிடங்குகளை நோக்கி கூட்டங் கூட்டமாப் படை எடுத்தனர். இதன் பகுதியாகத்தான் பஸ்ரில் கோட்டை தாக்கப்பட்டு மக்களின் கோபநெருப்பின் வேகமும் அவர்கள் எவ்வாறு பலம் கொண்டவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் பகிரங்கமாக்கப்பட்டது. இந்த பலத்தை பார்த்தபின்பு அவர்களையும் மீறி மக்கள் பிரதிநிதிகள் தமது நடவடிக்கைகளை முன்வைப்பது முடியாமற் போயிற்று. மக்களின் அதிகாரத்தை பலப்படுத்த ‘ஆயுத மயப்படுங்கள்” என்ற கோரிக்கைகயைப் புரட்சிக் காலங்களில் புரட்சிகரவாதிகள் முன்வைக்கும் மரபின் ஆரம்பம் இங்கிருந்துதான் ஆரம்பித்தது.

மன்னர் தமக்கெதிராக எந்நேரமும் திரும்பலாம். புரட்சிகர எழுச்சி அடக்கப்படலாம் என்ற பயம் பாரிஸ் மக்களுக்கு தொடர்ந்து இருந்ததை அவதானிக்க முடியும். மக்கள் எழுச்சி எத்தகைய வன்முறையைக் கொண்டுவரும் என்று தெரியாத அச்சம் – எதிர்ப்புகள் எவ்வாறு ஒடுக்கப்படும் என்று தெரியாத அச்சம் – வெளிநாட்டுப் படையெடுப்புகள் பற்றிய அச்சம் என் பெரும் பயக்கெடுதி பிரான்சைப் பிடித்து ஆட்டிய காலப்பகுதி அது. புரட்சியை ஆரம்பித்த மக்கள் தமக்கான உரிமைகள் நல்வாழ்க்கையை வென்றெடுக்காமல் புரட்சியை முடிக்கும் நோக்கத்தில் இருக்கவில்லை. ஆனால் பூர்சுவாக்களின் நோக்கு வேறுமாதிரியிருந்தது. மக்களின் எழுச்சியின் மேல் நின்று தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள விரும்பிய அதேவேளை மக்கள் தம்மையும் மீறி நகர்ந்துவிடக்கூடாது என்ற நோக்கமும் அவர்களிடம் இருந்தது. தமது புரட்சியை தாமே முன்னெடுக்க முடியாத வக்கற்ற நிலையிற்தான் அவர்களுக்குள் இருந்து புரட்சியின் விசையை தாங்கி முன் நிற்கத்தக்க பிரதிநிதிகள் தோன்றினர். அரசர் 16ம் லூயியை பாரிசுக்கு வரவைக்க அவரது வேர்சாய் மாளிகைக்குப் பெண்கள் படையெடுத்துச் சென்றது புரட்சியைத் தொடரும் மக்களின் நோக்கை வெளிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து மராத்தின் (ஆயசயவ) பத்திரிகை முதற்கொண்டு பல பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் புரட்சிக்காரர்களுக்கு மரண தண்டனையையும் அமுல்படுத்தப்பட்டது.

புரட்சியின் ஓட்டத்தை வெட்டி அதிகாரத்தை தக்கவைக்க அரசரும் அவர் ஆதரவுச் சக்திகளும் நடவடிக்கைகளை முடுக்கிவிட எழுச்சி பெற்ற மக்கள் தெருத்தெருவாக தமது அதிகாரத்தை நிலைநாட்டத் தொடங்கினர். இவ்வகை இரட்டை அதிகாரநிலை (னுரநட Pழறநச) உருவாகுவதை எல்லாப் புரட்சிகளினதும் ஆரம்பக் கட்டங்களில் அவதானிக்கலாம். இந்தப் புரட்சிகர எழுச்சியின் பகுதியாகத்தான் ஆகஸ்ட் 1789ல் மனிதர்கள் உரிமைகள் பிரகடனம் செய்யப்பட்டது (னுநஉடயசயவழைn ழக சiபாவள ழக அயn). தேசிய பேரவையில் முற்போக்குத் தன்மையுடய பூர்சுவாக்களின் கை வலுப்படத்தொடங்கியது. தேவாலயங்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு தேசியமயமாக்கப்பட்டன. மதகுருமார்களின் கட்டுப்பாடுகளைத் தடைசெய்யும் சட்டங்கள் இயற்றப்பட்டது. பிரபுத்துவமுறைக்குத் தடையேற்படுத்தப்பட்டது. பாணின்; விலை உட்பட பல பொருட்களின் விலை குறைக்கப்பட்டது. அளவுக்கதிகமாக விலையுயர்த்தும் வியாபாரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஏராளமான பத்திரிகைகள் புற்றீசல்களாhகக் கிளம்பின. 1790களின் பின் பகுதியில் பிரஞ்சுப் புரட்சியின் நியாயத்துக்காகக் கடுமையாக வாதாடின தோமஸ் பெயினின் (வுhழஅயள Pயiநெ) புத்தகம் வெளியானது. மனிதர்களின் உரிமைப் பிரகடனத்தினால் பாதிக்கப்பட்டு எழுதப்பட்ட மனிதர்கள் உரிமை (சiபாவள ழக அயn) என்ற இப்புத்தகம் பிரான்சில் பத்து பதிப்புகளுக்குமேல் பதிப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தேசிய பேரவையில் மக்கள் கோரிய அனைத்து உரிமைகளும் முன்னெடுக்கப்படவில்லை. பல்வேறு முக்கிய உரிமைகளை முன்வைத்து தலைமை தாங்கிக்கொண்டிருந்த புரட்சியாளர்களில் ரோபஸ்பியர் (பெயர் – மேலதிக தகவல்) முக்கியமானவர். புரட்சி வளர வளர இவரது புகழ் வளர ஆரம்பித்ததன் காரணம் இவர் மக்களின் பெரும்பான்மைக் கோரிக்கைகள் பக்கம் சரிந்து நின்றதே. இவர்கூட தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டதை எதிர்க்கவில்லை என்பதை அவதானிக்க. இவரும் ஆரம்பத்தில் எப்பக்கம் சரிவது என்ற குழப்பத்திலிருந்ததை அவதானிக்கலாம். புரட்சியின் வேகம் பின்பு இவரை எவ்வாறு மாற்றியது என்பதை கவனிக்கவேண்டும். புரட்சிக்காலத்தில் அதன் வௌ;வேறு திசைகளில் மக்களும் – பிரதிநிதிகளும் பிளவுபட்டுத் திரள்வது புரட்சிக்காலத்து இன்னுமொரு பண்பு.
பல்வேறு சக்திகளுக்கிடையில் மோதல்நடக்கும் களமாக இருந்தது தேசியப் பேரவை. எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகள் லாபயத் (டுயகயலநவவந) தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. முடியாட்சியின் அதிகாரத்தை முடக்குவதோடு புரட்சியை நிறுத்துவது அவர்கள் நோக்கமாயிருந்தது. சட்டமுறை முடியாட்சியுடன் தொடரும் அவர்கள் நிலைப்பாட்டை ரோபஸ்பியர் போன்றவர்கள் கடுமையாக எதிர்த்தனர். பேரவைக்கு வெளியே தெருக்களிற் பொங்கிக்கொண்டிருந்த நெருப்பின் பின்னின்று ரோபஸ்பியர் போன்றவர்கள் அதிகூடிய உரிமைகளை கோருவதன் மூலம் முன்னுக்;கு வந்தனர்.

புரட்சியும் எதிர் புரட்சியும் அதிவேகத்தில் நிகழ்வதென்பர். புரட்சி ஆரம்பிக்கும் போதே அதை முடக்குவதற்கான எதிர் புரட்சிகர நடவடிக்கைகளும் ஆரம்பித்துவிடுகிறது என்பர். புரட்சி எதிர்ப்பை மட்டும் ஓரம் கட்டுவதில்லை. அதன் வேகத்துக்கு – கோரிக்கைகளுக்கு ஈடுகொடுக்க முடியாது குறைந்தளவு கோரிக்கைகளை மட்டும் கோரும் ‘பிரதிநிதிகள்” மற்றும் ‘தலைவர்களையும்” புரட்சி ஓரம் கட்டுகிறது. பிரஞ்சுப் புரட்சிக்கால பேரவைகள் அனைத்தும் தெருவில் உந்தப்பட்டபிறகு கோரிக்கைகளை நிறைவேற்றினவேயன்றி புரட்சியின் வேகத்தைப் புரிந்துகொண்டு பிரக்ஞாபூர்வமான மாற்றத்தை நோக்கி நகரவில்லை. அதனால் மக்கள் அடிக்கடி தெருவுக்கு வந்து எழுச்சி செய்து கலவரங்கள் செய்து புரட்சியை அங்குலம் அங்குலமாக நகர்த்தவேண்டியிருந்தது. அவர்கள் கோரிக்கையின் பிரக்ஞாபூர்வ பிரதிநிதிகள் இல்லாத 1789 -1790 காலப்பகுதிகளில் பூர்சுவாக்கள் தமது பலத்தை வைத்து எதிர்புரட்சிகர நடவடிக்கைகளை செய்தவண்ணம் இருந்தனர். பாரிஸ் மீது படையெடுப்பதற்கு பிரபுக்களின் பல முயற்சிகள் நிகழ்ந்தது. இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பல பிரபுக்கள் நாட்டைவிட்டுத் தப்பி ஓடினர். அரசரது தப்பி ஓடும் முயற்சியும் தோற்கடிக்கப்பட்டது.

இருப்பினும் பாரிஸ் மேயரும் லபாயத்தும் இணைந்து கொடிய முறையில் எழுச்சியை அடக்க இரகசியத் திட்டங்கள் தீட்டினர். பாரிஸ் மக்களின் எழுச்சியின் போது அவர்கள் படையினருக்கு கல் எறிய அதைச் சந்தர்ப்பமாகப் பாவித்து படுகொலையை முன்னெடுத்து அதன்மூலம் புரட்சியை முடிவுக்கு கொண்டுவரத் திட்டம் தீட்டப்பட்டது. இதன் பிரகாரம் நிகழ்ந்ததுதான் சாம் து மாஸ் படுகொலைகள் (ஊhயஅp னந ஆயளள ஆயளளயஉசந 17-தரடல-1791). திட்டமிட்ட முறையில் தெருநாய்களைச் சுட்டுத் தள்ளுவதுபோல் படையினரை வைத்து மக்கள் சுட்டுத் தள்ளப்பட்டனர். பாரிஸ் நகர் தெருக்களில் கேவலமான வன்முறை தலைவிரித்தாடுகிறது அதை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் வன்முறையாளர்களை தூக்கில் ஏற்றவேண்டும் என்று சொல்லித் திரிந்தவர்கள் எல்லாம் இப்படுகொலையின் பின்னிருந்து இரகசிய திட்டங்கள் தீட்டிக்கொண்டிருந்தனர். புரட்சி ஆரம்பித்து இரண்டு வருடகாலத்தில் நடந்த கொலைகளை விட அதிகமானோர் இப்படுகொலையின் போது இறந்தனர்.

இன்றுகூட பூர்சுவாக்கள் தாம் செய்யும் படுகொலைகளை மறைத்தும் நியாயப்படுத்தியும் அதேசமயம் மக்கள் தமது பாதுகாப்பிற்காக செய்யும் வன்முறைகளை கோரமயப்படுத்தி வர்ணிப்பதும் நாம் பார்க்கலாம். புரட்சிகர வன்முறையின்றி புரட்சியை ஒரு அங்குலமும் நகர்த்தமுடியாத நிலையை ஏற்படுத்துவதே எதிர்ப்புரட்சிகரத்தின் அதிவன்முறைதான் என்பதை இன்றும் பல வலதுசாரி வரலாற்றாசிரியர்களும் அரசியல்வாதிகளும் கவனிப்பதில்லை. தம்மிடம் இருக்கும் அனைத்து அதிகாரங்களையும் எவ்வளவு கூடியளவு பாவிக்க முடியுமோ பாவித்து எப்படுகொலையைச் செய்தாயினும் புரட்சியை முறியடிக்க எத்தனிக்கின்றன எதிர்ப்புரட்சிகர சக்திகள். ஏனெனில் இது அவர்களின் இருப்பு பற்றிய போராட்டமாக இருக்கிறது. புரட்சியின் வெற்றி அவர்களை வரலாற்றில் இல்லாமற் செய்துவிடுகிறது. ஆக படுகொலைகளை செய்து கட்டுக்கடங்காத வன்முறையைத் தூண்டிவிட்டு தமது இருப்பை காத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். இதை புரட்சிகர வன்முறையின்றி எதிர்கொள்ள முடியாத நிலையைப் புரட்சிகரச் சக்திகளுக்கு அவர்கள் ஏற்படுத்துகின்றனர். அமைதிவழிப் புரட்சியை முன்னெடுத்தல் என்பதை சாத்தியமில்லாமற் செய்வது எதிர்புரட்சிகர நடவடிக்கைகளே என்பதை அவதானிக்க வேண்டும். ஆரம்பத்தில் எழுச்சி கொண்டு உணவுக்கிடங்குகளைக் கைப்பற்றிய மக்கள் தமது கடும் பட்டினி நிலையிலும் அவற்றைக் களவாடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். அவர்கள் முதலாளிகளின் வீடுகளைத் தொழிற்சாலைகளை முற்றுகையிட்டபோதும் களவாடுதல் மற்றும் கொலை செய்யும் நிலைக்கு செல்லவில்லை. ஆனால் எதிர்புரட்சியின் வன்முறை வளர வளர புரட்சிக்காரர்களின் வன்முறை எதிர்ப்பும் வளர்ந்தது. பின்நாhளில் நிகழ்ந்த பல படுகொலைகளுக்குத் தொடக்கப்புள்ளியாக இருந்தது சாம் து மாஸ் படுகொலைகள். பின்பு தமது வன்முறை போதாமையால்தான் எதிர்புப்ரட்சிகர சக்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள் என சான் குய்லோத்துகள் பேன்றவர்கள் கருத வழிகோலியதும் எதிர்புரட்சிகர வன்முறையே.

வன்முறையைக் கட்டவிழ்த்தது மட்டுமின்றி வெளிநாட்டு மன்னராட்சிகள் பாரிசுக்கு தமது படையை அனுப்பி புரட்சியை முறியடிக்கவேண்டும் என்ற அரசரின் கோரிக்கைக்கும் முடியாட்சி ஆதரவாளர்களிடம் ஆதரவிருந்தது. ஆரம்பத்தில் புரட்சியில் தலையிட தயங்கிநின்ற வெளிநாட்டு அரசுகள் புரட்சிகர மாற்றங்களின் வேகம் அதிகரிக்க தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதைப் பார்க்கலாம். புரட்சிக்காலத்தின் இன்னுமொரு பொதுப்பண்பாக இது இருக்கிறது. புரட்சி நடக்கும் நாட்டைச்சுற்றி இருக்கும் பிற்போக்கு அரசுகள் தமது கூட்டான எதிர்ப்பை புரட்சியின் பக்கம் திருப்பி எதிர்ப்புரட்சிகர சக்திகளை பலமடையச் செய்ய முயற்சிக்கின்றன. அது பலனளிக்காதவிடத்து தாம் நேரடியாகப் புரட்சியில் தலையெடுத்து புரட்சியை எவ்வாறாவது தடுக்க முயற்சிக்கின்றன. பிரெஞ்சுப் புரட்சி ரஷ்யப் புரட்சியில் இருந்து இன்று நிகழும் புரட்சிகர நடவடிக்கைகள் ஈறாக இந்தப் பண்பை நாம் அவதானிக்கலாம். புரட்சியின் கவர்ச்சியில் மற்றைய நாட்டு மக்களும் எழுச்சியடைவதைத் தடுக்க இம்முயற்சி உதவுகிறது. உலகின் எந்த மூலையில் மக்கள் சமூகத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுத்தாலும் அது ஒரு வைரஸ் போல் உலகெங்கும் பரவும் சந்தர்ப்பம் உள்ளது. முன்னேறிய சமூகத்தில் சுகவாழ்வு வாழ்வதையே உலகெங்கும் வாழும் மக்கள் விரும்புவர். அதனால் இது உலகெங்கும் இருக்கும் அதிகாரங்களை அச்சத்துக்குள்ளாக்குகிறது. அதனாற்தான் புரட்சி எங்கு தோன்றினாலும் அதை முடிவுக்கு கொண்டுவர இவர்கள் தமக்குள் ஒற்றுமைப்படுகிறார்கள். இதனாற்தான் புரட்சி எங்கு தோன்றினாலும் அது உலகின் அனைத்து அதிகாரங்களையும் கேள்விக்குள்ளாவதாக வெடிக்கிறது. பிரெஞ்சுப்புரட்சி மட்டுமல்ல மானிடத்தின் எதிர்காலமே உங்கள் கையில் இருக்கிறது என ரேபஸ்பியர் பின்பு உரையாற்றியது இதை அவர் புரிந்திருந்ததை எடுத்துக்காட்டுகிறது. பாபேவ் போன்ற கம்யூனிஸ்டுகள் இதை தெட்டத்தெளிவாக தெரிந்து வைத்திருந்தனர். யுத்தம் புரட்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது. யுத்தம் புரட்சியை ஈன்றெடுப்பதாகவும் இருக்கிறதென்பர். புரட்சியின்போது நிகழும் எதிர்ப்புரட்சிக்கெதிரான யுத்தம் புரட்சி நடக்கும் நாட்டு மக்கள் மத்தியில் மேலும் புரட்சித் தீயைப் பரப்ப உதவுகிறது. அதேசமயம் எதிர்புரட்சிகர யுத்தம் நிகழும் நாடுகளில் எதிர்புரட்சியைப் பலப்படுத்த யுத்தம் பயன்படுகிறது. அவுஸ்திரியாவுக்கு எதிராக ஜிரோடன்கள் ஆதிக்கம் வகித்த பேரவை யுத்தப் பிரகடனம் செய்தது அவர்கள் எதிபாராத வகையில் மேலும் புரட்சியைத் தூண்டியது. புரட்சிக்காரரின் பிடியில் இருப்பதை விட அந்நிய அரசாட்சியின் கீழ் இருக்கலாம் என்பதே முடியாட்சியாளர்களின் நிலைப்பாடாக இருந்தது. அவர்கள் ‘தமது” நாட்டின்மேல் வைத்திருந்த பற்றில் எல்லை அவ்வளவாக இருந்தது. ஆனால் வேகமாக வளர்ந்துகொண்டிருந்த சான் குய்லோத்துகள் பூர்சுவாக்களுக்கு பயக்கெடுதியை ஏற்படுத்தினர்.

பர்தோன் மாநிலத்தில் இருந்து வந்து கூடியவர்களின் தொடர்ச்சியாக யாகோபின் கழகம் கூடியதுபோல் ஜிரோன்டின் என்ற இடத்தில் இருந்து இடத்தில் இருந்து வந்து கூடியவர்களின் கழகத்தினர் ஜிரோன்டிஸ்ட் (புசைழனெளைவள ); என அழைக்கப்பட்டனர். இவர்கள் தாராளமயக் குடியரசுக்கும் பூர்சுவாக்களுக்கும் ஆதரவாளர்களாக இருந்தனர். எதிர்புரட்சியை முறியடித்தல் என்ற கோசத்துடன் ஜிரோன்டின்கள் பேரவையில் செல்வாக்குப் பெற்றனர். ஆனால் இவர்கள் யுத்தப் பிரகடனம் செய்ததற்கு குறிப்பிட்ட எதிர்ப்பு உருவாகியது. ரோபஸ்பியர் தலைமையில் யாக்கோபின்கள் யுத்த முன்னெடுப்பைக் கடுமையாக எதிர்த்தனர். சான் குய்லோத்துகளின் செல்வாக்கு பெருகுவது ஜிரோடின்களுக்கு தலையிடியாக இருக்க ரோபஸ்பியரோ பெருகும் சான் குய்லோத்துகளின் பக்கம் சரிந்து தனது கருத்துக்களை மேலும் தீவிரப்படுத்தினார்.

அரச குடும்பம் பிரபுக்கள் சேர்ந்து எதிர்புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மேல் சான் குய்லோத்துகள் கடும் வன்முறை செலுத்த அதே சமயம் அவர்களை கொண்று குவிக்க எதிர்ப்புரட்சியாளர்கள் இரகசியத் திட்டங்கள் தீட்டினர். அத்தகைய ஒரு சதித்திட்டத்துக்கு எதிராக சான் குய்லோத்துகள் ஏற்படுத்திய எழுச்சி புரட்சியின் அடுத்த கட்டத்தை ஆரம்பித்து வைத்தது. 1792ல் நடந்த இந்த எழுச்சியால் பல எதிர்புரட்சியாளர் வெளிக்காட்டப்பட்டனர். 89ல் உருவாக்கப்பட்ட தேசிய பேரவை தேசிய சட்டங்களை ஒழுங்கமைக்கும் அவையாக தேசிய சட்டப்பேரவை (யேவழையெட ஊழளெவவைரநவெ யுளளநஅடிடல) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 1791ம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் சட்டப் பேரவை (டுநபளைடயவiஎந யுளளநஅடிடல) தேர்தல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன்மூலம் சட்டமுறை முடியாட்சியை ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சட்டப் பேரவை பூர்சுவாக்களின் சார்பில் பல முன்னேற்றமான சட்டங்களை கொண்டு வந்திருந்தபோதும் ஒடுக்கப்படும் சாதாரண மக்களுக்கு திருப்தியளிக்கும் முறையில் சட்டங்கள் இயற்றப்படவில்லை. 1992ல் இந்தச் சட்டப்பேரவை எதிர்ப்புரட்சியாளர்களை கையாள வக்கற்ற நிலையில் இருக்கிறது என அதைக் கலைத்ததாக சான் குய்லோத்துகள் அறிவித்துக்கொண்டார்கள். புரட்சியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அதன் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கமற்று மக்கள் ஒவ்வொரு தடவைகளும் எழுச்சிசெய்து நிர்பந்தித்த போது மட்டும் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த பேரவை தனது அதிகாரத்தை இழந்து கொண்டிருந்தது. அதனால் அதைக் கலைப்பதாக அறிவித்த சான் குய்லோத்துகள் பாரிஸ் கம்யூனை ஆகஸ்ட் 10 1792ல் நிறுவினர். 48 மாநிலங்களின் பிடரல் அமைப்பாக கம்யூன் நிறுவப்பட்டது. இதற்கு அடுத்தநாள் மன்னர் வாழ்ந்த துய்லறி மாளிகை முற்றுகையிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து பேரவையில் இருந்த முடியாட்சி ஆதரவாளர்கள் தப்பியோடினர். இதனால் பேரவையில் ஜிரோன்டின்களில் செல்வாக்கு மேலும் பலப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசரைக் கைது செய்யவும் அனைவருக்குமான வாக்குரிமை வழங்கவும் பேரவை ஏற்றுக்கொண்டது. அத்தகை சமரசங்கள் மூலம் கம்யூனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அல்லது செயலிளக்க முயற்சித்த பேரவையின் முயற்சி பலனளிக்கவில்லை. கம்யூனிற்கும் பேரவைக்கும் இடையில் பலப்பரீட்சை ஆரம்பித்தது.

நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு மன்னருக்குத் தண்டணை வழங்கப்படவேண்டும் எனக் கோரியது கம்யூன். அதே சமயம் எதிர்ப்புரட்சிகரச் செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் ஒரு கமிட்டியையும் அவர்கள் ஸ்தாபித்தனர். இத்தருணம் ரேபஸ்பியர் தலைமையில் பேரவையில் இருந்த யாகோபின்ஸ் கம்யூன் பக்கம் சாய்ந்து ஜிரோடின்களை எதிர்த்தனர். கம்யூன் நிறுவப்பட்டு 6 நாட்களில் பிரஷ்ய இராணுவம் பிரான்சிற்குள் புகுந்தது. பிரான்ஸ் எங்கும் பயக்கெடுதி பரவியது. எதிர்ப்புரட்சி வென்றுவிடும் என்ற அச்சம் பலருக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து எதிர்புரட்சியாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு முடிவுகட்ட முடிவெடுத்தார்கள் சான் குய்லோத்துகள். செப்டம்பர் 2ல் இருந்து நாலு நாட்கள் நூற்றுக்கணக்கான எதிர்ப்புரட்சியாளர்கள் கைது செய்யப்பட்டார்கள் – கொன்று குவிக்கப்பட்டார்கள். 223 மதகுருக்கள் மற்றும் ஏராளமான பிரபுக்கள் உட்பட ஏறத்தாழ 1400 பேர் வேட்டையாடப்பட்டனர். சான் குய்லோத்துகளின் இந்த வன்முறை மக்களுக்கெதிராக திருப்பிவிடப்படவில்லை என்பதை அவதானிக்க. இரத்தவெறிகொண்டு அவர்கள் தெருத்தெருவாக திரிந்து கொலைகள் செய்ததாகவும் இரத்தத்தைக் குடித்து திரிந்ததாகவும் வலதுசாரிய திரிபுகளையும் பார்க்கலாம். வலதுசாரி வரலாற்றாசிரியர் பலர்கூட இதை ஏற்றுக்கொள்வதில்லை. அத்தருணம் சான் குய்லோத்துக்கள் மத்தியில் ஒருவித கலக்டிவ் மனப்பாங்கு – குழுவாக இயங்கும் மனப்பாங்கு இருந்ததையும் அவர்கள் தமது குழு நலனுக்கு எதிராக இயங்காமல் இருந்ததையும் அவதானிக்கலாம். இந்தப் போக்;கு – அதாவது தமது ஒரு வித ‘வர்க்க” நலன்சார்ந்து இயங்குவது அக்காலகட்டத்தில் முழுவடிவம் பெறத்தொடங்கியதை கவனிக்க முடியும்.
சான் குய்லோத்துகள் எதிர்ப்புரட்சியைக் கடூரமாக எதிர்த்ததோடு மட்டும் நின்றுவிடவி;ல்லை. அவர்கள் ஊழல் மிக்க வியாபாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்தார்கள். பாண் உட்பட உணவுப் பண்டங்களுக்கு கட்டுபடியாகும் விலையை நிர்ணயித்தல் முதலிய பல ‘கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார” நடவடிக்கைகள் நோக்கியும் நகர்ந்தார்கள். இது திட்டமிட்ட பொருளாதாரத்தைக் கோரிய ஆரம்ப கால நடவடிக்கை எனவும் வர்ணிக்கலாம். பூர்சுவாக்கள் என்ன நடக்கக்கூடாது – யார் அதிகாரத்தை நோக்கி நகரக்கூடாது என நினைத்தார்களோ அது சான் குய்லோத்துகளுக்கூடாக நடந்துவிடும் சந்தர்ப்பம் இருந்தது. இதனாற் கிலி கொண்ட பூர்சுவாக்கள் பேரவையில் ஜிரோடின்களுக்கு ஆதரவளிக்க ஓடினர்.

13ம் திகதி ஆகஸ்ட் 92ல் பேரவை கம்யூனைக் கண்டித்ததைத்தொடநு;து பாதுகாப்பு கமிட்டியை தற்காலிகமாக நிறுத்திய கம்யூன் விரைவில் மீண்டும் அதன் வேலைகளை ஆரம்பித்தது. இத்தருனம் கம்யூன் மேல் பேரவை செய்த தாக்குதல் பற்றி யாக்கோபின்ஸ் கண்டுகொள்ளவி;லலை என்பதையும் கவனிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து நிகழ்ந்த தேசிய கன்வன்சனுக்கான (யேவழையெட ஊழnஎநவெழைn – தேசிய மகாசபை- வாசுதேவன்) தேர்தலில் புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 750 பேரில் வெறும் 96பேர் மட்டுமே முன்னாள் பேரவை உறுப்பினர்களாக இருந்தனர்.
1792 செப்டம்பர் 20ல் மகாசபை கூடியது. இந்த 750 பேரில் பெரும்பான்மையானவர்கள் தனிப்பட்ட உறுபடபினர்களாக இருந்தனர். இவர்கள் பிளெயின் (Pடயin) என அழைக்கப்பட்டனர். இருப்பினும் இவர்கள் மத்தியில் பூர்சுவா செல்வாக்கு பலப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனையவர்கள் இரண்டு தனிக்குழுக்களாக பிரிந்திருந்தனர். இந்த இரு குழுக்களில் பெரும்பானமையானவர்கள் ஜிரோன்டின்களாக இருந்தனர். மற்றைய குழுவினர் யாக்கோபின்கள். இந்தப் பேரவை கூடிய பொழுது யார் யார் எங்கு அமரவேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை. ஆனால் ஜாக்கோபின்கள் இடதுபக்கம் இருந்த உயரமான இடத்தில் இருந்து கொண்டனர். இவர்கள் உயரமான இடத்தில் இருந்ததால் பிரஞ்சில் மலையைக் குறிக்கும் மவுண்டென் என்ற சொல்லாலும் அழைக்கப்பட்டனர். ஜிரோன்டின்கள் வலதுபக்கம் அமர்ந்துகொண்டனர். இந்த எழுந்தமானமான இருக்கை முறையில் இருந்துதான் வலதுசாரியம், இடதுசாரியம் என்ற சொற்பதங்கள் உருவாகின. வலது பக்கம் இருந்த ஜரோடின்கள் மிதவாதிகளாயும் புரட்சியை முன்னெடுக்காமல் உரிமைக் கோரிக்கைகளை மடடுப்படுத்துபவர்களாயும் இருந்தனர். இடதுசாரி இருக்கையில் இருந்தவர்கள் புரட்சியை முன்னெடுக்கவும் மக்கள் முன்வைக்கும் பல்வேறு உரிமைக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் விரும்பினர். இந்த இடதுசாரி வலதுசாரி வேறுபாடுகள் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இருப்பதை இன்று நாம் பார்க்கலாம்.

வலது பக்கமிருந்த ஜிரோன்டின்களுக்கும் இடது பக்கமிருந்த ஜாக்கோபின்களுக்கும் கன்வன்சனில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றது. பாணின் விலையைக் கம்யூன் குறைத்து வைத்திருப்பதை ஜிரோன்டின்கள் தலைவர்கள் தாக்கினர். ஜாக்கோபின் தலைவர்கள் மராத் மற்றும் ரோபஸ்பியர் போன்றவர்கள் சர்வாதிகாரிகள் ஆவதற்கு கனவு காண்கிறார்கள் என அவர்கள் தாக்கினர். செப்டம்பர் படுகொலைக்கான பொறுப்பும் அவர்கள் தலையிற் கட்டப்பட்டது. ஜாக்கோபின்கள் கம்யூனின் பக்கம் சாய்ந்திருந்ததால் கன்வென்சனுக்கு வெளியிலும் அவர்களுக்கு ஆதரவிருந்தது. ஆனால் அவையில் பிளெயினின் முழு ஆதரவையும் அவர்கள் பெற முடியாமல் இருந்தமையால் முடியரசுசார் சக்திகள் தமது செல்வாக்கை நுழைப்பதற்கு வழியேற்பட்டது. இந்நிலையிற்தான் அரசருக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் எனச் சபை சார்பிலும் சான் குய்லோத்துகள் சார்பிலும் ரோபஸ்பியர் கேட்டுக்கொண்டார். 1793 ஜனவரி அரசரின் முடிவு பற்றி நிகழ்ந்த வாக்கெடுப்பில் 780 பேரில் 380 பேர் மரணதண்டனைக்கு வாக்களித்திருந்தனர். இது ஜிரோன்டின்கள் இவ்விசயத்தில் பிளவுபட்டதை எடுத்துக்காட்டியது. 21ம் திகதி ஜனவரி மாதம் அரசரின் தலை சீவப்பட்டது.

இந்நிலையில் பண்டங்களின் விலை உயரத்தொடங்கிவிட்டது. புரட்சியால் பெரும்பான்மை பயனடைந்தவர்களாக இருந்தவர்கள் பூர்சுவாக்களும் சிறு வியாபாரிகளுமே. வறிய மக்களின் நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை. விலைகள் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதை சான் குய்லோத்துகள் வலியுறுத்தினர். பணக்காரர்களிடம் இருந்து வளம் பறிக்கப்பட்டு ஏழைகள் தமது போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ரோபஸ்பியரும் தள்ளப்பட்டார். இது சான் குய்லோத்துகள் மத்தியில் அவர்கள் செல்வாக்கை அதிகரித்தது. இதேவேளை இதே சமயம் கம்யூனின் பிரச்சாரத்தால் நிலவரம் தீவிரமடைவதை உணர்ந்த ஜிரோன்டின்கள் கம்யூனை பலமாக தாக்கிப் பேசினர். ஆனால் அவர்கள் சதிவேலைகளில் இறங்குவதற்குள் முந்திக்கொண்ட சான் குய்லோத்துகள் 1793 மே 13ல் துயிலறி மாளிகையைச் சுற்றி வளைத்து 21 ஜரோன்டின் உறுப்பினர்களையும் இரண்டு ஜிரோன்டின் அமைச்சர்களையும் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து மிகப்புகழ்பெற்ற ஜாக்கோபின்களின் கை ஓங்கிய காலம் ஆரம்பமாகியது.

அடுத்த மாதம் யூன் 24ல் யாக்கோபன்களின் அதிகாரத்தில் கொண்டுவரப்பட்ட 1793ம் ஆண்டுச் சட்டம் அதுவரை மனித உலகு காணாத அதிகூடிய சனநாயக உரிமைகளை வழங்கும் சட்டமாக விளங்கியது. மனிதகுல வரலாற்றில் முதற்தடவையாக சமூகத்தில் இருக்கும் அனைத்து ஆண்களும் வாக்களிக்கலாம் என்ற உரிமையை இச்சட்டம் வழங்கியது. ஆனால் சான் குய்லோத்துகள் இதையும் தாண்டிச் செல்ல விரும்பினர். இதுவரைகாலச் சட்டங்கள் பணக்காரரால் பணக்காரர்களுக்காகவே இயற்றப்பட்டது என்றும் இச்சட்டங்கள் சந்தையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. இச்சட்டத்தை முழுமையாக எதிர்க்காது அதை முன்னேற்றவே அவர்கள் விரும்பினர்.

இருப்பினும் அதிகாரத்தைப் பெற்ற ஜாக்கோபின்கள் பல்வேறு பெரும் பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. உணவுத் தட்டுப்பாட்டுப் பிரச்சினை மற்றும் விலை உயர்வுப் பிரச்சினை என்பவற்றை அவர்களால் தீர்த்து வைக்க முடியவில்லை. உணவுகளை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என வாதிட்டனர் சான் குய்லோத்துகள். முதலாளித்துவத்தின் ஆரம்பகாலத்தில் பதுக்குதல் அதன் குறிப்பிட்ட பண்பாக இருந்ததை பார்க்கலாம். சான்குய்லோத்துகள் மேலதிக எழுச்சிக்கான ஆயத்தங்களைச் செய்தனர். பல்வெறு கலவரங்கள் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 29ம் திகதி கன்வென்சன் மக்சிமம் ஜெனரலை (ஆயஒiஅரஅ புநநெசயட) அமுல்படுத்தியது. இது பெரும்பான்மையான பண்டங்களின் விலையை மட்டுப்படுத்தியது. அதே சமயம் ஊதியம் 50 வீதமாக அதிகரிக்கப்பட்டது. முதல் முறையாக புரட்சியின் விசையை பிரதிசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள் ஜாக்கோபின்கள். இதன்மூலம் ஜிரோடின்களின் ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்பட்டது. இருப்பினும் அவர்களின் எதிர்ப்பு இலகுவில் முறியடிக்கப்படமுடியாததாகவும் இருந்தது.

1793 யூலை 13ல் மராத் முடியாட்சி ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டிருந்தார். பிரான்சின் நாலா பக்கங்கங்களில் இருந்தும் வெளிநாட்டு இராணுவம் படையெடுத்துக்கொண்டிருந்தது. போதாக்குறைக்கு ழேசஅயனெலஇ ஏநனெநநஇ டுலழnஇ வுழரடழn ஆகிய இடங்களில் தீவிரமான மக்கள் யுத்தமே நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் எதிர்புரட்சி வெல்வதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தது. உதாரணமாக துலோனில் அதிகாரம் பிரித்தானிய இராணுவத்திடம் எதிர்ப்புரட்சிக்காரர்களால் கையளிக்கப்பட்டது. அவர்கள் 17ம் லூயியை அரசராக அறிவித்தனர்! இந்நிலையிற்தான் எதிர்ப்புரட்சிக்கு எதிரான ‘பயங்கரம்” (வுநசசழச) கட்டவிழ்த்து விடப்பட்டது.

ஒரு பக்கம் ‘கட்டுப்படுத்திய பொருளாதார” நடவடிக்கைகளை எடுத்த அதே தருணம் அதைப் பாதுகாக்க ‘பயங்கரத்” தாக்குதலை எதிர்புரட்சி நோக்கித் திருப்பவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்குரிய சட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட்டன. ஜிரோன்டின்கள் வேட்டையாடப்பட்டனர். இது ஒரு ஓயாத போராட்டம் என்பதை உணர்ந்து கொண்ட கன்வன்சன்- மகாசபை – ‘அமைதி உருவாகும் வரையும் பிரான்சிக் தற்காலிக அரசு தொடர் புரட்சியில் இருக்கும்” என அறிவித்துக்கொண்டது. எதிர்ப்புரட்சியை எதிர்கொள்ளும் அழுத்தம் காரணமாக 93ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் முழுமையாக அமுல்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது.

இத்தருணத்தில் கிறித்தவ மதநீக்கம் செய்யும் பிரச்சாரமும் ஆரம்பமாகியது. மதத்தை முற்றாக இல்லாதொழிக்கவேண்டும் என்று வாதிடப்பட்டது. அதேபோல் பழைய முடியாட்சிச் சின்னங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை மாற்றும் புதிய கலாச்சார நடவடிக்கைகளை தூண்டுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இதன் பகுதியாக புதிய குடியாட்சிக் கலன்டரும் உருவாக்கப்பட்டது. முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவந்த 22ம் திகதி செப்டம்பர் 1792ல் இருந்து புதிய நாட்காட்டி ஆரம்பிக்கப்பட்டது. இந்த நாட்காட்டியின் படி மாதங்களின் பெயர்கள் காலநிலைக்கேற்ப வழங்கப்பட்டன. புளோரல, தேமிடோர், புருமேர், முதலான காலநிலைகளைக் குறிக்கும் பெயர்களில் மாதங்கள் அழைக்கப்படுவது ஆரம்பித்தது.

இந்நிலையில் விலைக் கட்டுப்பாட்டை நிர்ணயித்த மாக்சிமம் ஜெனரலை கன்வன்சனுக்குள்ளும் வெளியிலும் பூர்சுவாக்கள் கடுமையாக எதிர்த்தனர். இத்தருணம் ரோபஸ்பியர் ஒருபக்கம் தீவிர இடதுசாரியாகுவதும் மறுபக்கம் மிதவாதியாகவும் மாறிக்கொண்டிருந்தார். வலதுசாரிகளை எதிர்த்த சான் குய்லோத்துகள் பக்கமும் பாரிஸ் கம்யூனின் அதிகாரத்தைக் குறைக்க வலதுசாரிகள் பக்கமும் அவர் சரிந்தார். இடதுசாரிகளை நொருக்க கிறித்தவ நீக்கத்துக்கு எதிராகவும் அவர் இணைந்து செயற்பட்டது குறிப்பிடத்தக்கது. இறுதியில் இரண்டு பகுதியினருக்கும் எதிராக அவர் திரும்பினார். புரட்சியின் அனைத்து எதிரிகள் மேலும் பயங்கரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

மதக்கலைப்பு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தல் என முன்னேறிய கட்டத்தில் மக்களை ஒன்றிணைக்கும் சமூக கருவி ஒன்றும் ரோபஸ்பியரிடம் இருக்கவில்லை. தவிர உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி போதாமை வரலாற்றுத் தடையாக இருந்தது. வளரும் பூர்சுவாக்களை எதிர்த்த நிலையில் எவ்வாறு உற்பத்தியைப் பெருக்குவது என்பது பெரும் கேள்வியாக இருந்தது. திட்டமிட்ட பொருளாதார சமூக உற்பத்திமுறைத் திசையில் ரோபஸ்பியர் நகரமுடியாமல் இருந்ததற்கு ஒரு காரணம் அவர் வரலாற்றுக் காலகட்டத்தால் சிறைப்பட்டிருந்தமையே. உற்பத்திச் சக்திகளை சமூகமயப்படுத்தி உற்பத்தியை அடுத்தகட்டத்தை நோக்க நகர்த்தும் அளவுக்கு உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி ஏற்பட்டிருக்கவில்லை. இது பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவது சம்மந்தமாக பல்வேறு சிக்கல்கள் முரண்களை ஏற்படுத்தியது. இந்நிலையிற்தான் எதிர்புரட்சியை முற்றாக முறியடிக்க முடியாத நிலையும் இருந்ததை அவதானிக்க வேண்டும். ஆக எதிர்புரட்சிக்கு எதிரான பயங்கரத்தைக் கட்டவிழ்த்தல் ஒரு ‘யுத்த முறையாக” முன்னெடுக்கப்பட்டது என பின்நாட்களில் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் குறிப்பிட்டிருந்தது. கவனிக்கத் தக்கது. இத்தருணத்திற்தான் மிகப்பெரும்படுகொலைகள் நிகழ்ந்தன. உதாரணமாக ஏநனெநநn ல் வெள்ளைப் படைகள், பிரபுக்கள், மதகுருமார்கள் என ஏறத்தாழ 3000க்கும் மேற்பட்டவர்கள் ஒரே தருணத்தில் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதே சமயம் ஒரு மில்லியனுக்கும் பலமான புரட்சிகர இராணுவம் கட்டப்பட்டது.

இத்தகைய பயங்கரத்தின் அடிப்படையில் அதிகாரத்தை நிறுவிக்கொண்டபடியாற்தான் ரோபஸ்பியரால் பல்வேறு புரட்சிகரக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடிந்தது என்பர். உற்பத்தியைப் பெருமளவுக்கு தேசியமயப்படுத்தும் – சமூகமயப்படுத்தும் – அளவு வரை அவர் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1974ல் கல்விச் சட்டம் அமுல் படுத்தப்பட்டது. பெப்பிரவரி 4 1974ல் அடிமைத்தனம் இல்லாதொழிக்கப்பட்டது. இது பிரஞ்சுக் காலனிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சென் டொமினிக்கில் (இனi;றய கெயிட்டி) பின்பு இது ‘அடிமைகளின் புரட்சிக்கு” வித்திட்டது. வயதானவர்கள், தாய்மார்கள், இயலாதவர்கள், விதவைகள் முதலானவர்களுக்கு இலவச வைத்திய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே சமயம் இத்தருணத்தில் கொல்லப்பட்ட எதிர்புரட்சியாளர்களின் எண்ணிக்கை 30 000 வரை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. பிற்காலத்தில் ப+ர்சுவாக்கள் கொன்று தள்ளிய தொகையிலும் இது சொற்பமென்றாலும் இப்படுகொலைகள் சமூகத்தில் பெரும் கலக்கத்தையும் சோர்வையும் ஏற்படுத்தின.

பயங்கரத்தை உருவாக்குதலை ஒரு யுத்த முறையாக முன்னெடுத்த ரோபஸ்பியர் பின்பு அதையே தன்னைக் காத்துக்கொள்ளத் தொடரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் எனவும் சொல்வர். இதனாலும் தனிப்பட்ட மோதல்களாலும் ஜாக்கோபின் கழகம்உடைந்திருந்தது. புதிய புரட்சிகரவாதிகளால் பலமாகக் கட்டப்பட்ட இராணுவம் எல்லைப் புறங்களில் வெற்றிகாணத் தொடங்கியிருந்தது. இவ்வெற்றிகளுக்கூடாக பிரபலமடைந்த முன்னாள் ஜாக்கோபின் தான் நெப்போலியன் போனபார்ட் (). என்ற ஜெனரல். எல்லைகளின் வெற்றியால் அபாயம் குறைந்த கையோடு பூர்சுவாக்களின் அழுத்தம் மீண்டும் ஆரம்பித்தது. இத்தருணத்தில் பாரிஸ் கம்யூனும் ரோபஸ்பியர்களின் ஆதரவாளர்களால் நிரம்பி வழிந்தது. அவர்கள் பூர்சுவாக்களின் அழுத்தத்தால் ஆட்டம்காணத் தொடங்கியிருந்ததன் பகுதியாக மாக்சிமம் ஜெனரல் திருத்தம் செய்யப்பட்டு ஊதியம் குறைக்கப்படும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது தொழிலாளர் கோபத்தைக் கிளப்பியது. பூர்சுவாக்கள் ஊதிய உழைப்பாளிகளை எதிர்க்க இராணுவத்தைத் தயார் படுத்திய அதே வேளை ரோபஸ்பியர்களையும் முடிவுகட்ட இரகசியத் திட்டங்களைத் தீட்டினர். தேர்மிடோர் மாதம் 9; திகதி ரோபஸ்பியர் திடீரெனக் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து நிகழ்ந்த எழுச்சிகள், யுத்தப் படுகொலைகள் என்பவற்றால் மிகவும் சோர்வடைந்திருந்த மக்கள் ரோபஸ்பியர் காலத்தில் பல முன்னேற்றங்களை அனுபவித்தனர். மேலதிக புரட்சிகர கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதே பல்வேறு புரட்சிகரச் சக்திகளின் கோரிக்கைகளாக இருந்தது. பூர்சுவாக்களின் அழுத்தத்தில் பொருளாதாரத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராதது மட்டுமின்றி ரோபஸ்பியர் ஊதியக்குறைப்பு விலையுயர்வு நடவடிக்கைகளையும் அனுமதித்தது மக்கள் மத்தியில் மேலதிகச் சோர்வை ஏற்படுத்தியிருந்தது. கம்யூனிச சமூகத்துக்காக வாதிட்ட பாதபேவ் (டீயடிநரக) போன்றவர்கள்கூட ரோபஸ்பியர் நீக்கப்பட்டால் புரட்சி முன்னேறும் என்ற கருத்தைக் கொண்டிருக்கும் நிலமையிருந்தது. இந்தச் சூழ்நிலையைச் சரியாகப் பாவித்துக்கொண்ட பூர்சுவாக்கள் தக்க தருணம் பார்த்து மிகத் துல்லியமான தாக்குதலைச் செய்து ரோபஸ்பியரைக் கைது செய்தது மட்டுமின்றி உடனடியாக அவரைக் கொலையும் செய்தனர். தேமிடோர் மாதம் 10ம் திகதி ரோபஸ்பியரும் ஏனைய 18 பேரும் தலை துண்டாடப்பட்டனர். அடுத்தநாள் 71 பேர் கொல்லப்பட்டனர். பிரான்சில் நிலப்பிரபுத்துவத்துக்கு நிரந்தர முடீவு கட்டி சனநாயகத்தை நிறுவுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வரலாற்றைச் சமைத்தவர்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

ஆரம்பத்தில் இந்நடவடிக்கை புரட்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வழியேற்படுத்தும் எனத் தவறான கணக்குப் போட்டிருந்தனர். அதற்கு மாறாக இதிலிருந்து பூர்சுவாக்களின் எதிர்ப்புரட்சி எழுச்சிகொள்ள ஆரம்பித்தது. தேமிடோரியன் எதிர்ப்புரட்சி என இது அழைக்கப்படுகிறது. அதே மாதம் அவசர அவசரமாக பல்வேறு புரட்சிகரச் சக்திகள் வேட்டையாடப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து குடியாட்சி தனிச்சொத்துடமையாளர்களின் குடியாட்சியாக விரைவில் மாற்றப்பட்டது. தனிச் சொத்துடமையை இல்லாமற்செய்ய சான் குய்லோத்துகள் ஆயிரக் கணக்கில் உயிரைக் கொடுத்துப் போராடியது விரைவாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மாக்சிமம் ஜெனரல் உடனடியாக நிறுத்தப்பட்ட விலைகள் உயர்வு அனுமதிக்கப்பட்டது. இயேசுவின் பெயரால் வெள்ளை இராணுவம் தனது பயங்கரத்தைக் கட்டவிழ்த்தது. எதிர்ப்பின் பலவீனத்தில் பூரித்த பூர்சுவாக்கள் 1794 டிசம்பரில் மாக்சிமம் ஜெனரலை முற்றாக இல்லாதொழித்தனர். இதைத் தொடர்ந்து புரட்சி ஆரம்பித்த காலத்துக்கு முந்தியிருந்த நிலைக்கு விலைகள் உயரவும் – ஊதியம் குறையவும் செய்ததால் மீண்டும் வறுமை உக்கிரமடைந்தது.

இதேவேளை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த புரட்சியாளர்களை சிறைக்குள் வைத்தே கொல்லும் நடவடிக்கைகளை முடியாட்சி ஆதரவாளர்கள் முடுக்கிவிட்டனர். பாரிசில் புதிய பணக்காரர் தோன்றத் தொடங்கினர்.

இந்நிலை உழைக்கும் மக்கள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியது. மூன்றாம் ஆண்டு ஜெமினால் அன்று (12 புநசஅiயெட – 1 யுpசடை 1795) சான் குய்லோத்துகள் மீண்டும் ஒரு எழுச்சியை முன்னெடுத்தனர். ‘பாண். பாண்” என்றும் ’1973 சட்டத்தை மீண்டும் கொண்டுவா” என்ற கோசத்துடனும் தெருவில் இறங்கிய இவர்களை பார்த்து அச்சம் கொள்ளும் நிலையில் பூர்சுவாக்கள் இருக்கவில்லை. சான் குய்லோத்துகளிடம் ஏற்கனவே அடிவாங்கிய அனுபவத்தால் அவர்களை எதிர்க்க பூர்சுவாக்கள் தமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டனர். ஒன்றுகூடி எழுச்சியை முடக்கினர்.

1793ம் ஆண்டுச் சட்டத்தையும் தாண்டிச் செல்லும் நோக்குடன் ரோபஸ்பியர் நீக்கத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தவர்கள் தற்போது மீண்டும் அச்சட்டத்தைக் கொண்டுவரச் சொல்லி கோரிக்கை வைக்கும் அளவுக்கு பின் தள்ளப்பட்டதை அவதானிக்கவும். இருப்பினும் இத்தருணம் இவர்களை வழிநடத்த யாரும் இருக்கவில்லை. ரோபஸ்பியர் காலத்தில் கொண்டுவரப்பட்ட உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டது. மீண்டம் வறுமை எங்கும் ஆக்கிரமித்தது. பிச்சை எடுப்பவர்களின் தொகை அதிகரித்தது. தெருக்களில் மக்கள் பட்டினியால் செத்துக்கிடக்கும் அளவுக்கு வறுமையின் கொடுமை அதிகரித்தது. தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

1795ம் ஆண்டு வௌ;வேறு காலப்பகுதிகளில் பல்வேறு எழுச்சிகள் நிகழ்ந்தன. இருப்பினும் எல்லாக் கட்டத்திலும் எண்ணிக்கையில் அதிகமான படையினர் அவர்களைச் ச+ழ்ந்துகொண்டனர். எழுச்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கொல்லப்பட்டனர். செயின் அந்துவானில் (ளுயiவெ-யுவெழiநெ) நிகழந்த முக்கிய எழுச்சி கோரமாக முடக்கப்பட்டது தோல்வியை ஆழமாகப் பதிந்த திருப்புமுனையானது.

பஸ்ரிலின் வீழ்ச்சி எவ்வாறு புரட்சியின் தொடர்ச்சியை உந்தித் தள்ளியதோ அதேபோல் இந்த எழுச்சியின் தோழ்வி எதிர்ப்புரட்சியின் பலத்தைக் கூட்டி மக்கள் மத்தியில் சோர்வையும் நம்பிக்கையின்மையையும் பலப்படுத்தியது. சந்தர்ப்பத்தை சரியாக உபயோகித்து இராணுவம் பாரிஸ் மக்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டது. சான் குய்லோத்துகள் ஈவிரக்கமின்றி வேட்டையாடப்பட்டனர். உதாரணமாக ஒரு கிழமைக்குள் மட்டும் 1200 பேர் கைது செய்யப்பட்டனர். 6 கமிசன் உறுப்பினர்கள் உட்பட 149 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து முடியாட்சி ஆதரவாளர்கள் முன்னுக்கு வரத்தொடங்கினர். 17ம் லூயியாகவும் பிரஞ்சு மன்னராகவும் அறிவித்துக்கொண்ட வாரிசு 24 ய+ன் 1795ல் அனைத்துப் புரட்சிகரவாதிகளுக்கும் தண்டனையை அறிவித்தது. இந்நிகழ்வுகள் பூர்சுவாக்களுக்கு நடுக்கத்தை உண்டுபண்ணியதால் அவர்கள் மீண்டும் இடதுசாரிகளின் உதவியை நாடவேண்டி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஜாக்கோபின்கள் பலர் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு எதிர்ப்புரட்சியும் புரட்சிகர சக்திகளும் மாறி மாறி தமது பலத்தைக் காட்டிக்கொண்டிருந்த நிலையில் இராணுவத்தின் பலமும் வளர்ந்து கொண்டிருந்தது. மோதிக்கொண்டிருந்த இரண்டு வர்க்கங்களுக்குமிடையில் நிரந்தர வெற்றி சாத்தியமில்லாத நிலையில் இராணுவப் பலம் சார்ந்த ஒரு சக்தி முன்னுக்கு வருவது தவிர்க்க முடியாததாயிற்று.

1795 அக்டோபர் 5ல் முடியாட்சிகள் அதிகாரத்தைப் பிடிக்க செய்த பூர்சுவாக்களுக்கு மேலும் பயத்தை உண்டு பண்ணியது. இடதுசாரிகள் சாராத அதே சமயம் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் ஒரு பலமான சக்தி தமது சார்பில் அதிகாரத்தை நிறுவுவது பூர்சுவாக்களுக்குத் தேவையாக இருந்தது. ஆனால் அதே சமயம் அவர்கள் நெப்போலியன் போன்ற முன்னாள் ஜாக்கோபின்கள் அதிகாரத்தைப் பிடிப்பதையும் விரும்பியிருக்கவில்லை. தம்மைக் காத்துக்கொள்ள அவர்கள் மீண்டும் இடதுசாரியம் நோக்கிச் சரியவேண்டியிருந்தது.

இத்தருணத்தில் வளர்ச்சியடைந்த சமத்துவவாதிகளின் சூழ்ச்சி (ஊழnளிசையஉல ழக நஙரயடள) முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியது. கம்யூனிச சமுதாயத்தை இவர்கள் கோரிக்கையாக முன்வைத்தனர். கம்யூனிச கமுதாயம் பற்றி – எத்தகைய பொருளாதார முறையை முன்வைத்துச் சமூகம் ஒழுங்கமைக்கப்படவேண்டும் என்பது பற்றி – இவர்களிடம் விஞ்ஞான பூர்வ அறிதல் இருக்கவில்லை. இருப்பினும் புரட்சியால் உந்தப்பட்டு அவர்கள் சமுதாயத்தை மேலும் வளர்ச்சியடைந்த நிலைக்கு நகர்த்தவேண்டும் என விரும்பினர். இவர்களில் முக்கியமானவராக இருந்தவர் பாபேவ் (டீயடிநரக). சான் குய்லோத்துகளின் ஆதரவு இவர்கள் பக்கம் திரும்புவதையும் சான் குய்லோத்துகளை விட மிகத் தீவிரமான எதிர்ப்பு தம்மை நேகக வளர இருப்பதையும் உணர்ந்து கொண்ட பூர்சுவாக்கள் உசாராகி உடனடியாகச் சமத்துவவாதிகளை அடக்குவதில் ஈடுபட்டார்கள். ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்துகொண்டிருந்த புரட்சியின் வரலாற்றில் இருந்து அவர்கள் நிறைய கற்றுக்கொண்டிருந்தார்கள். சமத்துவவாதிகளை முளையிலேயே கிள்ளிவிடும் நோக்கில் அவர்கள் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்டனர். பாபேவும் கைது செய்யப்பட்டு மரண தண்டணை வழங்கப்பட்டார்.

எதிர்ப்புரட்சிக்கெதிரான போராட்டத்தில் இருந்த கற்றுக்கொண்டு வரலாற்றில் முதன் முறையாக கம்யூனிசத்தை நோக்கிப் புரட்சிகரச் சக்திகள் நகர்ந்தது கவனத்திற் கொள்ளப்படவேண்டியது. முடியாட்சி ஆதரவாளரான கன்வன்சன் உறுப்பினர் அனுப்பிய வேவு பார்க்கும் ஒருவர் மூலம் இவர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டனர். இந்த வேவு பார்த்தவர் இவர்கள் மத்தியில் ஊடுருவி அனைவரையும் காட்டிக்கொடுத்தார். இவர்கள் ஒடுக்கப்பட்டது மீண்டும் வலதுசாரியம் நோக்கி அரசியலைத் திருப்பியது. நெப்போலியனின் வெற்றியை வைத்துப் பிரச்சாரித்தபடி பிரச்சாரித்தனர் தேர்மிடோரியன்கள். ஆனால் 1797ல் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி அவர்களைப் பலவீனப்படுத்தியது. இடதுசாரிகளின் பலமும் முறியடிக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவம் பலமான சக்தியாக முன்னுக்கு வந்தது. நெப்போலியன் தனது வெற்றிகளாலும், பூர்சுவாக்களின் பிரச்சாரங்களாலும் மக்கள் மத்தியில் மிகுந்த புகழ் பெற்றிருந்தான். இந்த ஆதரவை பாவித்தும் இராணுவ பலத்தை உபயோகித்தும் பாரிசைக் கைப்பற்ற முடிவு செய்தான் நெப்போலியன். 1797 செப்டம்பர் 3 – 4ம் திகதிகளில் (17இ18 குசரஉவனைழச) இராணுவம் பாரிசை ஆக்கிரமித்தது.

உடனடியாக முடியாட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அதிகாரத்தைப் பிடிப்பதற்கான சூழ்ச்சியில் ஈடுபட்டிருந்தது தெட்டத் தெளிவாகத் தெரிந்தது. முன்பு சமத்துவவாதிகளை ஊடுருவி அழித்த உறுப்பினர்களும் முடியாட்சி ஆதரவாளர்களுடன் ச+ழ்ச்சியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அதனால் அவர்கள் நாட்டை விட்டுத் தப்பி ஓடினர். முடியாட்சிக்கோ அல்லது 1793ம் ஆண்டுச் சட்டத்திற்கு ஆதரவாகவோ யாராவது இயங்கினால் அவர்கள் கண்ட இடத்தில் சுடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. 1799ல் நடந்த தேர்தலில் பின் ஜாக்கோபின்களின் செல்வாக்கு சற்று அதிகரித்தது. பூர்சுவாக்கள் பலர் தமது எதிர்ப்பைக் காட்ட நாட்டை விட்டு வெளியேறினர் – முதலீடு செய்ய மறுத்தனர். அதைத் தொடர்ந்து மீண்டும் ஜாக்கோபன்களின் கலகம் முடக்கப்பட்டது. இத்தருணத்தில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாட்சியானர்கள் இன்னுமொரு சூழ்ச்சியில் ஈடுபட்டனர். நியமிக்கப்பட்ட ‘டிரெக்டர்’ (னசைநஉவழசள) பதவியில் இருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமது கைகளில் அதிகாரத்தைக் குவிக்கத் தொடங்கினர். இந்த டிரக்டர்களில் ஒருவராக இருந்த நெப்போலியன் ஒட்டுமொத்தமாக அதிகாரத்தைத் தனது கைகளில் குவிப்பதற்கு ஆயத்தங்களைச் செய்தான். புழுமேர் மாதம் 18ம் திகதி பொனபார்ட் அதிகாரத்தை தன்வசப்படுத்தினான். இது நடந்து மூன்று கிழமைக்குள் புதிய சட்டம் அமுலுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து எஞ்சியிருந்த உரிமைகளும் பறிக்கப்பட்டன. பெண்களுக்கான உரிமைகள் மேலும் மோசமாக முடக்கப்பட்டது. கடும்பிரச்சாரங்களுடன் ஒரு சம்பிரதாயத்துக்காகத் தேர்தலை வைத்து மக்கள் ஆதரவு என்ற போர்வையில் சர்வாதிகாரத்தையும் கைப்பற்றினான் நெப்போலியன். 1800 களிலும் பின்பு சட்டத்தை மாற்ற என 1802 களிலும் வாக்கெடுப்பின் மூலம் மாற்றங்கள் திணிக்கப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்டது. போனபார்ட்டிசத்தின் முக்கிய பங்காக இந்நடவடிக்கை இன்றும் தொடர்வதைக் காணலாம். இத்தகைய பண்புள்ள அரசுகளை இன்று போனபார்ட்டிச அரசுகள் என்று நாம் வர்ணிக்கிறோம். வர்க்கங்களுக்கிடையிலான முரண்கள் இறுகிய நிலையில் போனபார்ட்டிச பண்புள்ள அரசுகள் தோன்றுவதைக் கவனிக்கலாம். போனபாட்டிசத்தின் எழுச்சி நெப்போலியன் என்ற ஒரு தனி மனிதன் மட்டும் சம்மந்தப்பட்டதல்ல என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது. முடியாட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் முழு எதிர்ப்புடன் பூர்சுவா வர்க்கத்தின் சேவகனாக போனபார்ட் இருந்ததைக் கவனிக்க வேண்டும்.

இதன் பின் நெப்போலியன் தன்னை மன்னராக அறிவித்துக்கொண்டதும் பல்வேறு யுத்த முன்னெடுப்புகள் நிகழ்ந்ததும் பின் வரலாறு.

1789ல் பாரிஸ் மக்களின் எழுச்சியுடன் ஆரம்பித்த புரட்சி உலகை மாற்றியமைத்த ஒரு நிகழ்வு. இன்றுவரை அரசியல் மற்றும் சமூகவியல் ஆய்வாளர்களுக்கு இது ஒரு ஆய்வுக்களமாக இருக்கிறது.

1992ல் ஜிரோன்டின்கள் ஆட்சியைப் பிடித்தது. ஆகஸட் 10ல் சான் குய்லோத்துகளின் உந்துதலில் இரண்டாம் கட்டப் பரட்சி நிகழ்ந்தது. 21 செப்டம்பரில் முடியாட்சி இல்லாதொழிக்கப்பட்டது. 1793 மே- யூனில் ஜிரோன்டின்கள் கவிழ்க்கப்பட்டது. 1793 யூலையில் இருந்து 94 யூலை வரை இருந்த ஜாக்கோபின்களின் சர்வாதிகாரமும் அப்போது நிகழ்ந்தவைகளும் – பின்பு பொனபார்ட் ஊடாக எதிர்புரட்சி வெற்றி பெற்றது. அதன்மூலம் பூர்சுவாக்கள் இறுதி வெற்றி பெற்றது எனப் பிரஞ்சுப் புரட்சியின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருந்த போக்குகளை நுணுகி ஆராய்வது இன்ற சமுதாயத்தைப் புரிந்து கொள்ள நமக்கு உதவும். முக்கியமாகத் துனிசியா எகிப்து ஆகிய நாடுகளில் வெடித்துள்ள புரட்சியின் போக்குகளையும் அதன்நுணுக்கங்களையும் புரிந்துகொள்ள இந்த வாசிப்பு அத்தியாவசியமானது. வாசிப்பவர்கள் புரட்சிகளுக்கிடையில் இருக்கும் ஒற்றுமைகளையும் புரட்சியின் போது எழும் பொதுப் பண்புகளையும் கண்டு வியப்படைவது தவிர்க்க முடியாதது. ஆக இந்த அறிதல்களில் இருந்து நாம் இன்றைய வரலாறை எப்படி அணுகுவது என்ற படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

அன்று ஆரம்பித்த புரட்சி தோற்றுவிட்டதா? பூர்சுவாக்கள் நிரந்தர வெற்றி பெற்றுவிட்டார்களா? என்பது எமக்கு இன்றும் முக்கியமாக இருக்கும் கேள்விகள்தானே.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top