Home / கட்டுரைகள் / காபூல் வீழ்ந்தது: அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பேரழிவு – தலிபான்களின் கீழ் ஆப்கானியர்களின் துன்பம் தொடர்கிறது

காபூல் வீழ்ந்தது: அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பேரழிவு – தலிபான்களின் கீழ் ஆப்கானியர்களின் துன்பம் தொடர்கிறது

Occupying US soldiers conduct a patrol in Afghanistan, 2010 (Photo: Creative Commons)

கஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை அன்று  காபூலின் தலைநகரை கைப்பற்றினர் தலிபான்கள். அமெரிக்க ஆதரவு அஷ்ரப் கானி அரசாங்கத்தை அவர்கள் அதிகாரத்திலிருந்து விரட்டினர். ஆயிரக்கணக்கான மக்கள் தீவிர இஸ்லாமிய படையிலிருந்து தப்பிக்க விமானங்களில் ஏற முயன்றனர். ஆளில்லாத அதிபர் மாளிகையையும் காபூலில் உள்ள காவல் நிலையங்களையும் தலிபான்கள் கைப்பற்றினர். மேற்கத்திய ஆக்கிரமிப்பின் வெறுக்கப்படும் சின்னமான பக்ராம் விமானப்படை சிறைச்சாலையிலிருந்து ஆயிரக்கணக்கான கைதிகளை தலிபான்கள் விடுவித்தனர்.

பல தசாப்தங்களாக மேற்கத்திய ஏகாதிபத்திய இராணுவ ஆக்கிரமிப்பு பொம்மை ஆட்சிக்கு ஆதரவளித்த பிறகுயுத்தமின்றி வீழ்த்தப்பட்டுள்ளது தலைநகரம். கானி ஆட்சிக்கு மக்களிடையே நிலவிய ஆதரவின்மை மற்றும் பல தசாப்தங்களாக மேற்கத்திய படைகள்மீது நிலவிய அநீதி ஆகியவற்றை இது குறிக்கிறது.

தெளிவாகச் சொல்லப்போனால், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியைத் திரும்பக் கொண்டுவருவதற்கான விருப்பம் பெரும்பான்மையான ஆப்கானியர்கள் இடையே நிலவவில்லை. இருப்பினும், பெருமளவிலான மக்களிடையே இருந்த மனச்சோர்வையும், ஊழல்மீதான பெரும் கோபத்தையும் பயன்படுத்தி தலிபான்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். தீவிர இஸ்லாமியர்கள், பலரும் எதிர்பார்த்த சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்புஆகியவை நிலைநாட்டப்படும் என்று உறுதியளித்துள்ளனர் தலிபான்கள்.

காபூலின் வீழ்ச்சி மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு பெரும் தோல்வியாகவும், 2001 இல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த நேட்டோ படைகளுக்குப் பெரும் பின்னடைவைத் தரும் அடியாகவும் உள்ளது. இது மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு ஒரு அவமானகரமான தோல்வி. முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்டாலினிச ஆட்சிகள் வீழ்ச்சியடைந்ததிலிருந்து, “அமெரிக்க இராணுவ சக்தி தடுத்து நிறுத்த முடியாத ஒன்று” என்றும் “அது நினைத்தால் புதிய உலக ஒழுங்கைஎங்கு வேண்டுமானாலும் நிறுவலாம்” என்றும் முதலாளித்துவ சிந்தனையாளர்கள் கவனமாக ஒரு பிம்பத்தைக் கட்டியமைத்துள்ளனர். 9/11 தாக்குதலின் இருபதாம் ஆண்டு நிறைவுக்கு சற்று முன்னதாகவே தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததால், ஆப்கானிஸ்தானுக்கான ‘தேசத்தை உருவாக்கும்’ திட்டம் சிதைந்துள்ளது.

பல வாரங்களாக, தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளைக் கைப்பற்றியபோது, சிறிய எதிர்ப்பையே எதிர்கொண்டனர். ஆப்கானிஸ்தான் தேசிய இராணுவம் மிகவும் பிரபலமற்ற மற்றும் அடக்குமுறையைச் செலுத்தும் காணி ஆட்சிக்கு எதிராகப் போராடி உயிரைவிடத் தயாராகவில்லை. அமெரிக்காவின் கைப்பாவை ஆட்சிகளின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் போலவே, ஆப்கானிஸ்தான் இராணுவமும் ஊழல் நிறைந்ததாக இருந்தது. பல சந்தர்ப்பங்களில்,  இராணுவத்துக்கு உணவு போதாமை இருந்தது. மற்றும் குறைந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மட்டுமே வைத்திருந்தனர்.

இராணுவத்தினர் தலிபான்களுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டனர். மற்றும் நாட்டுக்குள் எப்போதும் தலிபானுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் வடக்கில் கூட, காணியின் வீழ்ச்சிக்கு எதிராக யாரும் அணிதிரளவில்லை.

காபூலில் பயம் மற்றும் பயங்கரவாதம்

காபூலில் தலிபான்களின் வருகையால், பல மக்களிடையே பயம் தொற்றியுள்ளது. தலிபான்கள் கடைசியாக 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோது, அவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான விதிகளின்படி ஆட்சிபுரிந்தனர். அதன்படி, பெண்கள் கல்வி கற்பது அல்லது வேலை செய்வது தடை செய்யப்பட்டது, மண வாழ்க்கையை தாண்டி உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்கள் கல்லால் அடிக்கப்பட்டார்கள். பொதுவில் மரணதண்டனை வழங்கப்பட்டது. மற்றும் குற்றம் சாட்டப்பட்ட திருடர்களின் கைகள் வெட்டப்பட்டது.

தலிபான்கள் தங்கள் வெற்றியை நோக்கிச் செல்லும் காலகட்டத்தில், அவர்கள் தங்கள் ஆட்சி விதிகளை “முடிவுசெய்துகொள்வதாக” குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான முல்லா பரதர், “அனைவருக்குமான, திறந்த இஸ்லாமிய அரசாங்கத்தை” அமைப்பது குறித்து “மற்ற ஆப்கானிஸ்தான் தலைவர்களுடன்” விவாதிப்பதாக அறிவித்துள்ளார். “நாங்கள் எதிர்பார்க்காத வெற்றியை அடைந்தோம் …” என முல்லா பரதர் ஒப்புக்கொண்டுள்ளார். “இப்போது நாம் எவ்வாறு நமது மக்களுக்குச் சேவை செய்யப் போகிறோம், பாதுகாக்க போகிறோம், அவர்களின் எதிர்காலம் மற்றும் சிறந்த வாழ்க்கையை எவ்வாறு உறுதி செய்யப்போகிறோம் என்பதை குறித்து சிந்திக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தலிபான் தலைவர்களின் வெற்று பிரச்சாரம் மட்டுமே என்பது சிறிது நாட்களில் தெளிவாகிவிடும். “இந்த மாற்றத்தின் தொடக்கத்தில் [அதிகாரத்திற்கு வருவதற்கான மாற்றம்]”, “தலிபான்களின் நலன்களுக்காக மிதமான முகத்தைக் காட்டுவதுடன், பொது மரணதண்டனைகள் ஆகிய தண்டனைகளை தவிர்ப்பதன் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் எதிர்ப்பைத் தவிர்க்க முயற்சிப்பார்கள்” என்று மூத்த நிருபர் பேட்ரிக் காக்பர்ன் (இண்டிபெண்டண்ட், லண்டன், 16/08/21) தெரிவித்துள்ளார். ஆயினும், ஒரு மிதமானதாலிபான் ஆட்சி கூடப் பெண்கள் மற்றும் பிறர் மீது ஆழ்ந்த பிற்போக்குத்தனமாகவும் ஒடுக்குமுறையாகவும் இருக்கும்.

தலிபான்கள் பெரும்பாலும் தங்கள் ஆட்சியை ஒருங்கிணைப்பதால் மேற்கத்திய ஏகாதிபத்தியத்துடன் நேரடி எதிர்ப்புகளை தவிர்க்க விரும்புவார்கள். அவர்கள் மின்னல் வேகத்தில் வெற்றி பெற்றதால் தாலிபான்களுக்கு நாடு முழுவதும் மற்றும் உலகளாவிய அளவிலும் ஆதரவு உள்ளது என்று அர்த்தமல்ல. ஆப்கானிஸ்தான் தாஜிக், உஸ்பெக், ஹசாரா மக்கள் மற்றும் பஷ்தூன் உட்பட பல்வேறு இன மற்றும் பழங்குடி குழுக்களால் ஆனது, இதிலிருந்து தலிபான்கள் அதிக ஆதரவை பெறுகின்றனர். தலிபான்கள் ஆட்சியில் இருக்க வேண்டுமானால் இந்தக் குழுக்களில் பலருடன் உடன்பாடுகளை எட்ட முயற்சி செய்ய வேண்டும். இந்த நோக்கத்தில் அவர்கள் தோல்வியடைந்தால், அது புதுப்பிக்கப்பட்ட மோதலுக்கும், மற்றொரு உள்நாட்டுப் போருக்கும் வழி வகுக்கும் இதனால் நாடு உடைந்து போகக்கூடும்.

தலிபான்களின் வெற்றியால் எழும் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்கள் பிராந்திய மற்றும் மேற்கத்திய சக்திகளின் பெரும் கவலையாக உள்ளது. தாலிபானின் பிரிவுகள் அல்கொய்தாவுடன் இணக்கமாக உள்ளன. எவ்வாறாயினும், தலிபான் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் தங்கள் எதிரிகளுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடங்குவதற்கான ஒரு ஏவுதளமாக ஆப்கானிஸ்தானை மீண்டும் மாற்றுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தி மேற்கத்திய இராணுவத் தாக்குதல்களை அழைக்கும் ஜிகாதி இஸ்லாமியப் படைகளை தலிபான்கள் கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம். தலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் இடையேயான உறவு மோசமாக உள்ளது, ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய பயங்கரவாத குழு எவ்வளவு வளர முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும்கூட, மேற்கத்திய அரசாங்கங்கள் உள்நாட்டு பயங்கரவாத தாக்குதல்களின் புதிய அதிகரிப்பு குறித்து தீவிரமாக அக்கறை கொண்டுள்ளன. ஏனெனில் தலிபான் வெற்றி, குறைந்தபட்சம், உலகெங்கிலும் உள்ள பல்வேறு இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுக்குத் தூண்டுதலாக உள்ளது.

துடிக்கும் மேற்கத்திய சக்திகள்

காபூலில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பதிலடி கொடுக்க மேற்கத்திய சக்திகள் இப்போது தீவிரமாகச் சிந்தித்து வருகின்றன. புதிய ஆட்சியாளர்களிடம் உறவுகொள்ள வழி உள்ளதா எனும் யோசனையில் அவர்கள் உள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் அடக்குமுறை செலுத்தும் சவுதி இஸ்லாமிய ஆட்சியை ஒரு கூட்டாளியாக எண்ணுகிறார்கள். தலிபான்களுடன் டிரம்ப் ஒப்பந்தம்செய்ததாலும், பைடன் செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் அனைத்து அமெரிக்கப் படைகளும் முழுமையாக வெளியேறுவதாக அறிவித்ததால், தோஹாவில் தோல்வியுற்ற பேச்சுவார்த்தையின்போது தலிபான் சம்பந்தப்பட்ட ஆப்கானியக் கட்சிகளின் உடன்படிக்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. மேற்கத்திய சக்திகள் பிற்போக்குத்தனமான, பெண்களுக்கு எதிரான மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு இஸ்லாமிய ஆட்சிகளுடன் உடன்பட முடியும் என்பது வளைகுடா நாடுகளில் அவர்களின் நெருங்கிய கூட்டாளிகளை பார்க்கையில் தெளிவாகிறது. அவர்கள் பிராந்திய அல்லது உலகளாவிய ரீதியில் தங்கள் முக்கிய நலன்களுக்கு இடையூறாக நிற்காதவரை மேற்கத்திய சக்திகள் இதனைச் செய்யும்.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்பது 2001 ல் ஆப்கானிஸ்தானில் ஏகாதிபத்திய படையெடுப்புக்கான வெற்றுக் காரணமே. எல்லாவற்றிற்கும் மேலாக, 1980 களில் ஆப்கானிஸ்தானில், சோவியத் ஒன்றிய படைகளுக்கு எதிரான முஜாஹிதீன் போராளிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவிலிருந்து அல் கொய்தா உருவானது. 2001 ல் ஆப்கானிஸ்தானை மேற்கத்தியப் படைகள் ஆக்கிரமித்தது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற பிற கூட்டணிக்குமத்திய ஆசியாவில் தங்கள் செல்வாக்கையும் கட்டுப்பாட்டையும் அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு முக்கிய பகுதியாகும்.

பெரும் விளைவுகள்

தலிபான்களின் வெற்றி இப்பகுதியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். பல அகதிகள் உருவாவது உடனடி விளைவாக இருக்கும், இது அண்டை நாடுகளை சீர்குலைக்கும் மற்றும் இறுதியில் ஐரோப்பாவையும் பாதிக்கும்.

தலிபான்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வது அதனுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள பாகிஸ்தானின் இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். பல தசாப்தங்களாக, பாகிஸ்தான் தலிபான் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துத் தளமாகச் செயல்பட்டது. எனினும் பாகிஸ்தான் அரசு இப்போது அதன் எல்லைகளில் சீரற்ற மற்றும் கணிக்க முடியாத ஆட்சியை எதிர்கொள்ளும்.

ஆப்கானிஸ்தானிலிருந்து மேற்கத்திய படைகள் விலகுவதை கண்டு சீனாவும் ரஷ்யாவும் மகிழ்ச்சியடையும். காபூலில் தங்கள் தூதரக ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சீன மற்றும் ரஷ்யாவுக்கு தலிபான் உறுதியளித்துள்ளது. ஆனால், தலிபான்களால் நடத்தப்படும் ஆப்கானிஸ்தான் தங்கள் நாடுகளில் பிரிவினைவாத இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு ஒரு தூண்டுதலாகச் செயல்படலாம் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களின் உள்நாட்டு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தூண்டலாம் என்று சீனாவும் ரஷ்யாவும் அஞ்சுகின்றன.

காபூலில் நடந்த நிகழ்வுகள் அமெரிக்கா, நேட்டோ மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் கௌரவத்திற்கும் செல்வாக்கிற்கும் ஒரு கடுமையான அடியைக் குறிக்கும் அதே வேளையில், ஆப்கானிஸ்தானின் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் பல தசாப்தங்களாக ஆக்கிரமிப்பு -மற்றும் இப்போது தலிபான்கள் திரும்பியதன் மோசமான விளைவுகளை எதிர்கொள்கின்றனர். தலிபான்கள், இராணுவத்தினர், பழங்குடியினர் மற்றும் இனத் தலைவர்கள் ஆகிய யாரும் முற்போக்கானவர்கள் இல்லை. தலிபான்கள் ஆட்சி செய்வதற்கு இவர்களுடன் சுலபமாக உடன்படிக்கைக்கு வர இயலும்.

ஆப்கானிஸ்தானில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அமைப்பு மற்றும் நடவடிக்கை அவசியம் என்று சி.டபிள்யூ.ஐ (CWI) எப்போதும் வாதிடுகிறது. இது போர், படையெடுப்புகள், வறுமை மற்றும் ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவர அதிகாரத்திற்கான போராட்டம், அடிப்படை சோசலிச மாற்றத்திற்கான வேலைத்திட்டத்துடன், தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதை உள்ளடக்குகிறது.

 

நியால் முல்ஹோலண்ட், சி.டபிள்யூ.ஐ

About புதிய சோசியலிச இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top