Home / பார்வை / ஜெயராஜ் பென்னிக்ஸ் படுகொலையின் பின் இருக்கும் அதிகாரம் தகர்க்கப்பட வேண்டும்

ஜெயராஜ் பென்னிக்ஸ் படுகொலையின் பின் இருக்கும் அதிகாரம் தகர்க்கப்பட வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் லாக்டவுன் நேரத்தில் அரசு அனுமதி அளித்த நேரத்தைக் கடந்து மொபைல் கடை திறந்து வைத்திருந்ததாகக் கூறி ஜூன் 19-ஆம் தேதி போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தந்தை மகள் இருவரும் கோவில்பட்டி சிறையிலேயே காவலர்களால் மோசமாக அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள், இக்கொடூரச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்வராத தமிழக அரசு அவர்களை ஏதோ ஒரு விதத்தில் காப்பாற்றவே போராடி கொண்டு இருக்கிறது. காவல்துறை அராஜகமாக நடந்து கொள்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே நாம் பார்த்தது தான். மெரினா போராட்டக்காரார்களை வன்முறையாளர்களாக சித்தரித்ததும், நீதிக்காக போராடிய போராட்டகாரர்களை குற்றவாளி போல் நடத்தியதும் அம்மக்களை விரட்டி விரட்டி அடித்த இதே காவல்துறையை இன்றுவரை கூண்டில் ஏற்ற முடியவில்லை

அதேபோன்று ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 13 பேரை ஊரறிய விரட்டி விரட்டி துப்பாக்கியால் சுட்டு கொன்றதும் பார்த்தோம் அதற்கான நீதிப் போராட்டம் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது காவல்துறைக்கு இவ்வளவு உர்ச அதிகாரம் யார் கொடுத்தது சாதாரண மனிதன் தவறு செய்யும் பட்சத்தில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனை என்ற சட்டம் எழுதும் இவர்கள் துப்பாக்கியால் சுடும் வீடியோ ஆதாரங்கள் இருந்தும்கூட இதுவரை தவறு செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த தண்டனையும் வழங்காதது ஏன் மக்களுக்காக தான் சட்டம் என்றால் இதுவரை அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு என்ன நீதியை பெற முடிந்தது இந்தச் சட்டத்தினால்

காவல்துறைக்கு அதீத பணிச்சுமை காரணமாக தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக சிலர் வாதிடுகின்றனர் பணிச்சுமையை காரணம் காட்டி கொரோனா கால மருத்துவர் விஷ ஊசி போட்டுக் கொன்றால் ஏற்றுக்கொள்வோமா பணிச்சுமையால் காரணமான மன அழுத்தத்தால் நிகழ்வதாக கூறப்படும் சம்பவங்கள் எல்லாம் அதிகார வர்க்கத்திற்கு எதிராகவோ, முதலாளிகளுக்கு எதிராகவோ நிகழ்வதில்லை ஏன்? ஏன் இந்த பாரபட்சம் ஏழைகள் அதிகாரமற்றவர்கள் என்பதாலா? காவல்துறைக்கு அதீத பணிச்சுமையெனில் அவர்கள் குழுவாக சங்கமாக சேர்ந்து தங்களின் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டும் எட்டு மணி நேரம்தான் வேலை செய்வோம் உயரதிகாரிகளுக்கு எடுபுடி வேலை செய்ய மாட்டோம் என தங்கள் ஜனநாயக உரிமைகள் அவர்கள் போராட வேண்டும் என்பதே இங்கு வாதமாக இருக்க முடியும். அதை விடுத்து அவர்களின் அதிகாரத் திமிரை மக்கள் மீது கோபமாக காட்டவோ, அவர்களை சட்டத்திற்கு விரோதமாக வதைக்கவோ இவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்தது யார்

பணம் வைத்திருப்பவர்கள் எத்தகைய குற்றத்தையும் செய்துவிட்டு இலகுவாக தப்பிவிட முடிகிறது பெண் ஊடகவியலாளர்களை இழிவுபடுத்துபவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் போலீஸ் பாதுகாப்போடு சூப்பர் மார்க்கெட் சென்றுவர முடிகிறது மக்களை ஏய்க்கும் சமூகவிரோதிகளும், கரண்டித் தின்னும் முதலாளிகளும் சொகுசாக உலாவும் சமூகத்தில் தனது கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்திருந்தார் என்றுக் கூறி அடித்துக் கொல்ல முடிகிறது எனில் இந்த அதிகாரம், அமைப்பு முறை முழுக்க முழுக்க மக்களுக்கானது அல்ல என்பதை என்பதை நாம் சிலருவாக புரிந்து கொள்ள முடியும் இந்த கொடிய நேரத்திலும் தொடு எப்படி அ கொரோனா தொற்று நேரத்திலும் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலைக்கு வரவழைத்த நிறுவன முதலாளிகளை இப்படி அடிக்க முடியுமா குறைந்தபட்சம் அவர்களுக்கு எதிராக ஒரு வழக்கையேனும் பதிவு செய்ய இயலுமா? இப்போது சொல்லுங்கள், காவல்துறை யாருடைய நண்பன்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதியின் மண்டை உடைக்கப்பட்ட பழைய கதை பாரறியும் இப்போது விசாரணைக்கு வந்த மாஜிஸ்திரேட்டு மிரட்டுகின்றனர் எனில், அதிகாரமற்ற மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை, முதலாளித்துவ நெருக்கடி முற்றிவரும் நிலையில், ஆளும் வர்க்கத்தின் உறுப்புகளுக்கு இடையிலேயே மோதல் போக்கு நிலவுவதை சாத்தான்குளம் பிரச்னை எடுத்துக்காட்டுகிறது

லாக்டவுன் நேரத்தில் அதிக நேரம் கடை திறந்தது. ஆட்டோவை இயக்கியது இட்லி கடை வைத்த ஒரு பெண்மணியை காவல்துறை அதிகாரி தவறாக பேசியது. இதுபோன்ற நிகழ்வுகள் தினம் பார்க்கும்.

இவர்கள் அனைவரும் உரிய நேரத்தில் கடைகளை அடைத்து இருக்க வேண்டும். இல்லை என்றால் தண்டிக்கப்படுவார்கள் என்றால் அவர்களுக்கான உரிய நிவாரணத்தை அரசு வழங்கி இருக்க வேண்டும் அல்லவா கொரோனா காலத்திலும் ஆட்டோ ஓட்டுநர் தன் உயிரையும் மதிக்காமல் விதிக்கு வருகிறார் என்றால் அவர் மற்றும் அவரது குடும்பத்தின் பசியை போக்குவதற்கு அரசு என்ன செய்தது? உயர்நடுத்தர வர்க்க மனப்பான்மையிலேயே அதிகாரவர்க்கத்தின் நிலைப்பாடுகள் இருக்கையில், மக்களின் வாழ்க்கை கஷ்டம் எப்படி புரியும் இந்த அரசுக்கும். அதன் பிற உறுப்புகளுக்கு. இது முழுக்க முழுக்க இந்த சமூக அமைப்பின் தோல்வி ஏழை-எளிய, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் என்ன ரூபாய் பணமும் 10 கிலோ அரசியும் மட்டும் வைத்து எத்தனை மாதம் வயிற்றைக் கழுவுவது தமிழ்நாட்டில் இன்று மக்கள் எதிர் கொண்டிருக்கும் அவலம் மிக மோசமாக இருக்கிறது ஒரு பக்கம் கொரோனா நோற்றின் வேகமான பரவலால் ஏராளமானவர்கள் சாவை எதிர் கொண்டு நிற்கிறார்கள். அவர்கள் வைத்திய சாலைக்கு போக முடியாத நிலையை உருவாக்கி வைத்திருகிறது அரசு வைத்திய சாலைகளில் இடமில்லாத காரணத்தால் தோற்று வந்தவர்களை வீடுகளில் அடைத்து வைத்து – வீட்டின் கதவுகளை முடி கட்டி அறிவிப்பு ஒட்டி வருகிறார்கள். இதனால் மக்கள் தமக்கு தோற்று இருக்கு என்பதை சொல்லவே பயப்படும் நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறார்கள், மருத்துவ வசதிகள் எதுவுமின்றி இதனால் பலர் வாடுகிறார்கள். தமது காய்ச்சல் அல்லது தலைவலிக்கு கூட ஒரு மருந்தை பெற முடியாது தவிக்கும் நிலைதான் உண்டு தனியார் மருத்துவமனைகள் வட்டக் கணக்கில் பணம் அறவிடுவதால் அந்தப் பக்கம் செல்வதை நினைத்தே பார்க்க முடியாத நிலையில்தான் பெரும்பான்மை மக்கள் இருக்கிறார்கள் இந்த நிலையில் இவர்கள் பொலிஸ் அராஜகத்தால் அடித்து நொறுக்கப் படுகிறார்கள்

அமெரிக்காவில் ஒரு கறுப்பினத்தவர் வெள்ளை துவோ காவலர் ஒருவனால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இருக்கும் மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள் உலகம் முழுக்க அந்தப் போராட்டம் பற்றிப் பரவி வருகிறது. காவல்துறையை கலைக்கச் சொல்லி சம்பவம் நடந்த மினியாபொலிஸ் நகரமன்றம் தீர்மானம் நிறைவேற்றும் படிக்கு போராட்டம் பலமாக இருந்துள்ளது. இராணுவமும், காவல்துறையும் ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை உறுப்புகள் என்ற மார்க்சிய கோட்பாட்டு விளக்கம் விளக்கத் தேவையே இன்றி பட்டவர்த்தமாக புரியும் நிலை வந்திருக்கிறது.

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் காவல்துறை செய்யும் கேட்பாரற்ற அராஜகம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் சும்மா மக்களின் சேவகர் என காவல்துறை சினிமா வசனம் பேசி தப்பித்து போக அனுமதிக்க முடியாது அப்படியாயின் காவல் துறை மக்களின் சனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் சனநாயக முறையில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களால் ஆனா தொழிலாளர் – மற்றும் ஒடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட கட்சியின் மேற்பார்வையின் கீழ் காவல்துறை வரவேண்டும். இதே சமயம் மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப் பட வேண்டும், காவல்துறை அராஜகம் செய்வது தெரியவரும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து வாதிகளும் செய்யப் பட வேண்டும். அத்துமீறி தன மனித சுதந்திரத்தில் தடை இட முடியாதபடி காவல்துறையின் அதிகாரம் மட்டுப் படுத்தப் பட வேண்டும்

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான முதற்படி குற்றம் புரிந்த காவல்துறையினர் உடனடியாக கைது செய்யப்பட்டு மக்கள் கமிடிட்யை உள்வாங்கிய விசாரனைக்கு உட்படுத்துவதே அவர்கள் குடும்பத்துக்கு தகுந்த நட்ட ஈடு வழங்குவது மட்டும் போதாது அந்த காவல் நிலையம் முழு விசாரனைக்கு உற்படுத்தப் பட்டு அங்கு வாழும் மக்களின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வரப் படவேண்டும் காவல் துறைக்கு செலவிடப்படும் பணம் முதலியவற்றை தீர்மானிக்கும் சக்தி சனநாயக மக்கள் கமிட்டிக்கு வழங்கப் படவேண்டும் அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப் படவேண்டும் ஆதாரமின்றி கைது செய்வது சாக்குப் போக்கு சொல்லி அவர்களின் சிறை நாட்களை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்பட வேண்டும்

தடியடி செய்தல் முதலான நாககரீகமற்ற முறையில் மக்களை தாக்கும் நடவடிக்கைகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்.

போராடுபவர்களை – அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களை இயங்குபவர்களை வேண்டுமென்று கண்காணிப்பது – தொல்லை கொடுப்பது அவர்கள் மேல் வன்முறை செய்வது – பொய் வழக்குப் போடுவது முதலான அனைத்தும் உடனடியாக நிறுத்தப் படவேண்டும்

மக்கள் ஒன்று கூடுவதற்கான உரிமை வழங்கப் பட வேண்டும்.காவல்துறை எக்காரானம் கொண்டும் இந்த உரிமையை தடுக்கும் அதிகாரத்தை வைத்திருக்க விடமுடியாது

தவறு செய்யும் காவல்துறையினரை தண்டனையில் இருந்து காப்பாற்றும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நாம் இலகுவில் வென்றெடுக்க முடியாது

அமெரிக்காவில் ஐரோப்பாவிலும் நடப்பது போன்ற பலமான போராட்டத்தின் பின்னணியில்தான் நாம் இந்த கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் அரச அதிகார சக்திகள் தமது சொந்த நலன்களை காப்பாற்றத்தான் காவல்துறையை இவ்வாறு மக்கள் விரோத சக்தியாக மாற்றி வைத்திருக்கிறார்கள் இந்த நிலையில் தாமாக மாற்றும் கொண்டுவா அரசு முன்வரப் போவதில்லை பலமான போராட்டத்தை திரட்ட நாம் முன்வரவேண்டும் அது மட்டுமின்றி ஒவ்வொரு பகுதிகளிலும் அங்கு வாழும் தொழிலாளர் அமைப்புக்கள் – ஒடுக்கப்படும் மக்கள் சார் அமைப்புக்களை ஒன்றிணைத்து கமிட்டிகளை கட்டி மாநில அளவில் பலமான மக்கள் பிரதிநிதுத்தவத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது மக்கள் நலன்களை முதன்மைப் படுத்தும் பரந்த ஒரு அமைப்பை உருவாக்காமால் அரசதிகாரத்துக்கு நாம் சவால் விட முடியாது அத்தகைய சக்தியின் உருவாக்கம் இந்த கோரிக்கைகள் மட்டுமின்றி மக்களுக்கு தேவையான இலவச சுகாதார கல்வி சேவைகள் மற்றும் வீட்டு வேலை வசதிகள் ஆகியவற்றை வென்றெடுப்பது நோக்கி நகர உதவும் எல்லா ஒடுக்குமுறைகளில் இருந்தும் நிரந்தர தீர்வு என்பது முதலாளித்துவ அமைப்பு முறையை முடிவுக்கு கொண்டுவருதல் என்பதோடும் சோசலிசம் திட்டமிட்ட பொருளாதாரம் நிறுவுவதோடும் சம்மந்தப்பட்டது இந்த தூர நோக்கிய பார்வை கொண்ட அமைப்பு இன்றைய அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோரக் கொலை போல் தொடர்ந்தும் நடக்க கூடாது என கருதுவோர் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வாருங்கள்

தொடர்புகளுக்கு

புதிய சோசியலிச இயக்கம்

9500111154

About புதிய சோசியலிச இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top