Home / பார்வை / சி.ஏ.ஏ. என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆரை அகற்றவும்!

சி.ஏ.ஏ. என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆரை அகற்றவும்!

குடியுரிமை திருத்த சட்டம் வலுக்கட்டாயமாக அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு தரப்பட்ட மக்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சட்டத்திருத்தம் அமல்படுத்தியதில் இருந்து ஏராளமான பொதுமக்கள் போராட்டத்தை கையில் எடுத்து உள்ளனர். என்ன செய்வது என்று அறியாத அரசும் காவலர்களும் இளம் போராளிகள் மீது வன்முறையை கட்டவிழ்க்கின்றனர். போராட்டத்திற்கு தடை விதித்து வருகின்றனர்.

கவுகாத்தியில் பாகுபாட்டை எதிர்த்து துவங்கிய இப்போராட்டம், அசாமில் 19 லட்ச மக்களை சட்டவிரோத குடியேறிகள்/அகதிகள் என்ற நிலைக்கு தள்ளிய குடிமக்களின் தேசிய பதிவுக்கு (என்.ஆர்.சி) எதிராக துவங்கிய இப்போராட்டம் பின்னர் தேசம் முழுவதும் பரவியது. இதில் பெரும்பாலும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள், வங்காளிகள் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

அசாமில் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின் போது சட்டவிரோத குடியேறிகள் என்று கருதப்பட்ட மக்களில் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வங்காள இந்துக்களாக இருந்தனர். இந்துக்களை மட்டும் காப்பாற்றும் நோக்கில் அரசு என்.ஆர்.சியை கைவிட்டு. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை (சி.எ.பி) 2016ம் ஆண்டு தாக்கல் செய்தது, ஆனால் இதை நிறைவேற்ற பி.ஜே.பி அரசுக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அப்பொழுது பெரும்பான்மை இல்லை.

இந்த சர்ச்சைக்குரிய மசோதா இந்துக்களுக்கு மட்டும் ஆதரவாகவும் இஸ்லாமியர்களுக்கு எதிர்ப்பாகவும் இருக்கிறது. இச்சட்டத்திற்கு ஒரு பாகுபாடு அற்ற நிறத்தை அளிப்பதற்கு சூட்சமமாக கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், மற்றும் சமணர்களை இணைத்து இருக்கிறார்கள். ஆனால் பாராளுமன்றத்தில் இம்மசோதா கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட போதும் ப.ஜ.கவின் பெரும்பான்மையை பயன்படுத்தி 2019ம் ஆண்டு டிசெம்பர் 9ம் தேதி இம்மசோதைவை நிறைவேற்றினர்.

இம்மசோதைவை நிறைவேற்றுவதற்கு முன்னரே ப.ஜ.க. அரசு இஸ்லாமியர்கள் இடையே எவ்வித சமூக உரிமைகளும் இல்லாத “சட்டவிரோத” மற்றும் இரண்டாம் தர குடிமக்களாக” மாறபோகும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.

கொடூரமான இம்மசோதாவை நிறைவேற்றிய உடன் இந்தியாவின் 14 சதவிகிதத்தினர், ஏறக்குறைய 20 கோடி இஸ்லாமியர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எண்ணி வெகுண்டெழுந்தனர். பிற மத இனக்குழுக்களுடன் இனைந்து 72 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய இஸ்லாமியர்களுக்கு இன்று இந்நிலை ஏற்பட்டுள்ளது.

தங்களின் மத நலனை கைப்பற்றி கொள்ள வார்த்தைகளை திரித்து, பொய்யாக பிரச்சாரம் செய்யும் வித்தையை கற்றுவைத்திருக்கும் ப.ஜ.க. அரசு, நாட்டின் பிரிவினை காலகட்டத்தில் இரு நாடுகளின் கோட்பாடு குறித்த தவறான தகவலை இப்போது கட்டவிழ்த்து இருக்கின்றது. இது அடிப்படையில் பிழையான கருத்து என்றபோதிலும், இந்து அடிப்படைவாதிகள் மற்றும் அக்காலக்கட்ட இஸ்லாமிய வகுப்புவாதிகளால் இக்கருத்து தீவிரமாகப் பின்பற்றப்பட்டது..

கடந்த 30 ஆண்டுகளில் புகழடைந்து அதிகாரத்தை கைப்பற்றியுள்ள பாஜக தவறான தகவல்களை முறையான முறையில் பரப்பி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அரை நூற்றாண்டு காலமாக “இந்து கலாச்சாரம்” என்ற பெயரில் ஒரு பிரச்சாரத்தை நடத்தியுள்ளதுடன், “அவர்களின்” அரசாங்கத்தின் அதிகாரத்துடன், இறுதியாக ஒரு இந்து தேசத்தை கட்டியெழுப்பி இருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம்

பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தின் மூலம் பெரும் குடியுரிமை திருத்தங்களை கொண்டுவந்துள்ளனர். இதனால் இஸ்லாமியர்களுக்கு தங்கள் குடியுரிமையை நிலைநாட்டுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இது ‘சோசலிச, மதச்சார்பற்ற மற்றும் சகோதரத்துவ’ தேசம் என்ற இந்திய குடியரசின் அரசியலமைப்பை முற்றிலுமாக மீறுகிறது. முதலாளித்துவ நாடக இருந்தாலும் சாதி புரையோடி போயிருக்கும் காரணத்தினால் இந்த இலட்சியங்கள் ஏற்கனவே சிறுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. சுதந்திரம் பெற்ற 72 ஆண்டுகளுக்குப் பிறகும், அது ஒவ்வொரு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அரங்கிலும் அப்பட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு நிலைத்திருக்கிறது.பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலின பாகுபாடு ஆகியவை வழக்கமான நிகழ்வாகவும் அரசாங்க தரவுகளின் ஒரு விஷயமாகவும் குறைக்கப்பட்டுள்ளன, அவற்றை ஒழிப்பதற்கான உண்மையான திட்டம் எதுவும் இல்லை.

பெயரளவிலான இந்த ஜனநாயக நாட்டில் பாராளுமன்றங்களிலும் ஒட்டுமொத்த மக்கள்தொகையிலும் தங்கள் எண்ணிக்கையிலான பெரும்பான்மையின் மீது சவாரி செய்யும் தற்போதைய ஆட்சியாளர்கள், மக்களை குறுங்குழுவாத போராட்டக்குழுக்களாக மாற்ற விரும்புகிறார்கள். இந்நிலையில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் பணக்காரர்களும் உயர் சாதியினரும் நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் சலுகைகளையும் தொடர்ந்து தங்கள்வசம் வைத்துக்கொள்கிறார்கள்.

சந்தேகத்திற்கு இடமின்றி இந்த புதிய பாராளுமன்ற நடவடிக்கை வலதுசாரி இந்துத்துவ படைப்பிரிவின் ஒரு நடவடிக்கை ஆகும். அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளையும், குறிப்பாக 20 கோடி முஸ்லிம்களின் உரிமைகளை அப்பட்டமாக பறிப்பதற்கு அவர்கள் தயாராக உள்ளனர். இச்சட்டத்திட்டங்களுக்கு உட்படாவிட்டால் அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறுவார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை பெரும்பான்மையினரின் தயவில் வாழவைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.

பா.ஜ.க.வின் இந்த செயல், மந்தமான பொருளாதாரத்தில் உள்ள சிரமங்களிலிருந்து கவனத்தைத் திசை திருப்பி, மக்களுக்குள் இடத்தின் அடிப்படையிலான ஒரு சண்டையை உருவாக்கும் நோக்கத்துடன் இருக்கிறது. இந்த நடவடிக்கை ஏற்கனவே “பகிர்வு 2.0″ என்று பெயரில் அழைக்கப்படுகின்றது.

ஆனால் இப்போது, வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்த நிலையில், பாஜக நிர்வாகம் அளவை தாண்டியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இப்பொழுது இந்தியாவின் வீதிகளிலும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினரின் அனைத்து அடுக்குகளிலிருந்தும் போராட்டக்காரர்களை ஏந்தியுள்ளது. இதில் பெரும்பாலானோர் இளம்வயதினராக இருக்கின்றனர். பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு இயந்திரங்கள் வரலாறுகானாத வன்முறையை கட்டவிழ்த்திருக்கின்றனர், இருப்பினும் எதிர்ப்புகள் குறைவதற்கான அறிகுறியே இல்லை, குறிப்பாக பாஜகவும் அதன் நட்பு சக்திகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கூட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

புதிய காலம்

புதிய சோசலிச மாற்று எனும் மார்க்சிச இயக்கம் இந்த தன்னிச்சையான ஆர்ப்பாட்டங்களை பொதுமக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வாக பார்க்கின்றார்கள். குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பெரும்பாலான பாரம்பரிய வழிகள் தோல்வியடைந்து இருக்கும் இவ்வேளையில் இதை நாங்கள் புதிய காலகட்டமாக காண்கிறோம். மோடி ஆட்சியின் கீழ் இந்தியாவின் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்த பணமதிப்பிழப்பு, அதிகரித்த சரக்கு மற்றும் சேவை வரி, 370 வது சட்டத்தை ரத்து செய்து காஷ்மீரில் ஏற்படுத்திய முடக்கம், 1992 ல் இந்துத்துவ குண்டர்களால் அழிக்கப்பட்ட பாபர் மசூதி மீதான துரோக தீர்ப்பு போன்ற இன்னல்களுக்கு இந்த போராட்டங்கள் பதிலாக அமைந்துள்ளது.

ஒரு பெரும்பான்மை தேசத்தை” உருவாக்குவதற்கான நோக்கத்தில் இதுவரை புறக்கணிக்கப்பட்ட தேசிய கேள்வியை அரசாங்கம் கையில் எடுத்துள்ளது. சிஏஏவிற்கு பிறகு பல்வேறு தேசிய இனங்கள் அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்து அதற்கு எதிராக வெளிப்படையாக அவர்களின் அரசியல், சமூக அல்லது மத இணைப்புகளைப் புறக்கணித்து வருகின்றன. மிக நீண்ட காலத்திற்குப் பிறகு, இந்திய மக்கள் – பல தேசங்களின் சிறைச்சாலை – ஒரு பொதுவான காரணத்தையும் எதிர்த்துப் போராட ஒரு பொதுவான எதிரியையும் கண்டறிந்துள்ளனர்.

விரும்பிய முடிவுகளை அடைய வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் அடிப்படையில் அவசியமாக இருக்கிறது, நாம் பின்னால் நின்றுகொண்டு இயக்கங்கள் இதை முடிவுக்கு கொண்டுவரும் என்று எண்ண முடியாது. ஒரு சாத்தியமான மாற்றத்தை உருவாக்க மற்றும் எதிர்ப்பை வழிநடத்த ஒரு தந்திரம், திட்டம் மற்றும் கோரிக்கைகள் தேவை.அதிகபட்ச பங்கேற்பு மற்றும் ஒற்றுமைக்கு, பாதிக்கப்பட போகும் நபர்களின் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளும் கோஷங்கள் தேவைப்படுகின்றன.

திட்டம்

சிஏஏவின் நெருக்கடியின் மையத்தில் தீர்க்கப்படாத மற்றும் பரபரப்பான தேசிய கேள்வி உள்ளது. வடக்கிலிருந்து தெற்கு மற்றும் கிழக்கு முதல் மேற்கு வரை உள்ள இந்திய மக்களின் அடிப்படை பிரச்சனைகள் கவனம் செலுத்தப்படாமல் தீர்க்கப்படாமல் இருக்கின்றது. நிலப்பிரபுத்துவத்துடன் ஒன்றாக இணைந்திருக்கும் முதலாளித்துவம், தொழிலாள வர்க்கமும் மக்களும் சமூகத்தில் எதிர்கொள்ளும் அனைத்து முக்கியமான பிரச்சினைகளையும் தீர்க்க முற்றிலும் தவறிவிட்டது. குடியுரிமை இருக்கிறதோ இல்லையோ இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் கடுமையான வறுமையை எதிர்கொள்கிறார்கள், வளரும் நாடு என்று அழைக்கப்படும் போதிலும் மோசமான வேலையின்மையை அனுபவிக்கின்றனர்.சுகாதார வசதிகள், போதுமான ஊட்டச்சத்து, சுத்தமான காற்று மற்றும் நீர் ஆகியவை சமூகத்தில் வசதிபடைத்த பிரிவுகளுக்கு மட்டுமே கிடைக்கின்றன.

பாஜக நிர்வாகத்தின் பல்வேறு தீங்கு விளைவிக்கும் கொள்கைகளுக்கு எதிராக மாணவர்கள், பெண்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தி அதிகமாக உள்ளது. சமீபத்திய கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம்

பாஜக நிர்வாகத்தின் பல்வேறு தீங்கு விளைவிக்கும் கொள்கைகளுக்கு எதிராக மாணவர்கள், பெண்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தி அதிகமாக உள்ளது. சமீபத்திய கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம், ஹைதராபாத் கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டம், இதனை தொடர்ந்து போலிசார் நான்கு குற்றவாளிகளைக் கொன்றது ஆகியவற்றை பார்க்கும் போது இது வெளிப்படையாக தெரிகின்றது. அணைத்து பிரச்சனைகளிலும் எதிர்ப்புக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சமூக ஊடகங்கள் முழுவதும் கண்டனங்களால் நிரம்பியுள்ளன, இந்த நிலை தெளிவாக மக்களிடையே நிலவும் அதிருப்தியை குறிக்கிறது. இப்பொழுது இந்த ஆட்சியை எதிர்த்து தொடர்ச்சியாக போராடும் ஒரு தலைமை தான் நமக்கு தேவைப்படுகிறது.

தற்போதைய போராட்ட அலை உழைக்கும் மக்களின் அனைத்து தேவைகளையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு குரலாகவில்லை. தொழிலாள வர்க்கத்தின் போர் மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சி மட்டுமே அந்த பணியை நிறைவேற்ற முடியும். இந்தியாவின் இடதுசாரி காட்சிகள் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்போராட்டங்களை எடுத்து நடத்தலாம் ஆனால் அவர்களின் வேலைத்திட்டமும் முன்னோக்குகளும் நிகழ்காலத்திற்கு ஏற்றாற்போல் இல்லை. தொழிலாள வர்க்கத்தின் 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளைப் அவர்கள் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. அவர்களின் தவறான கோட்பாடுகளும் முதலாளிகள் மற்றும் நிலஉரிமையாளர்களிடையே முற்போக்கான சக்திகளைத் தேடும் பழக்கமும் தொழிலாள வர்க்கத்தையும் விவசாயிகளையும் முதலாளித்துவ அரசியலில் இருந்து சுயாதீனமாக இயங்கமுடியாததற்கு வழிவகை செய்து இருக்கிறது. ‘குறைவான தீயவாதம்’ என்ற அவர்களின் கருத்து தோல்வியுற்ற முதலாளித்துவ அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு அதை வாழ வைக்கிறது.

தொழிலாள வர்க்கத்தின் தலைவர்களாக இருப்பவர்கள் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் சவால்களையும் தனித்தனி பிரச்சினைகளாகப் பிரிக்க முடியாது, மேலும் ஊதிய சிக்கல் போன்ற அன்றாட பொருளாதார சிக்கல்களில் மூழ்கிவிட முடியாது. சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிரான தற்போதைய கிளர்ச்சிகள் ஒரு வகையில் இந்தியாவில் நிலவும் முக்கியமான தேசிய பிரச்சினைகளின் ஒரு சிறிய அங்கமாகும், இவை பிற்காலத்தில் பெரிய அளவில் வெடிக்கும் அபாயம் உள்ளவை.

தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமைக்காக நிற்கும்போது, மார்க்சிஸ்டுகள் மற்றும் புரட்சிகர சோசலிஸ்டுகள் இந்தியாவின் பரந்த அளவிலான பல்வேறு தேசிய இனங்களின் தீர்க்கப்படாத மொழியியல், இன, மத மற்றும் பழங்குடி மக்களின் துயரங்கள் போன்ற பிரச்சனைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ ஆட்சியின் கீழ், தேசிய கேள்வியை ஒருபோதும் தீர்க்க முடியாது. மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை பின்பற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான, தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையை காப்பாற்றுவதற்காக ஒரு திட்டத்தை வகுக்கும் தேவை உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் ஏற்படும் தன்னார்வ தொழிற்சங்கத்தால் மட்டுமே இப்பகுதியில் உள்ள சிக்கலான தேசிய கேள்விக்கான பதிலை வழங்க முடியும்.

இந்திய இடதுசாரிகளும் பொதுவேலைநிறுத்தமும்

இந்தியாவின் இடதுசாரிகள் குறிப்பாக தொழிற்சங்கங்களில், விவசாயிகள் மற்றும் மாணவர் அமைப்புகளில் மற்றும் பல உழைக்கும் மக்களின் வெகுஜன ஆதரவு கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் துளியும் நம்பமுடியாத நீதித்துறையில் மட்டுமே தங்கள் நம்பிக்கையை வைக்கக்கூடாது. நீதித்துறை அதன் முடிவுகளில் பாரபட்சமாக இருந்ததற்கான நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை, ஆனால் பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நீதிமன்றத்தின் நிலையை பற்றி தெளிவாக உறுத்துகிறது. எல்லாவற்றிற்கும் நீதிமன்றத்தை நாடுவது போராட்டத்தைத் நிலைகுலைய செய்கின்றது. நமது அச்சங்களுக்கு ஏற்றவாறே தீர்ப்பும் உள்ளது – சி.ஏ.ஏ. செயல்படுத்தப்படுவதைத் தடுக்கமுடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முன்வந்து சி.ஏ.ஏ., என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர். நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தை கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது.

கம்யூனிஸ்ட் காட்சிகள் ஒருங்கிணைக்கும் ஜனவரி 8.2020, பொது வேலைநிறுத்தத்தின் பிரச்சார தந்திரம் இது முக்கிய விடயமாக இருக்கலாம். சி.ஏ.ஏ மற்றும் என்.சி.ஆரால் பாதிக்கப்பட்டவர்களின் பங்களிப்பு வெற்றியை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், மோடி ஆட்சிக்கு எதிரான அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கான ஒரு ஊன்றுகோலாகவும் இருக்கும். இந்த வழியில் மட்டுமே பாசிச ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் இயங்கும் மோடி தலைமையிலான பாஜகவின் சக்தியை முடிவுக்கு கொண்டுவர முடியும்.

முதலாளிகளுக்கு பல மில்லியன் டாலர் வணிக வாய்ப்புகள் வழங்கப்படும் அதேவேளையில் அனைத்து விதிமுறைகளையும் மீறி வறுமையை நிலைநாட்டும் ஆட்சிக்கு சவால்விடும் ஒரு அறிய வாய்ப்பாக இது திகழ்கிறது. ஊழலை குறித்து அவர்கள் வாய்கிழிய பேசும் அதே நேரத்தில், பெரும் முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது.

நிச்சயமாக, தற்போதைய இந்த நிலை முந்தைய “மதச்சார்பற்ற” கட்சிகளால் ஏற்பட்ட நிலையாகும், இடதுசாரிகள் ஒருபோதும் பேரழிவுகரமான பொருளாதார கொள்கைகளுக்கு தீர்க்கமான வகையில் சவால் அளிக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, இடதுசாரிகள் தங்களின் வெகுஜன வலிமையை பேரம் பேச மட்டுமே பயன்படுத்தினர். அவர்கள் சரியான முறையில் செயல்பட்டிருந்தால் இந்நேரம் அதீத பலத்தை பெற்றிருக்க கூடும்.

இந்த நாட்டில் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்கும் தற்போதைய ஆட்சிக்கு எதிராக ஒரு வலுவான தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒழுங்கமைக்க புதிய சோசலிச மாற்று தீர்க்கமான நடவடிக்கைகளுக்கான வாதங்களை முன்வைக்கின்றது. தற்போதைய நிகழ்வுகளின் போக்கு ஒரு வர்க்கத்தை கட்டியமைக்கும் ஒரு வாய்ப்பாக நாங்கள் பார்க்கிறோம்.சமுதாயத்தின் பிற ஒடுக்கப்பட்ட பிரிவுகள் – தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக தேசிய சிறுபான்மையினரை முதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தும் ஒரு சக்தியாக ஒருங்கிணைத்து ஒரு செயல்திட்டத்துடன் போராட வேண்டும்.

இந்திய இடதுசாரிகள் பெரும் வாய்ப்புகளை தவறவிட்டிருக்கின்றார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மோடிக்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக ஒரு பிரச்சாரத்தை உருவாக்க அவர்கள் தவறிவிட்டனர். இப்பொழுதுள்ள வாய்ப்பையும் தவறவிட்டால் அது ஒரு அரசியல் தற்கொலைக்கு நிகராகும். புதிய சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை சரியான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய கோரிக்கைகளுடன், இந்திய முதலாளித்துவத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் அதன் வேர்களையும் அழிக்கும் ஒரு தொலைநோக்கு போராட்டமாக உருவாக்க முடியும். இப்பொழுது, இடதுசாரிகள் இந்த சவாலை ஏற்க தயாராக உள்ளனரா எனும் ஒரே ஒரு கேள்வி தான் எஞ்சி இருக்கின்றது.

உழைக்கும் மக்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளை உள்ளடக்கிய ஒரு சோசியலிச கொள்கைகளை கொண்ட ஜனநாயக அமைப்பை கட்டியெழுப்பவேண்டும். இத்தகைய வெகுஜன அமைப்பு முதலாளித்துவத்தை தோற்கடிக்க போராட வேண்டும், தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் அரசாங்கத்தை நிறுவ வேண்டும், அனைவரின் நலனுக்காக ஒரு சோசலிச திட்டமிட்ட பொருளாதாரத்தையும் சமூகத்தையும் கட்டமைக்க வேண்டும்.

சி.ஏ.ஏ. என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆரை அகற்றவும்!

ஒவ்வொரு புலம்பெயர்ந்த/அகதிக்கும் குடியுரிமை இருக்க வேண்டும்.

நாட்டைவிட்டு வெளியேற்றும் செயலுக்கு எதிராக நின்று அரசியலமைப்பு உரிமைகளை காப்பாற்ற வேண்டும்!

விரும்பும் மதத்தை பின்பற்றவும், பின்பற்றாமல் இருக்கவும் சுதந்திரம் வேண்டும்.

இஸ்லாமிய மக்களின் மீது செயல்படுத்தப்படும் அடக்குமுறைக்கு எதிராகவும், அச்சுறுத்தலுக்கு எதிராகவும் நிற்கவும்.

பேச்சு சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு உரிமைக்காக: போராளிகள் மீதான அரசு வன்முறையை கண்டிக்கிறோம்.

போராடும் அனைத்து தேசிய இனங்களுக்கான சுதந்திரத்தை நிலைநாட்டுவோம்.

இந்திய துணைக் கண்டத்தின் சோசலிச கூட்டமைப்பை உருவாக்க போராடுவோம்!

About T

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top