Chennai
பெருமுதலாளிகளுக்கு எதிராகப் போராடும் போராட்ட சக்திகளை அரச வன்முறை ஒடுக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதனை முறியடிக்கும் வரை நமது குரலும் விண்ணதிர முழங்கும் என்பதைத் தோழமையுடன் பறைசாற்ற வேண்டிய தருணம் இது.
தோழர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி அன்று காவல்துறையால் காணாமல் செய்யப்பட்டார். இன்றுடன் 27 நாள் ஆகிறது இதுவரை எங்கு இருக்கிறார் என்பதை அவரது குடும்பத்தினருக்குக் கூட தெரியப்படுத்தாமல் அடைத்து வைத்திருப்பது முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரான போக்கு.
Bangalore
பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த ஜனநாயக சக்திகள் முகிலன் தோழரை மீட்கக் கோரிக்கை வைத்துள்ளனர்,கடந்த 2 ம் தேதி ஐம்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் சேர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இருந்தும் இதுவரை அரசு தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் சொல்லாமல் காலம் தாழ்த்தி வருவது மிகவும் கண்டனத்துக்குரியது.
சமுக வலைத்தளத்தில் கூட அனைத்து அமைப்பு சார்ந்த தோழர்கள் அவர்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்,
London
ஏற்கனவே கடந்த மாதம் 24 ம் தேதி லண்டனிலிருந்து நமது தோழர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் மற்றும் சென்னையிலிருந்து புதிய சோசலிச இயக்கத் தோழர்களும் “தோழர் முகிலன் எங்கே?” என்ற வாசகத்துடன் தங்களது எதிர்ப்பை தெரிவித்து உள்ளோம். பெங்களூருவில் உள்ள தோழர்களும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.
இன்று மீண்டும் “தோழர் முகிலன் எங்கே?” என்ற வாசகத்துடன் சென்னையில் உள்ள புதிய சோசலிச இயக்க தோழர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தபோது. முகிலன் தோழரை மீட்பதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து அவரை தமிழ்நாடு அரசு விடுவிக்கும் வரை தொடர்ந்து குரல்கொடுக்க வேண்டும்…
தோழமையுடன் புதிய சோசியலிச இயக்கம்