கொரோனா ஒரு வைரஸ் தான்.. முதலாளித்துவமே பெரும் தொற்றுநோய்..
நாட்டில் பாட்டாளி வர்க்கம் உள்ளிட்ட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஸ்தாபனங்களுக்கும் கொரோனா நெருக்கடியையும் அது ஏற்படுத்தவிருக்கும் உலகளாவிய பொருளாதார பேரழிவையும் எதிர்த்துப் போராட பின்வரும் கோரிக்கைகளை -புதிய சோசலிச இயக்கம் அமைப்பைச் சேர்ந்தவர்களால் முன்வைக்கபடுகிறது.
கொரானாவால் ஏராளாமான மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் இவ்வேளை இந்த நெருக்கடியை மேலும் மோசமாக்கும் வேலையைத்தான் முதாளித்துவம் செய்து வருகிறது. உழைக்கும் மக்களாகிய நம்மை கடுமையான மேலதிக பாதிப்பிற்கு உள்ளாக்கி இருக்கும் இந்த அசாதாரண சூழ்நிலைக்கு பேராசை பிடித்த முதலாளி வர்க்கமும் பாஜகவின் வகுப்புவாத ஆட்சியுமே முழு பொறுப்பு.
சோர்ந்து போய் முடங்கி இருப்பதற்கான நேரம் இதுவல்ல.. ஒட்டுமொத்த முதலாளித்துவத்துக்கும் எதிரான வாழ்வா சாவா போராட்டத்துக்காக நம்மையும் நமது தோழமை சக்திகளையும் கூடுமானவரையில் திறம்பட தயார் செய்வதற்கான நேரம் இது…. மீண்டெழுந்து போராடுவோம்!!!
புதிய சோசலிச இயக்கம் – New Socialist Alternative