Home / இரஸ்ய புரட்சியின் வரலாறு / இரஸ்ய புரட்சியின் வரலாறு-அத்தியாயம்: 2 -யுத்த காலத்தில் சார் மன்னர் ஆட்சி

இரஸ்ய புரட்சியின் வரலாறு-அத்தியாயம்: 2 -யுத்த காலத்தில் சார் மன்னர் ஆட்சி

தமது ஆதிக்கத்தை உலகில் நிறுவுவதற்காக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் நெருக்கடி முதலாம் உலக யுத்தமாக 1914ம் ஆண்டு வெடித்த பொழுது அந்த யுத்தத்தில் பின்தங்கிய நாடுகளும் வேறு வழியின்றி இணைக்கப்பட்டன. இங்கிலாந்தின் காலனியாக இந்தியா யுத்தத்தில் நுழைந்தது. சீனா தாமாக யுத்தத்தில் நுழைந்ததுபோல் தோன்றினாலும் ஓருவித காலனித்துவ அடிமையாகவே அதுவும் யுத்தத்தில் இணைந்தது. சக்திவாய்ந்த மேற்கத்தேய நாடுகளின் பிரதிநிதியாகவே ரஷ்யாவும் யுத்தத்தில் ஈடுபட்டது. அக்காலத்தில் ரஷ்ய முதலாளிகள் ஒருவித -தரகு முதலாளித்துவ- பண்பு கொண்டவர்களாக இருந்தனர். சொந்த ஏகாதிபத்திய அபிலாசைகளை முன்னெடுக்கும் நோக்கம் கொண்டிருந்த அதே வேளை – ரஷ்ய அரைத் தரகு முதலாளித்துவம் மேற்குலக முதலாளிகளுக்கும் விசுவாசமாகச் சேவகம் செய்தது. ரஷ்ய இராணுவம் மேற்கத்தேய இராணுவ முறைப்படி வடிவமைக்கப்பட்டபோதும் உள்ளடக்கத்தில் அத்தகைய வலிமையை கொண்டிருக்கவில்லை. குறிப்பிடத்தக்க இராணுவத் தளபாடங்கள் – ஏன்? இராணுவத்தினருக்குப் போதிய பாதணிகள் கூட இருக்கவில்லை. ரஷ்ய இராணுவப் பலம் விரைவில் முறியடிக்கப்பட்டது. 1915ல் ரஷ்ய இராணுவம் பின்வாங்கத் தொடங்கிவிட்டது.

ஜேர்மனிய இராணுவத்தின் நவீனரக ஆயுதங்கள் மற்றும் உத்திகளுடன் போட்டியிடத் தமக்கும் தகுதியில்லை என்பதை ரஷ்ய இராணுவ அதிகாரிகள் நன்கறிந்திருந்தனர். இருப்பினும் இராணுவத்தளபதிகள் தமது ‘கிறிமினல்’ யுத்த வன்முறையை மக்கள் மேல் திருப்பினர். மில்லியன் கணக்கான மக்கள் யுத்தத்தை நோக்கித் தள்ளப்பட்டனர். ஏறத்தாள 15 மில்லியன் மக்கள் யுத்தத்துக்காகச் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் இந்த ஆட்பலம் மட்டும் முன்னடைவை ஏற்படுத்தப் போதுமானதாக இருக்கவில்லை. தளபதிகளின் பின்வாங்கும் வீரம் பற்றிய ஏளனக் கதைகள் எங்கும் பரவத் தொடங்கிவிட்டது. தோல்விக்கு யாரையாவது குற்றம் சொல்வதற்கு அதிகாரிகள் அந்தரப்பட்டனர். காட்டிக்கொடுப்புகளுக்காக யூதர்கள் மீது குற்றஞ் சுமத்தப்பட்டது. ஜேர்மனியப் பெயர் உள்ளவர்கள் மேல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. ஜேர்மனிய ஒற்றர்கள் எனப் பலர் சுடப்பட்டனர். யுத்த அமைச்சரே துரோகி எனக் கைது செய்யப்பட்டார்.
மற்றைய நாட்டு இராணுவங்களை விட ரஷ்ய இராணுவத்தில் இறப்போர் தொகை மிக அதிகமாக இருந்தது. 40வீத இராணுவத்தினர் – இரண்டரை மில்லியனுக்கும் மேற்பட்டோர் மாண்டுபோயினர். இராணுவத்தினர் மத்தியில் தளபதிகள் மேலும், யுத்தத்தின் மேலுமான வெறுப்பு பரவியது. எது செய்தாவது யுத்த நிறுத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்ற அவா மேலோங்கியது. நொருக்கப்பட்டுக் கொண்டிருந்த மனித எலும்புகளுடன் பழமைவாத இறுக்கங்களும் நொருங்கிக்கொண்டிருந்தன.

யுத்தத்தின் ஆரம்ப காலத்தில் புரட்சிகர சக்திகள் பல இராணுவத்துக்குள் கரைந்துவிட்டிருந்தன. அதிருப்தி வளர இச்சக்திகள் மேலெழுந்தன. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பல தொழிலாளர்கள் தண்டனைக்காக யுத்தமுனைக்கு அனுப்பப்பட்டிருந்தனர். இதனாலும் இராணுவத்துக்குள் கிளர்ச்சிக்காரர்களின் தொகை அதிகரித்தது. அதே நேரத்தில் அரசு மன்னருடன் ஐக்கியப்பட்டது.
1905 புரட்சிக்குப்பின் உருவாகிய ரஷ்ய பாராளுமன்ற முறையான டூமாவில் முக்கிய கட்சியாக வீற்றிருந்த காடட்டுகள்(முயனநவள- ஊழளெவவைரவழையெட னுநஅழஉசயவள) இராணுவ தேசபக்தியின் முன்னுதாரணமாக விளங்கினர். 1905லேயே புரட்சியுடன் உடைத்துக் கொண்டுவிட்ட இவர்கள் ஏகாதிபத்தியத்தின் பதாகையை உயர்த்திப் பிடித்தனர். 1914ம் ஆண்டு யூலை 26ல் நடந்த டூமாவில் காடட் பிரிவு பின்வருமாறு அறிவித்தது ‘நாம் மன்னரிடம் எந்த நிபந்தனைகளையோ கோரிக்கைகளையோ வைக்கப்போவதில்லை. எதிரியை முறியடிப்பதற்கு நாம் எமது முழு உறுதியை வழங்குகிறோம்’ இவ்வாறு யுத்தத்துக்காகத் -தேசிய ஒற்றுமை- என்பது அதிகார பூர்வக் கொள்கையானது. இராணுவத் தொழிற்சாலை வளர்ச்சியின் மூலம் 1915ல் உருவாக்கப்பட்ட -நிலம் மற்றும் நகரச் சங்கம்- போன்ற தொழிலாளர்களை இணைத்த அமைப்புக்கள் கூட பூர்சுவாக்களின் வெற்றிக்கும் அதிகாரத்துக்கும் ஆதரவாக மாறின. இது போன்ற அமைப்புகளின் ஆதரவுடன் டூமா, பூர்சுவாக்களுக்கும் முடியாட்சிக்கும் இடையில் பரிந்துபேசும் சபையாக மாறி விட்டிருந்தது.
யுத்தத்தால் மக்கள் வறுமையில் வாடிக்கொண்டும் மோசமாக அடி வாங்கிக்கொண்டும் இருந்த அதே வேளை பல வியாபாரங்கள் லாபத்தைக் குவித்துக்கொண்டிருந்தன. போர்முனையில் தோல்விகள் பெருகிக் கொண்டிருந்த அதே வேளை போர் பின்முனையில் லாபங்கள் குவிந்துகொண்டிருந்தது. உதாரணமாக மொஸ்கோ டெக்ஸ்டைல் கொம்பனி 75 வீத லாபத்தையும் டிவர் கொம்பனி 111 வீத லாபத்தையும் ஈட்டியிருந்தன. இன்னுமொரு செப்பு வியாபாரம் 12 மில்லியன் லாபத்தை அள்ளிச் சென்றிருந்தது. லாபத்தின் பெருக்கத்தைச் சுவைத்தவர்களான பிரபுக்களும் மற்றும் பெரும் தளபதிகளும் பல கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். தெருவில் பாணுக்கு மோசமான தட்டுப்பாடு நிலவிய அதே நேரத்தில் அதிகூடிய விலையுடைய பொருட்கள் அமோகமாக விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. 1915ல் இருந்து 1916க்குள் வரலாறு காணாதளவு தொகை வைரங்கள் விற்பனையாகியிருந்தன. தான் இதுவரை காலமும் இப்படி ஒரு லாபத்தைச் சம்பாதித்ததில்லை என ஒரு நகைவியாபாரி அறிவித்துக்கொண்டான். யுத்தமுனையில் பின்வாங்குபவர்கள் மற்றும் தப்பி ஓடுபவர்கள் சுடப்பட்டுக் கொண்டிருந்த நேரம் ஜெனரல்கள் மன்னருடனும் டூமாவுடனும் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இந்தப் பின்முனை வீரர்கள் -சட்டமுறையில் ஓடித்தப்பியவர்கள்- மற்றும் -மதிப்புக்குரிய கனவான்கள்- யுத்தமுனைக்கு செல்ல முடியாத முதியோர்களாக நடித்தனர். ஆனால் கேளிக்கைகளில் ஈடுபடுவதற்கு மட்டும் அவர்களுக்கு வயதுப்பிரச்சினை இல்லாமல் இளமை கொண்டாடினர். இவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து காலம்முந்திய அமைதிப்பேச்சு என்ற வெட்கக்கேட்டைக் கடுமையாக எதிர்த்தனர்.

1915ல் யுத்தமுனைப்பின் ஆரம்பகாலத்தில் பிளவுபட்ட நிலையில் இருந்த டூமா யுத்தகாலத்தில் ஒற்றுமையாக மன்னர் பின்னால் திரண்டது. டூமாவில் தேசப்பற்றுப் பெரும்பான்மை உருவாக்கப்பட்டது.அதை அவர்கள் -முற்போக்குப் பிரிவு- என அழைத்துக் கொண்ட கேவலமும் நிகழ்ந்தது. அரசாங்கம் நல்லது அல்லது கெட்டது என்பதற்கு அப்பால் முன்னெப்போதும் இல்லாத அளவு தற்போது தேவையாக இருப்பது பலமான அரசாங்கம்- எனக் காடட்டுகளின் தலைவர் அறிவித்துக்கொண்டார். ரேட்சியான்கோ (சுழனணயைமெழ) தலைமையில் நம்பிக்கையுள்ள மந்திரிசபை ஆகஸ்டில் உருவாக்கப்பட்டது. இவ்வாறு புரட்சிக்கெதிராக முடியாட்சியின் பக்கபலமாயிருந்தவர்கள் தான் பின்பு உருவாகிய -புரட்சிகர அரசின-; உறுப்பினர்களாக உலாவந்து இன்னுமொரு பிரமை ஏற்படுத்த முயற்சித்தனர்.அது பற்றிப் பின்பு பார்க்கலாம்.

சமூகப் புரட்சிக்குப் பயத்தில் இவர்கள் சாருடன் கூத்தடிக்கத் தயாராகிய அதே வேளை சார் மன்னரும் அவரது நெருங்கிய ஆதரவாளர்களும் சேர்ந்து டூமாவுக்கு ஆப்பு வைத்தனர். செப்டம்பர் 3ம் திகதி டூமா மன்னரால் கலைக்கப்பட்டது. டூமா உறுப்பினர்களிடம் ஒரு எதிர்ப்பு ஒரு மூச்சு பேச்சுக் கிளம்பவில்லை. மாறாக ஒரு ‘வாழ்க’ போட்டுவிட்டு அவர்கள் கலைந்து போயினர். இக்கால கட்டத்தில் புரட்சிக்கான சாத்தியம் இல்லை என நம்பப்பட்டது. அந்த நம்பிக்கையில் டூமா கலைக்கப்பட்டதானது உண்மையில் பூர்சுவாக்களுக்கு விழுந்த முறையான அடி. ஆதை எதிர்கொள்ள அவர்களால் முடியவில்லை. பூர்சுவாக்களும் அவர்தம் பிரதிநிதிகளும் மன்னருக்கு ‘வாழ்க” பாட தொழிலாளர்கள் வேறுவிதமாக எதிர்வினையாற்றினர். மொஸ்கோ மற்றும் பொட்டோகிராட் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். அவர்களுக்கு யுத்த நிறுத்தம் தேவையாக இருந்தது. 1916ல் யுத்தம் வெற்றி பெற முடியாது என்பது தெட்டத் தெளிவாகிய பின்தான் யுத்த நிறுத்தப் பேச்சு தலையெடுக்கத் தொடங்கியது. ரஷ்யா தோற்கடிக்கப்பட்டால் அது மேற்கு நாடுகளின் காலனியாக இருக்கவேண்டியதுதான் -என்ற நிலை தோன்றத்தான் ரஷ்ய பூர்சுவாக்கள் தனிப்பட்ட முறையில் யுத்த நிறுத்தம் சார் சில நடவடிக்கைகள் எடுக்க முன்வந்தனர்.

நாட்டுக்குள் நெருக்கடி நிலை உச்சமடைந்து கொண்டிருந்தது. டூமாவின் முற்போக்குப் பிரிவினர் மீண்டும் பாராளுமன்ற பாசாங்கு காட்டும் தேவை எழுந்தது. 1916ம்ஆண்டு நவம்பர் 1ம் திகதி மீண்டும் டூமா கூட்டப்பட்டது. புதிய டூமாவின் உறுப்பினர்கள் சிலர் எச்சரிக்கைச் சொற்பொழிவுகளைச் செய்தது அவர்களுக்குப் புதிய பிரச்சினையை உருவாக்கியது. உடனடியாக டூமாவின் சொற்பொழிவுகள் பிரசுரிக்கப்படுவதற்கு தடை கொண்டுவரப்பட்டது. அந்தப் பிரச்சினைக்குரிய சொற்பொழிவுகள் பிரபலமடையவும் மில்லியன் கணக்கில் பிரதி செய்யப்பட்டு பரவவும் இது உந்துசக்தியாக இருந்தது. இந்தப் பிரதிகள் நேரடிப் பிரதியாக்கலாக இன்றி பிரதி செய்பவரின் மனநிலைக்கேற்ப மாற்றி எழுதப்பட்டு பரவி மக்கள் மத்தியில் பற்றிப் பரவவிடப்பட்டது.

இத்தருணத்தில் -கறுப்பு நூறுபேர்- (டீடயஉம ர்ரனெசநனள) என்ற மிக மோசமான வலதுசாரிய –முடியாட்சிக்கான அமைப்பு மிகப் பலப்பட்டதாக இருந்தது. அவர்கள் மன்னரின் நிலைப்பாட்டை அமுல்படுத்த கடுமையாகப் போராடினர். டூமாவுக்குள் இருந்த காடட்டுகளை அவர்கள் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. மோசமான வலதுசாரிகளாயிருப்பினும் ஆபத்து எங்கிருக்கிறது என்பதைக் காடட்டுகளை விட அவர்கள் நன்றாக அறிந்திருந்தனர். ‘பொல்ஷிவிக்குகளிடம் ஒரு கொள்கை உண்டு.பணம் உண்டு(!)ஒருங்கிணைந்த ஆட்பலம் உண்டு. அதனால் அவர்கள் ஆபத்தானவர்கள”; என அவர்கள் எழுதினர். இவர்களிற்; பலர் காவற்துறை அதிகாரிகள் அல்லது அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் – துப்பறிவாளர்களின் தகவல்கள் இவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தன. பொல்சிவிக்குகளிடம் பணம் உண்டு எனக் கருதியதை விட ஏனைய கணிப்புகளைச் சரியாகவே செய்திருந்தனர். அவர்கள் பயந்தது போலவே நிகழ்ந்தது. 1917ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் திகதி கடைசி டூமா கூடியது. ஊர்வலங்கள் பேரணிகள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டதால் அமைதியாக ஒன்று கூடிய டூமா அவற்றுக்குத் தடையுத்தரவு பிறப்பித்தது. ஆனால் ரஷ்யா புரட்சிக்குள் நுழைந்தது.

About T

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top