1917ல் நடந்த ரஷ்யப் புரட்சிக்கு முந்திய சார் மன்னர் காலத்து இரஸ்யா பல வகைகளில் ஒரு பின் தங்கிய நாடாக இருந்தது. முதலாளித்துவ அபிவிருத்தி நாடுகளான மேற்கத்தேய நாடுகளுக்கும் ஆசிய உற்பத்திமுறை நாடுகளான சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கும் நடுவில் இருந்த ரஷ்யா கலாசார மற்றும் சமூக ரீதியாகவும் இந்த நடுநிலையைப் பிரதிபலித்தது எனச் சொல்லலாம்.
இருப்பினும் மேற்கத்தேய நாடுகளின் பொருளாதாரத்தாலும் இராணுவ நடவடிக்கைகளாலும் பலத்த அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்தது ரஷ்யா. முழுமையடையாத ரஷ்ய நிலப்பிரபுத்துவம் மேற்கத்தேய முதலாளித்துவ வளர்ச்சியின் செல்வாக்குக்குள்ளாகி அந்த வழியைப் பின்பற்றும்படியான அழுத்தத்துக்குள்ளாகியது. இத்தகைய அழுத்தத்துக்குள்ளாகும் பின்தங்கிய நாடுகள் அபிவிருத்தியை நோக்கி நகர்வது ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்தது போன்ற அபிவிருத்தியின் அதே பாணியில் நிகழ்வதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
வில்லுடனும் அம்புடனும் திரிந்தவர்கள் துப்பாக்கி என்ற ஆயுதத்துக்கு அறிமுகமான கையுடன் உடனடியாக அந்தப் பலமான புதிய ஆயுதத்துக்கு தாவுவது போல் பின்தங்கிய நாடுகளின் வளர்ச்சித் தாவல் நிகழ்கிறது. அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் காலனித்துவத்தை தொடங்கியபின் அவர்கள் படிமுறை வளர்ச்சியில் முதலாளித்துவத்தை நோக்கி நகரவில்லை. மாறாக முதலாளித்துவத்துக்கான நேரடித் தாவல் நிகழ்ந்தது. பினதங்கிய நாடுகளின் வளர்ச்சி விசேட முறையில் – பல வளர்ச்சிக் கால கட்டங்களை இணைத்த தாவல் முறையான வளர்ச்சியாக நிகழ்கிறது. ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்தது போல் நிலப்பிரபுத்துவம் – பின் அதில் ஏற்பட்ட மாற்றங்கள் – முதலாளித்துவத்தின் ஆரம்பம் – சனநாயகப் புரட்சி -முதலாளித்துவத்தின் வளர்ச்சி-ஏகாதிபத்திய தோற்றம் – என ஒவ்வொரு வரலாற்றுக் கால கட்டங்களையும் தாண்டித்தான் பின்தங்கிய நாடுகளில் வளர்ச்சி ஏற்படும் எனச் சொல்வது தவறு. அபிவிருத்தி அடைந்த நாடுகளின் அழுத்தத்துக்குள்ளாகிய நாடுகள் பல கட்டங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியதாகிறது. அதே சமயம் வரலாற்றுக் கட்டங்களைத் தாண்டிய குமிந்த வளர்ச்சி மட்டுமே பின்தங்கிய நாடுகளில் நிகழும் எனவும் அடித்துச் சொல்லிவிட முடியாது. ஒரு நாட்டின் கலாசார மற்றும் பொருளாதார நிலமைகளுக்கேற்ப வரலாற்றுக் கட்டங்களுக்கூடாகச் செல்லுதல் அல்லது தாவுதல் நிகழும்.
ரஷ்யாவில் முதலாம் பீட்டர் என்ற சார் மன்னனின் கீழ் பண்ணை முறை பலப்பட்டிருந்தது. அதே சமயம் ஐரோப்பிய இராணுவம் மற்றும் கடன் உதவிகள் மூலம் சார் மன்னர் தன் பலத்தைப் பெருக்கக்கூடியதாக இருந்தது. இவ்வாறு மன்னர் பலப்பட்டிருந்தது நாட்டுக்குள் அபிவிருத்தி ஏற்படுவதற்கு ஒரு தடையாக இருந்தது. அதே சமயம் வெளி அழுத்தங்கள் மூலம் அபிவிருத்திக்கான உந்துதலும் அது நிகழ்வதும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. இது சமமற்ற முறையிலான வள்ர்ச்சி எற்படுவதற்கு காரணமாகியது. அதாவது சில இடங்களில் அபிவிருத்தியும் சில இடங்களில் மிகவும் பிந்திய பகுதியாகவுமாக – சமாந்தரமற்ற வளர்ச்சி- ஏற்பட்டது. ஒரு பக்கம் சமமற்ற வளர்ச்சி மறு பக்கம் வரலாற்றுத் கட்டங்களை தாவிய கூட்டு வளர்ச்சி என்ற நிலையில் வளர்ச்சி ஏற்பட்டது. இதையே ட்ரொட்ஸ்கி சமமற்ற மற்றும் கூட்டு வளர்ச்சி (ரநெஎநn யனெ உழஅடிiநென னநஎநடழிஅநவெ) எனக்குறிப்பிடுவார்.
ஐரோப்பிய செல்வாக்கில் பலப்பட்ட சார் மன்னர் ஆட்சி ஒரு பக்கம் மக்களை மேலதிக வறுமைக்குள் தள்ளியது மறு பக்கம் முதலாளித்துவ வர்க்கம் பலப்படுவதற்கும் தடையாக இருந்தது. இதனால் சொத்துகளைத் திரட்டிக்கொண்டிருந்த வர்க்கம் அதன் முழுமையை அடைய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அதே சமயம் ஐரோப்பியாவில் இருந்தது போலன்றி ரஷ்ய மரபுக் கிறிஸ்தவ ஆலயங்கள் அரசுடன் இணைந்த பலம்பொருந்திய நிறுவனமாக இயங்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இதனால் செல்வம் பெருக்கும் வர்க்கம் தன்னைப் பலப்படுத்திக்கொள்ள முறையான வேறு சக்திகளின் துணையின்றி பலவீனப்பட்டிருந்தது. தவிர மேற்கில் இருந்தது போல் வர்த்தக நகரங்கள் ரஷ்யாவுக்குள் இருக்கவில்லை. ரஷ்யக் கிராமங்களுக்கும் ஐரோப்பிய நகரங்களுக்கும் இடையிலான தொடர்பாடல் செய்பவர்களாக இயங்கி வந்தனர் ரஷ்ய வர்த்தகர்கள். இதனால் அரசு மற்றும் தேவாலயங்களுக்கெதிரான எதிர்ப்புகளை விவசாயக் குழுக்கள் செய்யும் கட்டத்தைத் தாண்டிச் செல்ல முடியவில்லை.
ரஷ்யப் புரட்சிக்கு 15 வருடங்களுக்கு முன் கசாக்குகளின் இயக்க எழுச்சி நடந்தேறியது. புகச்சேவ் கிளர்ச்சி (Pரபயவஉhநஎ சுநடிநடடழைn) என்றழைக்கப்படுகிறது இக்கிளர்ச்சி. அக்கால கட்டத்தில் தொழிலாளர்களின் வளர்ச்சியும் பங்களிப்பும் இல்லாததால் இக்கிளர்ச்சி புரட்சி நோக்கி நகரமுடியாமற் போனது. விவசாய எழுச்சிகள் புரட்சி நோக்கி நகர்வது கடினம். பாட்டாளி மக்களின் பங்களிப்பின்றி புரட்சியைத் தனியே நிறைவேற்றும் சக்தி விவசாயிகளுக்குக் கிடையாது. ஐரோப்பிய கலாசார மற்றும் பல்வேறு அழுத்தங்களுக்குள்ளான நிலையில் முற்போக்கு நிலப்பிரபுக்கள் கிளர்ச்சியில் தொழிலாளர் வகிக்கும் பங்கை நிரப்ப முயன்றனர். தொழிற்சாலைகளை சொந்தமாக்கிக்கொண்ட நிலப்பிரபுக்கள் தான் பண்ணை அடிமை முறையில் இருந்து ஊதிய உழைப்பு முறையை முதன் முதலாக அறிமுகப்படுத்தினர். ஒரு வர்க்கத்தின் கடமையை இன்னொரு வர்க்கம் நிறைவேற்ற வேண்டிய நிலமை கூட்டு வளர்ச்சி நிலமையின் ஒரு பங்காக இருப்பதையும் நாம் இங்கு அவதானிக்க வேண்டும்.
ரஷ்ய தொழில் மயப்படுத்தல் ஒரு வகைத் திணிக்கப்பட்ட முறையில் நடந்தது. அதனால் ஒரு கட்டத்தில் அது மிகவும் வேகமாக நடந்தேறியது. 1905ல் நடந்த முதற் புரட்சியின் காலத்தில் இருந்து முதலாம்உலக யுத்தம் ஆரம்பித்த காலத்துக்குள் தொழில் வளர்ச்சி இரண்டு மடங்காகப் பெருகிவிட்டது. இருப்பினும் அமெரிக்கா முதலிய நாடுகளில் இருந்தது போன்ற வளர்;ச்சி இங்கு நிகழவில்லை. இக்கட்டத்திலும் நான்கில் ஐந்து வீதமான மக்கள் விவசாயத்தில் தான் ஈடுபட்டு வந்தனர். ரஷ்ய வளர்ச்சி மிகவும் குவிந்த (ஊழnஉநவெசயவநன) முறையில் நிகழ்ந்தது. 100 பேர்கள் வரை வேலை செய்த தொழிற்சாலைகளை விட 1000ம் பேருக்கு மேல் வேலை செய்த தொழிற்சாலைகள் தான் அதிகளவில் உருவாகின. 1914ல் அமெரிக்காவில் 100 பேர்கள் வரை வேலை செய்த வேலைத் தளங்கள் 35 வீதமாக இருந்தது. இது ரஷ்யாவில் 17.8 வீதமாக இருந்தது. ஆனால் 1000 பேருக்கு மேல் வேலை செய்த பெரும் தொழிற்சாலைகள் அமெரிக்காவில் 17.8 வீதமாக இருக்க ரஷ்யாவில் அது 41.4 வீதமாக வளர்ச்சியடைந்திருந்தது. வேகமாக தொழில்மயப்பட்டுக் கொண்டிருந்த நகரங்களில் இந்த வீதம் மேலும் அதிகமாக இருந்தது. உதாரணமாக பெட்ரோகிராட்டில் இது 44.4 வீதமாகவும் மொஸ்கோவில் 57.3 வீதமாகவும் இருந்தது. பிரித்தானியா ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் அமெரிக்காவினைப் போன்ற வளர்ச்சிதான் நிகழ்ந்திருந்தது. பின்தங்கிய நாடான ரஷ்யாவில் -குவிந்த- வளர்ச்சி காரணத்தால் தான் இத்தகைய வளர்ச்சி ஏற்பட்டிருந்தது.
இந்த குவிந்த வளர்ச்சியால் முதலாளித்துவ தலைவர்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் இடையில் அடுக்கதிகார (ர்சையசஉhல) நிலைகள் இருக்கவில்லை. இதனாற் தான் ரஷ்ய முதலாளிகள் அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டும் மக்கள் மத்தியில் ஆதரவற்றவர்களாகவும் விளங்கினர். தவிரப் பெரும்பான்மை தொழிற்சாலைகள் ஐரோப்பிய சந்தையின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஏறத்தாள 40 வீதத்திற்கும் மேற்பட்ட மூலதனம் வெளிநாட்டவர்களுக்குச் சொந்தமாக இருந்தது.
இத்தகைய வளர்ச்சியால் – அதாவது ஐரோப்பிய முறையான படிப்படியான வளர்ச்சி போலன்றி – ரஷ்ய தொழிலாள வர்க்கம் திடீர் வளர்ச்சிக்குள்ளானது. பழமைகளை திடீரென முறித்துக்கொண்டு அவர்கள் வளரவேண்டியிருந்தது. இதனாலும்தான் தெளிவான புரட்சிகர முடிவுகளை நோக்கி ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் நகரக்கூடியதாக இருந்தது. இக்கால கட்டத்தில் ரஷ்யாவில் 150 மில்லியன் மக்கள் வாழ்ந்து வந்தனர். இதில் 3 மில்லியனுக்கு மேற்பட்டோர் பெட்ரோகிராட்டிலும் மொஸ்கோவிலும் வாழ்ந்து வந்தனர். பெருந்தொகை மக்கள் தொழிற்சாலைகளை நோக்கி இந்த நகரங்களுக்கு நகர்ந்ததை அவதானிக்கவேண்டும்.
ஆங்கிலேயப் புரட்சி நடந்த காலத்தில் இங்கிலாந்தின் ஒட்டுமொத்த சனத்தொகையே ஐந்தரை மில்லியன்களாக இருந்தது பிரஞ்சுப் புரட்சி நடந்த காலத்தில் பிரான்சின் சனத்தொகை 25 மில்லியன்களாக இருந்தது. இதில் அரை மில்லியன் மக்கள்தான் பாரிசில் வாழ்ந்து வந்தனர். ரஷ்யாவில் துரித கதியில் நிகழ்ந்து கொண்டிருந்த வர்க்கப்பிளவை மேற்கண்ட தரவுகள் சுட்டி நிற்கின்றன.
1905ல் ரஷ்யாவின் ஒட்டுமொத்தத் தொழிலாளர்கள் 10 மில்லியன் வரை இருந்தனர். அவர்கள் குடும்பங்களையும் சேர்த்துக்கொண்டால் 25 மில்லியன் எனச் சொல்லலாம். 1905ல் நடந்த புரட்சி 1917ம் ஆண்டு புரட்சி நடப்பதற்கான வெள்ளோட்டமாக இருந்தது 1917ல் பெப்ரவரி மற்றும் அக்டோபரில் நடந்த இரு புரட்சிகளின் போதும் இருந்த பல பண்புகளை 1905லேயே அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 1905ல் சில காயங்களுடன் சார் ஆட்சி தப்பி விட்டது. ஆனால் அதன் பிறகு வந்த 11 வருட காலத்தில் ரஷ்ய முதலாளித்துவ வர்க்கம் தன்னை மேலும் பலப்படுத்திவிட்டது. 1917ல் பலமான முதலாளிகள் சார் மன்னனைத் தூக்கி எறியத் திட்டவட்டமான முயற்சிகளுக்குத் தயாராக இருந்தனர். ஆனால் அதே சமயம் முக்கியமான பலமான சக்தியாகத் தொழிலாளர்கள் வளர்ந்து விட்டிருந்தனர்.
ஆரம்பத்தில் ரஷ்யப் புரட்சி சனநாயக
புரட்சியாகவே இருந்தது. இருப்பினும் ஐரோப்பியாவில் நிகழ்ந்தது போலன்றி இது புதியவகை அரசியல் சனநாயக முறையாகவிருந்தது.