Home / அறிவித்தல்கள் / வகுப்புவாதத்தின் காட்டாட்சியை எதிர்த்து நிற்போம்!!!

வகுப்புவாதத்தின் காட்டாட்சியை எதிர்த்து நிற்போம்!!!

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருக்கும் மமதையாலும், மோடி அரசாங்கத்தின் ஒவ்வொரு தோல்வியையும் வெற்றி என திரித்துக் கூறும் பொய்யர்களின்நயவஞ்சக உதவியாலும்பல தசாப்தங்களாக உழைக்கும் மக்களும் இதர ஒடுக்கப்பட்ட பிரிவினரும் வீரதீர போராட்டங்களின் மூலம்வென்றெடுத்திருந்த அனைத்து உரிமைகளையும்அடித்து நொறுக்கும் பிற்போக்குத்தனமான சீர்திருத்தங்களை மோடி அரசு துணிச்சலோடு முன்னெடுத்து வருகிறது. தேர்தல் பாராளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட இந்திய ஜனநாயக நிறுவனங்களில் துவங்கி தற்போது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளும் மிகத்தீவிரமான தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. பாஜகவின் இந்துத்துவ சித்தாந்தத்தின் மிகத்தீவிரமான ஆதரவாளர்கள் கூட தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதை உணர்ந்து விழிபிதுங்கி நிற்கின்றனர். மோடி அரசின் பிரமாண்ட கோவில்களும் சிலைகளும் அவர்களது குடும்பத்தினருக்கு உணவளிக்க போகின்றனவா என்ன?

 

திருப்பியடிப்போம்! முதலாளிகளும் வகுப்புவாதிகளும் நம்மீது திணித்துக் கொண்டிருக்கும் அனைத்து பிரிவினைகளையும் தாண்டி நமது ஒற்றுமையை நிரூபித்துக் காட்டுவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பை நவம்பர் 26 பொது வேலைநிறுத்தம் நமக்கு வழங்கியிருக்கிறது. சரியான தலைமை அமையும் பட்சத்தில்தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை தகர்த்தெறிய வீறுகொண்டு எழத் தயாரென இதற்கு முந்தைய பொது வேலை நிறுத்தங்களில் கோடிக்கணக்கில் கலந்துகொண்டு தொழிலாளர் வர்க்கம் காண்பித்தது.

மோடி தலைமையிலான ஹிந்துத்துவா மோசடி கும்பலை எதிர்ப்பது மட்டுமின்றி, தோற்கடிக்கவும் முடியும். ஆனால் நம்மிடையே இருக்கும் பிரிவினைகளை கண்டும் காணாமல் கடந்து சென்றால் இதை சாதிக்க முடியாது.  நமக்கு எதிரான ஆயுதமாக இந்துத்துவ கும்பலால் பயன்படுத்தப்படும் இந்த பிரிவினைகளை அடித்து  நொறுக்கினால் மட்டுமே அவற்றை தோற்கடிக்க முடியும். கோடிக்கணக்கான தொழிலாளர்களை, குறிப்பாக, குறைந்த ஊதியத்திற்கு பணிபுரியும் அமைப்புசாராதொழிலாளர்களை மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாக்கி கொண்டிருக்கும் பிற்போக்கான தொழிலாளர் சட்டத் திருத்தங்களைஅடித்து நொறுக்கதொழிலாளர் சங்கங்கள்அழைப்பு விடுத்துள்ளன.

கொரோனா பெருந்தொற்று துவங்கியது முதல் இதுவரை 14 கோடி தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டனர். வறுமையின் பிடியில் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் வேலை இழப்பு என்பது மரணதண்டனைக்கு ஒப்பானதாகும். அரசின் நவ தாராளமயக் கொள்கைகளின் நேரடி விளைவாக வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் நமது விவசாய சகோதர சகோதரிகளில் ஏறத்தாழ 3,50,000 பேர் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டதை நாம் பார்த்துள்ளோம்.

இந்த நவ தாராளவாத கொள்கைகளில் காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட அனைத்து முதலாளித்துவ  கட்சிகளும் வேறுபாடின்றி உடன்படுகின்றன.

பொது சுகாதாரம்! நம் நாட்டின்பொதுசுகாதார வசதிகளின் நிலையை படம்பிடித்துக் காட்ட இதுவரை நிகழ்ந்துள்ள 1,31,578 கொரோனா மரணங்களால் கூட இயலவில்லை. ஜனநாயக குடியரசு என்று சொல்லிக்கொள்ளும் இந்த நாட்டில்மருத்துவ வசதி அனைவருக்கும் பொதுவானது அல்ல. பணமும் அதிகாரமும் படைத்தவர்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக தான் உள்ளது. பொருளாதாரத்தில் தனியார் மூலதனத்தை அனுமதிக்கும் நடவடிக்கையானதுகல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேலும் மோசமாக்கியுள்ளது. சோசலிச பானியிலான சமூகம்என்று சொல்லிக் கொள்ளும்இந்திய அமைப்பில்லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கி மக்களின் ரத்தத்தை உறிஞ்சும். தனியார் மருத்துவமனைகளும் காப்பீட்டு நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை கடந்த 9 மாதங்களில் மட்டும் பலி வாங்கின.

ஏறத்தாழ 50 கோடிதொழிலாளர்களை கொண்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள இந்தியாவில் 94 சதவீத தொழிலாளர்கள் தள்ளுவண்டி வியாபாரிகள்துவங்கி ஆபரணங்களுக்கு பட்டை தீட்டுபவர்கள் வரைபல்வகையான பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் அமைப்புசாரா துறையில் ஈடுபட்டுள்ளனர். அரசுத் துறையிலும், பொது மற்றும் தனியார் துறையிலும் பணிபுரியும் 2.75கோடி தொழிலாளர்கள் அமைப்பு சார் துறையின் கீழ் இயங்குகின்றனர். இவர்களில் அரசு மற்றும் பொதுத் துறையில் மட்டும் 1.73 கோடி பேர் உள்ளனர்.

இது தீர்க்கமான ஒரு போராட்டத்துக்கான தருணம்!  நவம்பர் 26 வேலை நிறுத்தமானது இந்த சாதிய, வகுப்புவாத, முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறிவதற்கான முன்னோட்டமாக அமைய வேண்டும்.

 

பொது வேலைநிறுத்த கோரிக்கைகள்:

* அரசே!! பிற்போக்கான தொழிலாளர் மற்றும் விவசாய சீர்திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெறு!!

தொழிலாளர்களும் விவசாய அமைப்புகளும் தங்களது பணியிடங்களையும் விவசாய நிலங்களையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுக்க தயாராக வேண்டும்.

அமைப்பாக திறளவும் வேலைநிறுத்தம் செய்வதற்கும் தொழிற்சங்கங்களுக்கு உள்ள உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.

* 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இளைஞர்களின் மத்தியில் வேலையின்மை நிலவுகிறது.

மோடியின் ஒவ்வொரு பொருளாதாரக் கொள்கையும் ஒரு கோடி வேலைவாய்ப்பை தட்டி பறிக்கின்றது. பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டியும், தனியார்மயமும், மந்தமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் குறைந்தபட்சம் 20 கோடி வேலை இழப்புகளையாவது ஏற்படுத்தியுள்ளன.

*அரசே!! வங்கித்துறையில் முன்னெடுத்து வரும் பிற்போக்கு சீர்திருத்தங்களை உடனடியாக கைவிடு!!

வங்கி இணைப்புகளையும், வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் தனியார்மய நடவடிக்கைகளையும் உடனடியாக கைவிடு!!

தனியார் மயமாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் மீண்டும்அரசு கையில் எடுக்கக் கோரி தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

பொது துறையிலும், பொது சுகாதாரத்திலும்,  கல்வியிலும், உணவு உற்பத்தித் துறையிலும் கோடிக்கணக்கான வேலைகளை உருவாக்கும் பொருட்டு அத்துறைகளில் அரசு முதலீடுகளை அதிகப்படுத்த கோரி உழைக்கும் வர்க்கம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

* அரசே!!! அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் மருந்து நிறுவனங்களையும் உடனடியாக அரசுடமையாக்கு !!!

உடனடியாக அனைவருக்குமான இலவச சுகாதார அமைப்பு வேண்டும்!!! அடிப்படை சுகாதார வசதி இன்மையால் ஏற்படும் மரணங்களை இதற்குமேல் பொறுத்துக் கொள்ள முடியாது!!

* 2017 பொது வேலை நிறுத்தத்திற்கு சற்று முன் தான் அனைவருக்கும் ரூபாய் 15 ஆயிரத்தை குறைந்தபட்ச ஊதியமாக கொடுப்போம் என்று மோடி அரசு உறுதி அளித்திருந்தது.  ஆனால் இன்றுவரை அந்த வாக்குறுதி போலியாகவே இருந்து வருகிறது. இப்போது ஊதியங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன.

அரசே!! அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 25 ஆயிரத்தை கொடுத்திடு!!

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பிற்போக்கு குடியுரிமை சீர்திருத்தங்களுக்கான முயற்சிகளை உடனடியாக கைவிடு!!

குடி மக்களுக்கு இடையே.மதரீதியான வேற்றுமைகளை உருவாக்கும் நடவடிக்கைகளை கைவிடு!!  CAA-NRC-NPRஐமுழுவதுமாக கைவிடு!!

ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த போராட்டத்தை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்தாக வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களானாலும் சரி, வடகிழக்கு மக்களானாலும் சரி.. அனைவருக்கும் உரித்தான தேசிய இன ஜனநாயக உரிமைகளை கோருகிறோம். இதுவரைப் பறிகொடுத்துள்ள அனைத்து ஜனநாயக  உரிமைகளையும் மீட்டெடுக்க நாம் போராடியாக வேண்டும்.

எதிர்ப்பு அலை துவங்கிவிட்டது! நவம்பர் 26 பொது வேலை நிறுத்தத்தில் கைகோர்ப்போம்!!! அணி திரண்டு வாரீர்!!

துண்டறிக்கை 

ஆங்கிலத்தில் வாசிக்க 

 

About T

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top