Home / பார்வை / மோடி அரசின் உழைப்பாளர் சட்டத்தின் மீதான தாக்குதல் ஒழிக!

மோடி அரசின் உழைப்பாளர் சட்டத்தின் மீதான தாக்குதல் ஒழிக!

தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்!

மோடி அரசின் உழைப்பாளர் சட்டத்தின் மீதான தாக்குதல் ஒழிக!

நமது போராட்டத்தைத் தாண்டி இதனை நிறைவேற்ற விடக்கூடாது.

மோடியின் சர்வாதிகார ஆட்சி எரியும் தீயில் எண்ணெயை அள்ளி ஊற்றுவது போன்ற மோசமான நடைமுறையைத் தொடர்கிறது. தற்போதைய நெருக்கடியானது முதலாளித்துவ அரசமைப்பின் இயலாமையின் விளைவேயாகும். சமூகநலத்திட்டம் என்ற கருத்தையே வழக்கில் இருந்து நீக்க, காங்கிரஸ் கட்சி கடந்த 60 ஆண்டுகளாக முயன்று வந்த வேளையில், ஆறே ஆண்டுகளில் இதை தகர்த்தெறிய ப.ஜ.க. தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

134 கோடிக்கும் மேலான மக்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் இன்றி மார்ச் 25-ஆம் தேதி முதல் கொரோனா வைரசைத் தடுப்பதற்கான ஊரடங்கு மோடி அரசால் எவ்வித ஆயத்தமுமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டது.  இதன் விளைவாக 3441 பேர் மரணத்தை தழுவியுள்ளனர் (இதனை நாங்கள் எழுதுகையில்). இத்தகைய இழப்புகள் வைரஸ் தொற்றின் காரணமாக மட்டும் நிகழவில்லை. இது அதிகாரத்துவ குளறுபடி, சர்வாதிகார நடவடிக்கைகள் மற்றும் மோடியால் நிர்வகிக்கப்படும் அரசின் மேட்டிமைதனம் போன்றவற்றின் கலவையாகும்.

மோடியின், ஏழைகளுக்கு எதிரான கொள்கைகளின் ஒருபகுதிதான் அவர்கள் இலவச சுகாதார பரிசோதனைக்கு எதிராக எடுத்த முடிவு.  சுகாதார நெருக்கடி நிலையின் போதும் தனியார் சுகாதார முதலீட்டாளர்களின் நலன்களைக் காப்பாற்றும் நோக்கோடு முன்பே உச்சநீதிமன்றத்தால் ‘அறிகுறி உள்ள நோயாளிகளை இலவசமாகப் பரிசோதிக்க வேண்டும்’ என்ற முடிவினை மாற்றக் கட்டாயப்படுத்தி வருகிறது மோடி அரசு.

நாட்டில் நிலவும் மோசமான சூழ்நிலையைச் சமாளிக்க மோடியின் அரசாங்கத்தால் முடியாது என்பது இதன்மூலம் தெள்ளத்தெளிவாகி இருக்கின்றது. நேர்மாறாக நிவாரணம் என்ற பெயரில் நிதியமைச்சர் ஏற்கனவே நிதிச் சுமையில் பணிபுரியும் விவசாயிகள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் கடன் வழங்குகின்றார். ஆனால் பணம் படைத்தவர்களுக்கு வெட்கமின்றி பிணை எடுப்புப் தொகைகளை வழங்குகின்றார்.

மோடியின் பா.ஜ.க அரசு, தேசம் முழுவதும் கொரோனா நெருக்கடியால் உருவாகியிருக்கும் சுகாதார அவசரநிலையைப் பயன்படுத்தி தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளின் மீதும் தீவிரமான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. பல ஆண்டுகளாகப் போராடி வென்றெடுத்த உழைப்பாளர் உரிமைகள் நாடு முழுவதும் பா.ஜ.க அரசின் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன.

உழைப்பாளர் நலனுக்கான எல்லா சீர்திருத்தமும் மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த கொடுமையான மாற்றங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், கர்நாடகாவின் எடியூரப்பாவின் அரசாங்கமும் இந்த மாற்றங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர ஆயத்தமாகி வருகின்றது.

செயல்திறன், வளர்ச்சி, வீழும் இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கிநிறுத்துவது எனும் பெயர்களில், இன்போசிஸ் நாராயண மூர்த்தி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் 8 மணிநேர வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதைக் குறித்த வெளிப்படையான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவின் உழைக்கும் மக்களான நாங்கள் மோடி அரசாங்கத்தின் இத்தகைய கொடூரமான நிலைப்பாட்டினை முற்றிலுமாக எதிர்க்கிறோம். 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. ஒரு தனியார் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய தரவுகளின்படி, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான இந்த ஊரடங்கின்போது, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12.2 கோடி இந்தியர்கள் வேலை இழக்க நேரிட்டுள்ளது. இந்தியாவின் வேலையின்மை விகிதம் இப்போது மிக உயர்ந்த அளவில் 27.1% ஆக உள்ளது என்று இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம் (CMIE) தெரிவித்துள்ளது.

அதீத பணவீக்கம் உருவாகி இருக்கிறது.  மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மொத்த உழைக்கும் வர்க்கத்தையும் ஏழ்மைக்குள் தள்ளியிருக்கிறது. மோடியின் ஆட்சி கணிசமான எண்ணிக்கையிலான தொழிலாளர் வர்க்க மக்களை கையேந்துவோராக மாற கட்டாயப்படுத்தியுள்ளது.

உழைப்பாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் தாக்கும் விதமாக அகவிலைப்படியை (DA) நிறுத்தி வைத்திருக்கும் மோடி அரசாங்கத்தின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மத்திய மாநில அரசுகளே!! அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து வழங்கிடு!!

அனைத்து தனியார் மயமாக்கல் திட்டங்களையும் நிறுத்து! அனைத்து பொதுத்துறை தொழில்களையும் வேலைகளையும் தேசிய மயமாக்கு!

உழைப்பு நேரத்தில் மாற்றம் கொண்டுவரக் கூடாது – உழைப்பு நேரம் 8 மணி நேரமாக இருக்கவேண்டும்!

பிற்போக்கான தொழிலாளர் சட்டத்திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெறு!

உழைப்பாளர் உரிமைகளின் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்து!

அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.25,000 ஆக உயர்த்து!

அரசு ஊழியர், தனியார் ஊழியர், புலம்பெயர் தொழிலாளர், நிரந்தர ஊழியர், ஒப்பந்த தொழிலாளர் என்ற வேறுபாடுகளின்றி அனைவரும் ஒரே வர்க்கமாக ஒன்றிணைந்து மோடி அரசின் தாக்குதலை எதிர்ப்போம்!

போராடுவோம், வெற்றிபெறுவோம்! தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!!

புதிய சோசலிச இயக்கம்

தொடர்பு கொள்ள (+919500111154)

About புதிய சோசியலிச இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top